எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!
சனி, ஞாயிறுன்னா எங்க வீட்டுலே ரெண்டுதாங்க... அதனாலெ, இப்போல்லாம் என்னாலே முடியவேயில்லை.. ஆனால் என்ன பண்றது. தங்கமணியின் தொல்லை தாங்கமுடியலேன்னு பொறுத்துண்டு போறேன்.
என்னோட எல்லா நண்பர்கள் கிட்டேயும் கேட்டுப் பாத்துட்டேன். அவங்க வீட்டுலேயும் வார இறுதியின்னா ரெண்டுதானாம். அவங்களும் அவங்கவங்க தங்கமணிகளின் தொல்லை தாங்கமுடியலேன்னு சொல்றாங்க.
அதனால், இப்போல்லாம் வார இறுதி வருதுன்னாலே, ரொம்ப பயமா இருக்குது. ரெண்டு, ரெண்டுன்றேனே அப்படின்னா என்னன்னு கேக்க மாட்டீங்களா?
கீழே இருக்கறதயும் படிங்க... இப்படியெல்லாம் யாரு சொல்வாங்கன்னு உங்களுக்கு சந்தேகம் வராதுன்னு நெனெக்கிறேன்.
1. எங்க அப்பா, அம்மாக்கு திருமண நாள் வருது. தங்க காசு ஏதாவது வாங்கி தரணும்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?
2. ஒரு வேளை இந்த வருஷமே என் தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமாயிட்டா, மூத்த மாப்பிள்ளையா நீங்க என்ன செய்றதா இருக்கீங்க?
3. வாரம் முழுக்க ஆபீசுக்குப் போயிடறீங்க. வார இறுதியிலாவது எங்க கூட கொஞ்சம் பேசக்கூடாதா? அப்படி என்ன அந்த கம்ப்யூட்டர்லே இருக்குதோ?
4. இந்த வாரம் கண்டிப்பா முழு நாளும் வெளியே போறா மாதிரி ஏதாவது ஒரு இடம் பிடிங்க.
இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமுடியும்னு நெனெக்கிறீங்க? அப்படி ஏதாவது பதில் சொல்லிட்டாக்கூட, அது அடுத்தடுத்த கேள்விகளுக்கு அடிப்படையா அமையும்னு புரிஞ்சிக்க கொஞ்ச நாளாயிட்டது எனக்கு.
அதனால, சனி, ஞாயிறுன்னா எப்பவுமே எங்க வீட்டுலே ரங்கமணியாகிய நான், அந்த ரெண்டையும் மூடிக்கிட்டு உக்காந்திருப்பேன்னு சொல்ல வந்தேன். அப்படி நான் மூடலேன்னா, வீடு ரெண்டாயுடும்னு நான் சொல்லலேன்னா உங்களுக்குத் தெரியாதா என்ன?
பிகு: ரெண்டு போட்டிக்கான எனது முதல் பதிவு இது..
5 comments:
:))
வாங்க இளா, நன்றி...
ஆஹா...
எப்படி ரூம் போட்டு யோசிப்பீங்களோ???
ஆமாங்க வெட்டி... அதுக்குத்தானே ஆபீசுலே ரூம் போட்டு குடுத்திருக்காங்க....:-))))))))))))))
அதுக்குத்தானே ஆபீசுலே ரூம் போட்டு குடுத்திருக்காங்க....
:-))))))))))))))
Post a Comment