தமிழக அரசியல் தலைவர்களின் தொலைபேசியின் Answering Machine:
நம் உடன்பிறப்புகள் / ரத்தத்தின் ரத்தங்கள் அவரவர் தலைவர்களை தொலைபேசியில் அழைக்கின்றனர். ஆனால் தலைவர்கள் எல்லோரும் 'மக்கள் சேவை' செய்ய போயிருப்பதால், தொலைபேசியில் அவர்களுக்குப் பதிலாக அவர்களது குரலே கேட்கிறது. அந்த குரல் என்ன செய்தி சொல்கிறது என்று ஒரு சிறு கற்பனை செய்து பார்ப்போமா?
கலைஞர்:
கூப்பிடுவது எனது உடன்பிறப்பானால்... உனக்காக கவிதை/கடிதம் எழுதத்தான் போயிருக்கிறேன். மறக்காமல் நமது பத்திரிக்கை சந்தாவைக் கட்டிவிடவும். கலைஞர் தொலைக்காட்சியையும் பார்க்கவும். நன்றி.
கூப்பிடுவது அன்னை சோனியாவாக இருப்பின்... அன்னையே.. அந்த கூடுதல் அமைச்சர் பதவி என்னவாயிற்று என்பதை தெரிவிக்கவும்... நன்றி..
ஜெயலலிதா:
என் ரத்தத்தின் ரத்தமே! நான் என் தோழியுடன் ஓய்வெடுக்க சென்றுள்ளேன். தமிழகத்தில் உள்ள மைனாரிட்டி அரசை எதிர்த்து போராட்டம் அறிவித்திருந்தேனே, அதில் பங்கேற்காமல் எனக்கு ஏன் தொலைபேசுகிறாய்?. மரியாதையாய் தொலைபேசியை வைத்துவிட்டு போய் போராட்டத்தில் கலந்துகொள். எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க.
மருத்துவர்:வணக்கம். நான் தமிழகத்தின் மாதிரி பட்ஜெட் தயாரிக்க சென்றுள்ளேன். நீ கூப்பிட்ட காரணத்தை கூறிவிட்டு, தமிழக அரசு ஏதேனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளதா என்பதையும் கூறு. உடனே நாம் அதை எதிர்த்து அறிக்கை விடவேண்டும். கூடவே எந்த பெரிய நடிகராவது திரைப்படத்தில் வெண்குழல் புகைக்கிறாரா என்பதையும் தெரிவி. அவரை எதிர்த்து நாம் போராடவேண்டும். நன்றி.
விஜயகாந்த்:
காங்கிரஸ் அலுவலகம்:
நம் தலைவர் வேட்டி மாற்ற போயிருக்கிறார். ஆம். இன்றைய கூட்டத்தில் அதை நம் கட்சியினர் கிழித்துவிட்டனர். நீங்கள் கூப்பிட்ட காரணத்தைக் கூறுங்... ஆ... என் வேட்டி.. ஏய்.. விடுங்கப்பா... ஏய்ய்...
10 comments:
காங்கிரஸ் சுப்பர்.
Sreedharan from Doha said...
Romba Super !
Room pottu Yosipeengalo ?!
Excellent !!
செம நையாண்டி. சூப்பரோ சூப்பர்.
சூப்பர்...
வாங்க யோகன், ஸ்ரீதரன், பிரேம்ஜி மற்றும் வெட்டிப்பயல்: ரசித்ததற்கு நன்றி...
ஆட்டோ இல்ல! லாரியே வரும் மாமே
வால்பையன்
ஆஹா.. இது வேறே இருக்கோ!!! எச்சரித்ததற்கு நன்றி வால்பையன்...:-)))
என்ன இருந்தாலும் ஒரு சின்னப்பையனுக்கு இத்தனை குறும்பு கூடாது ..
:)
வாங்க சிறில் அலெக்ஸ் -> ரசிச்சீங்களா... என்ன குறும்பு ரொம்ப கம்மியா இருக்குன்னு பீல் பண்றீங்களா?.. சரி.. அதிகப்'படுத்தி'டுவோம்..... :-)
Thanks for writing this.
Post a Comment