Saturday, March 8, 2008

ஒரு நடிகையின் மனம் திறந்த பேட்டி - பேட்டி காண்பவர் கவுண்டமணி

மகாஜனங்களே, சின்ன பெண்களே, வயசானவங்களே எல்லாருக்கும் வணக்கமுங்கோ - நாந்தான் ஷில்பாகுமார். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இன்னிக்கு நாம ஒரு நடிகையோட பேச போறோம். அவங்க யாருன்னு நான் என் வாயால சொல்லமாட்டேன். நீங்களே பாத்துக்குங்க.


வாங்க.. காந்தக் கண்ணழகி, செந்தூரப் பொட்டழகி... நீங்க எப்படி இருக்கீங்கன்னெல்லாம் நான் கேக்க மாட்டேன். நீங்க நல்லாத்தான் இருப்பீங்க.. அதனால, நாம நேரா பேட்டிக்கு போய்டுவோம்.. இல்லேன்னா இந்த மக்கள் டிவியை பிராண்ட ஆரம்பிச்சுடுவாங்க...


ஆமா, இப்போ எந்த படங்களிலே நடிச்சிக்கிட்டிருக்கீங்க?
எவ அவ..


அடங்கொக்கமக்கா. யாரப்பாத்து என்ன கேள்வி கேட்டே?
அதில்லேங்க... நான் இப்போ நடிக்கப்போற படத்தோட பேரு... எவ அவ... நல்ல தமிழ் பெயர் இல்லே..


ஆமா ஆமா. இல்லையா பின்னே.. தூய தமிழ் பேர்தான். வரி விலக்கு கண்டிப்பா உண்டு... ஆமா, இந்த படத்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.
இது ரொம்பவே வித்யாசமான கதை.


அதுதான் எல்லா படத்துக்கும் சொல்றாங்களே. இதிலே என்ன அப்படி வித்தியாசம்னு சொல்லுங்க.
இதிலே ஒரு ஹீரோ. ஆனா அவர் ஹீரோ இல்லை. ஒரு வில்லன். ஆனா அவர் வில்லன் இல்லை. எனக்கு அப்பாவா ஒருவர் வர்றாரு. ஆனா அவர் அப்பா இல்லை. ஹீரோவுக்கு நண்பனா ஒருத்தர் வர்றாரு. ஆனா அவர் நண்பன் இல்லை. இப்படி பல வித்தியாசங்களை கொண்டது இந்த கதை.


ரொம்ப நல்லாயிருக்கு கதை. சுவாரசியமா இருக்கும் போல இருக்கே?
ஆமா. பல திருப்பங்களை கொண்டது. திருப்பதி மலைப் பாதை மாதிரி ஒரு செட் போட்டு - படம் முழுக்க அங்கே எடுக்கப்போறாங்க. அதனால படம் முழுக்க பல திருப்பங்கள் இருக்கும்.


இந்த படத்திலே நீங்க நடிப்பீங்களா.. இல்லே இந்த மாதிரியே அழகா சிரிச்சிக்கிட்டே இருப்பீங்களா?
படத்திலே எனக்கு முக்கிய கேரக்டர். நாந்தான் ஒரு பெரிய திருப்பத்தை உண்டாக்குறேன்.


திருப்பம்னா... சும்மா இப்படி.. இல்லே இப்படி.. திரும்பிக்கிட்டே இருப்பீங்களா? (திரும்பி காட்டுகிறார்).
ஹீரோவை வில்லன் துரத்திக்கிட்டு வரும்போது, நான் ஒரு தெரு முனையில் நின்று கொண்டிருப்பேன். என்கிட்டே, ஹீரோ எங்கேன்னு வில்லன் கேட்கும்போது, நான் நேரா கைகாட்டாம வில்லனை திருப்பி விட்டுடுவேன். நான் மட்டும் அந்த திருப்பத்தை ஏற்படுத்தலைன்னா, படம் பத்தே நிமிஷத்திலே முடிஞ்சிருக்கும்.


ச்சே.. பத்து நிமிஷத்திலே படம் முடிஞ்சிருந்தாக்கா, மக்கள் வீட்டுக்குப் போயாவது நிம்மதியா இருந்திருப்பாங்க... அது சரி, பாடல்கள் எல்லாம் ரொம்ப பிரம்மாண்டமா வந்திருக்குன்னு பேசிக்கறாங்களே?

பிரம்மாண்டம் மட்டுமில்லை, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்போறாங்க.

மாறுபட்ட கோணம்னா, எல்லாமே தலைகீழெ இருக்குமா?

ச்சீ.. நீங்க ரொம்ப தமாஷா பேசறீங்க.. இந்த படத்திலே எல்லா பாட்டும் 'டாப் ஆங்கிள்'ல தான் இருக்கப்போது. எல்லாமே மேலேருந்து பாக்கபோறீங்க.

அப்படியே மேலெருந்து குதிச்சிடலாம் போல இருக்கு... வாவ். ரொம்ப நல்லா இருக்கும் போல இருக்கே!!!

இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி, இன்னும் க்ளைமாக்ஸ பத்தி நான் பேசவே இல்லையே?

ஓ, இந்த படத்தில க்ளைமாக்ஸ் வேறெ இருக்கா?. அதைப் பத்தியும் சொல்லுங்க பாப்போம்.

க்ளைமாக்ஸ் ரொம்ப அதிர்ச்சியானது.

ஏன், க்ளைமாக்ஸ் படத்து பாதியிலேயே வந்துடுதா? இல்லே படத்திலே க்ளைமாக்ஸே இல்லையா?

அதில்லைங்க, வில்லனை ஹீரோ கொல்றதுக்கு பதிலா, ஹீரோவை வில்லன் கொன்னுடுவான். ஏன்னா, அவன் வில்லன் கிடையாது, இவன் ஹீரோ கிடையாது.

கொன்னுட்டீங்கோவ்.. படம் முடிஞ்சு வரும்போது எல்லோரும் தலையை பிச்சிக்கிட்டுதான் வருவாங்கன்னு சொல்லுங்க. ஆமா. இந்த படத்தை யாரு தயாரிக்கறாங்க?
பாருங்க. இவ்ளோ நல்ல படத்துக்கு டைரக்டர் மற்றும் எல்லா கலைஞர்களும் கிடைச்சுட்டாங்க.. ஆனால் தயாரிப்பாளர் மட்டும் தான் கிடைக்கவே மாட்டேன்றாங்க.. ஏன் சார், ஒரு ஐடியா..


என்ன, நாம ரெண்டு பேரும் எங்கேயாவது ஓடிப்போய்டலாமா?
அது இல்லீங்க, பேசாம நீங்களே இந்த படத்தை தயாரிங்களேன். உங்களுக்கு ஒரு அவார்ட் கிடைக்கும்.


வேண்டாம்மா, இந்த டகால்டி வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். என்னை விட்டுடு. நான் இன்னும் கொஞ்ச நாள் தமிழ்நாட்லதான் இருந்தாகணும். நான் இங்கே வந்ததாகவோ, நீ எனக்கு பேட்டி கொடுத்ததாகவோ ஒரு சம்பவம் நடந்ததாகவே நெனெக்காதே. ஒரு கெட்ட கனவா நெனெச்சி மறந்துடு. நான் வர்றேன். நாராயணா, இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா...


இந்த பேட்டியை பாக்குற மக்களே, இந்தம்மா நடிக்கப்போற படத்தை இனிமேலும் யாராவது பாத்தீங்கன்னா, அதோட பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை. சொல்லிட்டேன்... நான் வர்றேன்.

8 comments:

துளசி கோபால் March 10, 2008 at 6:43 PM  

:-)))))

சிரிப்பு மாதிரி:-)

கோவி.கண்ணன் March 11, 2008 at 8:51 AM  

:))))

கவுண்டர் டயலாக்ஸ் நன்றாக இருக்கு !

கோவி.கண்ணன் March 11, 2008 at 8:51 AM  

:))))

கவுண்டர் டயலாக்ஸ் நன்றாக இருக்கு !

சின்னப் பையன் March 11, 2008 at 12:00 PM  

வாங்க துளசி மேடம், அதான் நானே சொல்லிட்டேனே 'லேபிளில்'.... நன்றி...:-)

வாங்க கோவி.கண்ணன், நன்றி...:-)

cheena (சீனா) March 14, 2008 at 8:28 PM  

என்ன மறுமொழி போடுறது இதற்கு

SP.VR. SUBBIAH March 16, 2008 at 4:58 AM  

துளசி டீச்சர் சொன்னதுதான் சரி!

சிரிப்பு மாதிரி:-)

சின்னப் பையன் March 16, 2008 at 11:23 AM  

cheena (சீனா) -> வாங்க... நன்றி..

மங்களூர் சிவா, சுப்பையா ஐயா -> என்ன இப்படி சொல்லிட்டீங்க... :-(. சரி விடுங்க. அடுத்த தடவை பாப்போம்....:-)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP