Tuesday, April 8, 2008

ஒரு வருங்காலத் தலைவர் உருவாகிறார்!!!தலைவரோட பேரனை பாத்துக்க கட்சியிலிருந்து ஆள் வேணும்னு கேட்டிருந்தாங்களே,
கிடைச்சாங்களா?

கிடைச்சாங்களாவா, அந்த வேலைக்கு போக ஒரே அடிதடியாம்.
ஏன்?ஒவ்வொரு தடவை 'டயபர்' மாத்தும்போதும், அவர் 1000 ரூபாய் நோட்டு தர்றாராம்.
----'2020' திட்டத்துக்கு நான் இப்போவே தயாராக ஆரம்பிச்சிட்டேன் அப்படின்னு தலைவரோட பேரன் எந்த திட்டத்தை பத்தி சொல்றாரு?
அது ஒண்ணுமில்லே. 2020லே அவர் கல்யாணம் செய்துக்கபோறாராம்.
----இந்த பள்ளியிலே காலையிலே மற்றும் மதியம் - ஒரு மணி நேரத்துக்கு யாரும் கழிப்பறை
போகமுடியாதா? ஏன்?

இந்த பள்ளியில் படிக்கும் ஒரு அரசியல்வாதியின் பேரன் 'போகும்' நேரமாம் அது.
----


தலைவரோட பேரன் வீட்டிலே விளையாடும்போது கூட நண்பர்களை சேர்த்துக்க மாட்டாராம்.ஏன்?
கேட்டா அவங்களுக்கு என் இதயத்திலே இடம் உண்டு... ஆனால் என் பொம்மைகளை தர மாட்டேன்கிறாராம்.
----நம் தலைவர் பேரன், ரெண்டு மணி நேரமா அழுதிட்டிருக்காறா? ஏன்?
கட்சியில் அவருக்கு 'சிறுவர்' அணி தலைவர் பதவி வேணுமாம்.
----இவரு வருங்காலத்திலே நம்ம தலைவரை போல வருவாருன்னு எப்படி சொல்றே?
இவரு படிக்க்கிற பள்ளியில் என்ன பிரச்சினை வந்தாலும், உடனே வாத்தியாருக்கு கடிதம் எழுத ஆரம்பிச்சிடறாரே..
----கட்சிப் பத்திரிக்கையில் வந்த விளம்பரம்:
வாரீர்!! வாரீர்!! அலைகடலென திரண்டு வாரீர்!!!
தலைவர் பேரன், வருங்கால முதலமைச்சர் கட்டியுள்ள வீட்டுபுது மனை புகுவிழா


இடம்: மெரினா பீச் (பாரதியார் சிலைக்கு பின்னால்)
நேரம்: வரும் ஞாயிறு மாலை 6.00 மணிக்கு
9 comments:

சிறில் அலெக்ஸ் April 8, 2008 at 10:47 AM  

அப்போ அவரு புத்தகம் இப்டித்தான் இருக்கும்..

அ - அறிக்கை
ஆ - ஆட்சி
இ - இருக்கை
ஈ - ஈடு இணையற்ற
உ - உண்ணாவிரதம்
ஊ - ஊராட்சி
எ - எதிர்கட்சி
ஏ - ஏய்ப்பு
ஒ - ஒத்தூது
ஓ - ஓட்டு

ச்சின்னப் பையன் April 8, 2008 at 3:16 PM  

வாங்க சிறில் அலெக்ஸ் -> எப்படி, எப்படி இதெல்லாம்?... எல்லாம் தன்னாலே வருது???... கலக்குறீங்க...

Anonymous,  April 9, 2008 at 9:51 AM  

suppar ,kalakkal!!:))

Anonymous,  April 9, 2008 at 12:20 PM  

சின்னப்பையன் அய்யா,

இந்த பேரக் குழந்தைக்கு டயபர் கூட மஞ்ச கலர்ல தான் இருக்கணுமாமே.
நம்ம மடிப்பாக்கம் பார்ட்டி இந்த டயபர் மாத்தற வேலையில சேருவதற்கு அறிவாலயத்துக்கு அலையா அலைந்து கொண்டிருக்கறாராமே?உண்மையா?

பாலா

சென்ஷி April 9, 2008 at 1:07 PM  

ஏன் இந்த கொல வெறி :)

ச்சின்னப் பையன் April 9, 2008 at 2:39 PM  

வாங்க அனானி -> நன்றி.

வாங்க பாலா -> அடுத்து சென்ஷி போட்டுருக்கிற பின்னூட்டத்தை படிங்க. அதுதான் உங்களுக்கு நான் சொல்ற பதில்...:-)

வாங்க சென்ஷி -> எல்லாம் ஒரு இதுக்குதான்... நன்றி...:-)

pulliraajaa,  April 9, 2008 at 4:42 PM  

பையன் துண்டு போட்டுத்தானே பள்ளி போறான்?

சிறில் அலெக்ஸ் April 9, 2008 at 4:44 PM  

//வாங்க சிறில் அலெக்ஸ் -> எப்படி, எப்படி இதெல்லாம்?... எல்லாம் தன்னாலே வருது???... கலக்குறீங்க...//

நீங்க தினசரி கலக்குறீங்களே.

இனிமே உங்களுக்குப் பின்னூட்டம் போட மாட்டேனாக்கும். எல்லாத்துக்கும் கலக்குறீங்க. சூப்பர் எனப் பின்னூட்டம் போட்டு அலுத்திடுச்சு :)

ச்சின்னப் பையன் April 9, 2008 at 5:22 PM  

அச்சச்சோ சிறில் அலெக்ஸ், என்ன இப்பிடி சொல்லிட்டீங்க???...:-)

உங்கள மாதிரி சில பேர் திட்டாமெ பின்னூட்டம் போடறால்தான் ஏதோ கிறுக்கிட்டுருக்கேன். :-)))

நீங்கல்லாம் சச்சின் மாதிரி.. நின்னு ஆடறீங்க.. நான் காம்ப்ளி மாதிரி ஒரு ரெண்டு சீசனுக்கு ஆடினா ஜாஸ்தி... ஓகேவா....:-)))) நன்றி...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP