Friday, March 28, 2008

பழைய்ய்ய்ய காரை யாராவது வாங்குவாங்களா?

"மாப்ளே, கார் வாங்கிட்டேன்டா!!!"...
"அப்படியாப்பா, கலக்கறே போ... எப்போ ட்ரீட்"?.. இது நான்.

"இன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு வா, நம்ம நண்பர்கள் எல்லாரையும் கூப்பிட்டிருக்கேன். சாப்பிட வந்துரு".

சுரேஷ் என் நண்பன். 2 மாதங்களாக அமெரிக்கா வாசம். இப்போதுதான் கார் வாங்கியிருக்கிறான்.
"சுரேஷ், என்ன மாடல் கார்? எவ்ளோ ஓடியிருக்கிறது? எவ்ளோ காசு?"

"ஒவ்வொண்ணா கேள்றா. கார் கொஞ்சம் பழசுதாண்டா... 25 வருஷம் பழைய மாடல்"...

"என்னது? 25 வருஷம் பழைய மாடலா? அதை ஏண்டா வாங்கினே?"

"அதை வித்தவனும் எனக்கு தெரிஞ்சவந்தாண்டா.. அவனை நம்பித்தான் வாங்கினேன்."

"அது சரி... காரோட வரலாறைப் பாத்துதானே வாங்கினே? ஒண்ணும் பிரச்சினையில்லையே"?

"வரலாறையெல்லாம் பாத்துதாண்டா வாங்கினேன். ரெண்டே ரெண்டு விபத்துதான். அதுவும் வேறே ஒருத்தனாலே ஆன விபத்துகள்தான். அதுதான், தைரியமா வாங்கிட்டேன்."

"சரி, காசு எவ்ளோ கொடுத்தே? ரொம்ப கம்மியான விலையிலேதானே வாங்கினே?"

"ஆமாடா.. பத்தாயிரம் சொன்னான். நாம் ஒண்ணும் பேரம் பேசலே.. ஒரே செக்கா கொடுத்துட்டேன்."

"என்னது? பத்தாயிரமா? பயங்கரமா ஏமாந்திருக்கேடா?...என்ன கார் சொன்னே? ஏதாவது பிரச்சினை வந்தாக்கா சரி செய்யவாவது ஆளிருக்குமா இந்த ஊர்லே?"

"இல்லை. என்ன பிரச்சினை வந்தாலும், அவனோட ஆளு வந்துதான் சரி செய்யணும். இன்னிக்கு கார் வாங்கினவுடனேயே ஒரு பிரச்சினை வந்திடுச்சு. அவன் அடுத்த வாரம் ஆள் அனுப்பி சரி செய்து தர்றேன்னு சொல்லியிருக்கான்."

"இவ்ளோ நடந்திருக்கு. ஆனா, எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லையே... சரி.. உன் மனைவிக்காவது இதெல்லாம் தெரியுமா?"

"இல்லை. அவளுக்கு முழுசா தெரியாது."

"நீ பண்ணது கொஞ்சம் கூட நல்லாயில்லே. இரு. சாயங்காலம் வந்து நான் எல்லாத்தையும் உன் மனைவிக்கும் நம் மத்த நண்பர்கள் கிட்டேயும் சொல்லிடறேன்".

"வேணாடா.. தயவு செய்து அப்படி எதுவும் செய்துடாதே.. நீ வேறே எதுவேணா சொல்லு.. நான் கேட்கறேன். இதை மட்டும் என் வீட்டுலே சொல்லிடாதே. அப்புறம் மாட்டிக்கறது நாந்தான்".

"இந்த பயம் முன்னாடியே இருந்திருக்கணும். நான் இதை சொல்லியே ஆகணும். வர்றேன்".

"சரி.. நீ இதை என் மனைவிக்கிட்டே சொல்லு.. நான் உன்னுடைய 'அந்த' விஷயத்தை உன் மனைவிக்கிட்டே சொல்லிடறேன்".

"ஆ.. வேணாண்டா.. இப்போதான் நானும் என் மனைவியும் 'அந்த' விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வர்றோம். நீ வேறே எங்க நடுவிலே ' நந்தி' மாதிரி வந்து காரியத்தை கெடுத்துடாதே... சரி.. நானும் எதுவும் சொல்லலே... நீயும் எதுவும் சொல்லாதே... ஓகேவா... போனை வெச்சிடறேன்.. பை".

பி.கு: இந்த கதைக்கு மூலம் இதுதான். சுரேஷ் மற்றும் நான் யார் என்பது உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP