ஒகெனெக்கல்லிருந்து பாடம் - எதிர்காலத் திட்டங்களுக்கு யோசனைகள்!!!
ஒகெனெக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடகாவில் கிடைத்த எதிர்ப்பை பாடமாக வைத்துக் கொண்டும், எதிர்வரும் திட்டங்களுக்கு இதே மாதிரி எதிர்ப்பு வராமலிருக்கவும், நமது தமிழக அரசு என்னென்ன செய்யலாம் என்றபோது எனக்கு தோன்றிய யோசனைகள் இது. எப்படியிருக்குன்னு பாத்து சொல்லுங்க.
1. கர்நாடக பேரன், பேத்திகளுடன் ஆலோசித்தல்:
தமிழகத்தில் திட்டங்கள் போட்டால், அவை நடைமுறைக்கு வருவதற்கு 10 வருடங்களேனும் ஆகின்றது. அதற்குள், பக்கத்து மாநிலங்களில் பல புதிய தலைவர்கள் (அடுத்த தலைமுறையினர்) வந்துவிடுகின்றனர். பழைய திட்டங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. அதனால், அவற்றை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறுகின்றனர். அதனால், எந்த திட்டம் போட்டாலும் இனிமேல், கர்நாடகத் தலைவர்களின் பேரன், பேத்திகளிடமும் ஆலோசித்து, அவர்கள் ஒப்புதலை இப்போதே பெற்றுக்கொள்ளச் செய்யலாம்.
2. தேர்தல் நேரங்களில் புதிய திட்டங்கள் இல்லை.
கேரளா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி - ஆகிய நம் அண்டை மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்தில், சட்டமன்ற தேர்தல் வருமாயின், அந்த வருடம் தமிழ் நாட்டில் எந்த புதிய திட்டமும் தொடங்கக்கூடாது என்று முடிவெடுக்கலாம்.
3. தமிழ்த் திரைப்பட படப்பிடிப்புகள் இனிமேல் கர்நாடகத்தில்:
தமிழ் திரைப்பட பாடல்களின் படப்பிடிப்புகள், வெளி நாடுகளுக்குப் பதிலாக இனிமேல் கர்நாடகத்தில்தான் எடுக்கப்படவேண்டும் என்று அறிவிக்கலாம். இதனால், அங்கு என்ன கலாட்டா வந்தாலும் அவர்கள் இத்தகைய படங்கள் வெளியிடுவதை தடுக்க மாட்டார்கள். மேலும், தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க, கர்நாடகத்தில் படப்பிடிப்பு நடத்துபவர்களுக்கு சிறப்பு வரிச்சலுகை அளிக்கலாம்.
4. தொலைக்காட்சித் தொடர்களில் கன்னடத்தில் சில வசனங்கள், பாடல்கள்:
'புகுந்த வீடா பொறந்த வீடா, எந்த இடம் நல்ல இடம்' என்ற பாடலை 'உட்டித மனெயா, ஹோத மனெயா, யா மனே ஹொள்ள மனே' என்று மொழிபெயர்த்து பாடுமாறு தொலைக்காட்சித் தொடர் இயக்குனர்களை கேட்டுக்கொள்ளலாம். இப்படி நடு நடுவே கன்னடத்தில் பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒலிபரப்பினால், எந்த பிரச்சினை வந்தாலும், கர்நாடகத்தில் இத்தகைய தொடர்களை ஒளிபரப்புவதில் எந்த பிரச்சினையும் இருக்காது.
நீங்க என்ன நினைக்கிறீங்க?
7 comments:
சூப்பர்...
நீ பட்டைய கெளப்பு ராசா!!
வாங்க வெட்டிப்பயல் மற்றும் மங்களூர் சிவா -> நன்றி...
சென்னா கீதே.
தும்பா சென்னாகிது குரு
ஹொகனக்கல் திட்டத்திற்கு சரியான தீர்வு:
1200 கோடி கான்டிராக்டை நான்காக பிரித்து, 300 கோடி கான்டிராக்ட் எடியூரப்பா சொந்தகாரங்களுக்கு, 300 கோடி கான்டிராக்ட் எஸ்.எம்.கிருஷ்ணா சொந்தகாரங்களுக்கு, 300 கோடி கான்டிராக்ட் வட்டாள் நாகராஜ் சொந்தகாரங்களுக்கு, மீதி 300 கோடி கான்டிராக்ட் குமாரசாமி சொந்தகாரங்களுக்கு கொடுத்துடலாம். அப்புறம் பாருங்க, எதிர்ப்பாவது ஒண்ணாவது?
வாங்க இளா மற்றும் கோவி.கண்ணன் -> நன்றி....
வாங்க Venpu -> ஆஹா, சரியான தீர்வாயிருக்குதே.. அவங்களையும் 'உடன்பிறவா' உடன்பிறப்பா ஏத்துக்கிடவேண்டியத்துதான்... :-)))
Post a Comment