வழக்கறிஞர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால்???
ஒரு தத்துவம்:
1000 பிழைகள் வாடிக்கையாளருக்குப் போவதில் தப்பேயில்லை... ஆனால், நன்றாக வேலை செய்யக்கூடிய ஒரு ப்ரோக்ராம் அவருக்குப் போகாமல் இருக்கக்கூடாது...
ஒரு விருப்பம்:
அனைத்து மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஜூன் மாதம் முழுவதும் கோடை கால விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
ஒரு வேண்டுகோள்:
மெ.உ.ஆ (மென்பொருள் உதவி ஆவணம்) 3.2.3அ-இல், செக்ஷன் 25.33.இஅ-இன் படி, இந்த மென்பொருள் இப்படி வேலை செய்யக்கூடாது. அப்படி தவறாக செய்வதால், உடனே அதிக பட்ச கவனம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு கேள்வி:
போன மார்ச் மாதம், 10ம் தேதி மதியம் 2 மணியிலேர்ந்து 3 மணிக்குள்ளே, நீங்க என் டேடாபேஸ்-லே ரெண்டு மூணு தடவை நுழைஞ்சிருக்கீங்க. ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா???
ஒரு காரணம்:
அந்த நிறுவனத்துக்காக நான் எவ்வளவோ உழைச்சிருக்கேன். அதனால்தான், என்னை அவங்க டெல்லி கிளைக்கெல்லாம் அனுப்பிச்சாங்க. ஆனால், சமீபகாலமாக அங்கே வேறே ஒருத்தரோட ஆதிக்கம் ரொம்ப அதிகமாயிட்டிருக்கு. அது எனக்குப் பிடிக்கலே. அதனால், நான் இப்போ வேறு
நிறுவனத்திற்கு மாறிவிட்டேன். ஆனால், அந்த நிறுவனத்தில் செய்த மென்பொருளைப் பற்றி இங்கு நான் நிச்சயமாக பேசமாட்டேன்.
ஒரு வாடிக்கையாளர்:
என் தாத்தா இவரிடம் ஒரு மென்பொருள் செய்யக்கொடுத்தாரு. இவரு என்னடான்னா, அதை முடிக்காமெ இவ்ளோ காலம் இழுத்தடிச்சிட்டாருங்க...என் பேரனோட காலத்திலாவது எங்களுக்கு அந்த மென்பொருள் கிடைக்குமாங்கறது சந்தேகமா இருக்கு...
ஒரு டிஸ்கி:
தமிழ்மணத்திலே ஒரு வழக்கறிஞர் இருக்காருன்னு தெரியும்.. அவரோட சேத்து, மற்ற எல்லோரும் இதை வெறும் நகைச்சுவையாக எடுத்துப்பீங்கன்னு நெனெக்குறேன்... அப்படிதானுங்களே!!!
ஒரு முன்னோட்டம்:
இப்பவே துண்டு போட்டுடறேன். வேறு பல துறையினரும் மென்பொருள் நிபுணராக வேலை பார்த்தால் எப்படி இருக்கும்னு... என்னோட அடுத்த பதிவுகளில்.
6 comments:
நல்லா இருக்கு ஒரு கற்பனை!
சொற்பனை!
வாழ்த்துக்கள் !
வழக்கம் போல் தூள்!!!
/
ஒரு டிஸ்கி:
தமிழ்மணத்திலே ஒரு வழக்கறிஞர் இருக்காருன்னு தெரியும்.. அவரோட சேத்து, மற்ற எல்லோரும் இதை வெறும் நகைச்சுவையாக எடுத்துப்பீங்கன்னு நெனெக்குறேன்...
/
ரொம்ப உசாரா இருக்கீங்க
பதிவு சூப்பர்
வாங்க சிவமுருகன், தமிழ் குழந்தை -> கருத்திற்கு நன்றி...
வாங்க பாஸ்டன் பாலா -> வழக்கமான உங்கள் ஆதரவுக்கு நன்றி...
வாங்க மங்களூர் சிவா -> நன்றி.. இல்லையா பின்னே.. டிஸ்கி போட்டுத்தானே ஆகணும்....:-)
Post a Comment