மருத்துவர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால்???
மருத்துவர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால், எப்படியெல்லாம் பேசுவார்? பாப்போமா??
என்ன.. இந்த மென்பொருள் வேலை செய்யவில்லையா... நேத்து எல்லாம் நல்லா வேலை பண்ணிச்சா?.. இதுக்கு முன்னாடி என்ன உள்ளீடு (input) கொடுத்தீங்க.. இன்னிக்கு காலையிலே வழக்கம்போல வெளியீடு (output) சரியா வந்ததா?
ஆமாங்க... நான் "அரை நிரலர்தான்" (programmer). இப்போதான் 1000 நிரல்களை (programs) எழுதியிருக்கேன்.
என்னது... ஒரு வாரமா எந்த வெளியீடும் (output) வரலியா? முன்னாடியே என்கிட்டே வந்து சொல்றதுக்கென்ன? சரி.. பார்க்கிறேன்.
இந்த மென்பொருள் சரியா வேலை செய்யலேன்னு சொன்னா எப்படி? மொதல்லே நீங்க போய் எல்லா சோதனைகளும் பண்ணிட்டு வாங்க... அதை பாத்தப்புறம்தான் எதையும் செய்யமுடியும்.
ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே வந்திருக்ககூடாதா? இப்போ பெரிய பிரச்சினையாயிடுச்சு. என்னாலெ முடிஞ்சத நான் செய்துபாத்துட்டேன். நம்ம ஆலோசகர்களுக்கு (consultants) சொல்லி அனுப்பிடுங்க.
எவ்வளவு தரம் சொல்றது உங்களுக்கு?. என்னதான் அவசரமா இருந்தாலும், இந்த படிவத்தை நிரப்பிக் கொடுத்தாதான் இந்த மென்பொருளை நான் பார்ப்பேன்.
இதோ பாருங்க.. என்னால் ஆனத நான் செய்துட்டேன். இனிமே ராத்திரி 12 மணி தாண்டினால்தான் இந்த செயல் (process) வேலை செய்யுமான்னு சொல்லமுடியும்.
3 மணிக்கு ஒருதடவை இந்த மென்பொருளோட செயல்திறனை கண்காணிச்சிக்கிட்டே இருங்க. என்ன பிரச்சினை வந்தாலும், உடனே எனக்கு தெரியப்படுத்துங்க. ஓகேவா.
ஆமா. நான் முன்னாடி மருத்துவரா இருந்தேன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?
நீங்க எழுதுற குறிமுறைகள் (code) எதையும் புரிஞ்சிக்கவே முடியலையே!!!
12 comments:
நீங்க டாக்டரா இருக்கலாம், ஆனா ஸ்பீக்கர் வேலை செய்யுதான்னு பாக்க Steth வைச்சு கேக்கிறது நல்லா இல்லை
-oOo-
கஸ்டமர் வந்து கேக்குறார், "எப்டி சாப்டவெயர் எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதா?"
உங்க மென்பொருள் நிபுணர், கண்ணாடியை கழற்றி கையில் வைத்துக்கொண்டு "எதுக்கும் 24 மணித்தியாலம் கழிச்சுதான் சொல்லமுடியும்".
ஆள்: என்ன கத்தியெல்லாம் எடுத்துட்டு வந்திருக்கீங்க?
டாக்: Debug பண்ண வேணாமா?
Code fix செஞ்சிட்டேன் ஆனா Program வேல செய்யல.
ஆஹா வாங்க டாக்டர் ப்ருனோ -> கலக்கிட்டீங்க போங்க... நன்றி...:-)
வாங்க கெளபாய்மது -> நன்றி... (தமிழ்லே உங்க பேரை என்னாலே 'cow' அடிக்கமுடியல!!! அதனால 'ke' & 'la' அப்படின்னு அடிச்சிட்டேன்.. பரவாயில்லைதானே???)
வீரசுந்தர் -> ஏன் இந்த கொல வெறி???...:-)
வாங்க சிறில் அலெக்ஸ் -> ஆபரேஷன் சக்ஸஸ்.. பேஷண்ட் டெட்.. இதை 'உல்டா' பண்ணனும்னு நெனெச்சிக்கிட்டே இருந்தேன்... நீங்க சொல்லிட்டீங்க... :-)
வழக்கம் போல கலக்கல் :-)
புருனோ, சிறில் கமெண்ட்சும் சூப்பர்...
அப்படியே சங்கம் ரெண்டு போட்டிக்கு ஒரு பதிவு போடுங்களேன்...
வாங்க வெட்டிப்பயல் -> நன்றி...
ஆமாங்க... கண்டிப்பாக.. ரெண்டு போட்டிக்கு என்னோட ரெண்டு பதிவுகள் உண்டு...:-)
வழக்கம் போல் கலக்கல். அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
memory leak aavudhunga.
codeku dhinamum vallaarai kudunga
(ivar ayurveda maruthuvar)
-aathirai
வாங்க பிரெம்ஜி -> ரசித்ததற்கு நன்றி... அடுத்த பாகமும் ரெடி... நாளைக்கு வரும்...:-)
வாங்க ஆதிரை -> என்னாச்சு... தங்க்ளீஷ்... நன்றி...:-)
kau = கௌ
ரொம்ப நன்றிங்க துளசி மேடம்...:-)
Post a Comment