Sunday, April 6, 2008

கர்நாடகத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் எதையெல்லாம் நிறுத்தலாம்???

டாஸ்மாக் மது விற்பனை:

அரசு விளக்கம்: தமிழகத்தில் எல்லோரும் குடித்துவிட்டு கர்நாடகத் தலைவர்களை கண்டபடி பேசுகின்றனர். இதனால், அவர்களுக்கு தேர்தலில் கவனம் செலுத்தமுடியாமல் போகிறது. அதனால், எஸ்.எம்.கிருஷ்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த தேர்தல் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூடுமாறு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தொலைக்காட்சித் தொடர்கள்:

அரசு விளக்கம்: கர்நாடகத்தில் இருக்கும் தமிழர்கள் எப்போதும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துக்கொண்டே இருப்பதால், தேர்தல் கூட்டங்களுக்கு வருவதேயில்லை. அதனால், தேர்தல் முடியும்வரை அனைத்துத் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களையும் நிறுத்துமாறு, குமாரசாமி கேட்டுக்கொண்டதால், அதை தமிழக அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.

தினசரி, வாரப் பத்திரிக்கைகள்:

அரசு விளக்கம்: தமிழகத்தில் இருக்கும் தலைவர்கள் பேசுவதெல்லாம், இந்தப் பத்திரிக்கைகள் பெரிதாக வெளியிட்டு பிரச்சினைகளை மேலும் வளர்க்கின்றனர். அதனால், கர்நாடகத்தில் தேர்தல் நேரத்தில் குழப்பம் உண்டாகிறது. அதனால், அங்கு தேர்தல் முடியும்வரை அனைத்து தமிழக பத்திரிக்கைகளையும் நிறுத்தவேண்டும் என்று நாகராஜ் கேட்டுக்கொண்டதால், தமிழக அரசும் செவி சாய்த்துள்ளது.

மின்சாரம்:

அரசு விளக்கம்: கர்நாடகா தேர்தல் காரணமாக அங்கு தலைவர்கள் தினமும் பொதுக்கூட்டங்களில் பேசுகின்றனர். அதற்கு அவர்களுக்கு நிறைய மின்சாரம் தேவைப்படுகிறது. நெய்வேலியிலிருந்து அவர்களுக்கு மின்சாரம் தேவைப்படுவதால், தமிழக மக்கள் அவர்களது மின்சாரத் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசும் அதற்கிணங்கி, மே மாதம் முழுவதும் தமிழகத்தில் மின்சாரத்தை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

அரசு வேண்டுகோள்:
இன்னும் எதையெல்லாம் நிறுத்தலாம் என்று அரசு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இது வெறும் கற்பனைதாங்க!!! எப்படியிருக்குன்னு சொல்லிட்டுப் போங்க...


13 comments:

வால்பையன் April 6, 2008 at 9:39 AM  

முதல்ல உம்ம பதிவு போடறதா நிறுத்த சொல்லனுமையா

வால்பையன்

சுரேகா.. April 6, 2008 at 9:42 AM  

பின்றீங்க!

இதை நான் யோசிச்சு வச்சிருந்தேன்,
பரவாயில்ல..! :)

கலக்கலா வந்திருக்கு!

Anonymous,  April 6, 2008 at 9:45 AM  

தேசத்தின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் காப்பதற்காகத்தான் என்று கலைஞர் தெளிவாக சொல்லிவிட்டார்.
ஒரு மாதம் காத்திருப்பது ஒன்றும் தவறில்லையே. பாரதத்தின் புத்திரர்கள் நாம் சண்டையிட்டால் எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடாதா. நாம் வல்லரசாக வீர நடை போட வேண்டாமா?

பாரத் மாதா கீ ஜே.

Anonymous,  April 6, 2008 at 10:31 AM  

Very good

பினாத்தல் சுரேஷ் April 6, 2008 at 10:31 AM  

இது அநியாயம்..

இது அறிவுத் திருட்டு!

பெனாத்தலாரின் மேல்மாடியில் உதித்து ப்ளாஷாக உருவாகிவந்த திட்டம் உருவாகுமுன்னே திருடப்பட்ட மாயம் என்ன!!!

(இல்லாத பொருளை எல்லாம் திருடறதில்லை - ன்ற பதிலை மட்டும் தடை செய்கிறேன்)

ச்சின்னப் பையன் April 6, 2008 at 10:39 AM  

வாங்க வால் பையன் -> ஹாஹா.. முதல்லே அவங்கள நிறுத்தச் சொல்லுங்க.. நான் நிறுத்தறேன் ... :-)

வாங்க சுரேகா -> அப்படியா... நன்றி... நீங்களும் அந்த பதிவை போடுங்க... (அந்த குரங்கு கதை இன்னும் என் நினைவுலேயே இருக்கு...)

வாங்க அனானி -> நீங்க நல்லவரா, கெட்டவரா??? ... ஜெய் ஹிந்த்...

வாங்க அனானி -> Thanks

சுரேகா.. April 6, 2008 at 10:58 AM  

நன்றி! உங்கள் ஞாபகத்தில் இருப்பதற்கு!

இன்னும் 2 நாளில் போட்டுற்ரேன்..

ஆனா கோணத்தை மாத்திட்டோம்ல!

:)

ச்சின்னப் பையன் April 6, 2008 at 11:04 AM  

வாங்க பினாத்தல் சுரேஷ் -> தல, என்ன?? நீங்கள் போடறதா இருந்த பதிவ நான் முன்னாடியே போட்டுட்டேனா?? என்ன கொடுமை இது!!!

கடவுளே!! சீக்கிரத்துலே வேறே ஏதாவது ஒரு பிரச்சினையை கொடு.. என் தல பதிவு போடற வரைக்கும் என் கையை கட்டிப் போடு!!!

இத்துப்போன ரீல் April 7, 2008 at 9:27 AM  

கர்நாடக பிரச்சனையை கொஞ்சம் கடையை சாத்தி மூடுங்கப்பா!. வலைவீதியில் நிறைய பேரு கத்தி வெச்சிக்கிட்டு சுத்துராங்க.

மங்களூர் சிவா April 7, 2008 at 11:58 AM  

நல்லா 'கெலப்புறீங்கய்ய' பீதிய!!!!

நல்லா இருக்கு!.

Anonymous,  April 7, 2008 at 12:30 PM  

Better carefull, an Auto may come!
:-( good thought!!!

ச்சின்னப் பையன் April 7, 2008 at 1:20 PM  

வாங்க இத்துப்போன ரீல் ( நல்லா இருக்கப்பா பேரு!!) -> ஓகே. இன்னிக்கி சாத்திட்டேன்.. ஆனா, நாளைக்கு அதைப் பத்திதான் என் பதிவு...:-)

வாங்க சிறில் அலெக்ஸ், மங்களூர் சிவா -> நன்றி.. மீண்டும் வருக...

வாங்க அனானி -> Thanks for the comments and Warning...:-))))))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP