வீட்டு உரிமையாளர் விதிக்கும் நிபந்தனைகள்: (சென்ற பதிவின் தொடர்ச்சி)
புதிதாக வீட்டுக்கு வருபவர், வீட்டு உரிமையாளருக்கு விதித்த நிபந்தனைகள், சென்ற பதிவில் இங்கே. அந்த கடிதத்திற்கு வீட்டு உரிமையாளர் அனுப்பும் பதில்தான் இந்த பதிவு.
அனுப்புனர்: வீட்டு உரிமையாளர்
பெறுனர்: வாடகைக்கு வருபவர்
ஐயா,
உங்கள் கடிதம் கிடைத்தது. உங்கள் நிபந்தனைகள் எல்லாம் படித்தேன். அருமையான யோசனைகள். ஆனால் நிபந்தனைகளைப் போட வேண்டுமென்றால், அவை என் நிபந்தனைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
அதனால், கீழ்க்கண்ட நிபந்தனைகளைப் படித்து, வாடகை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு உடனடியாக வீட்டுக்கு வாடகைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வழக்கம்போல், அடைப்புக்குறிக்குள் இருப்பவை, நான் என் மனதில் நினைப்பதாகும் அவற்றை நீங்கள் படிக்க வேண்டாம். இனி என் நிபந்தனைகள்:
கலைஞர் குடும்பத்தினர் ஒருவர் கட்சி/ஆட்சிப் பதவிக்கு வரும்போது மட்டும்
(எப்படியும் 1 வருடத்திற்கு ஒருவர் புதிதாக வந்து கொண்டே இருப்பார்)
சுப்ரமணியம் சுவாமி டீ பார்ட்டி அல்லது யார் மேலாவது வழக்கு போடும்போது மட்டும்(அப்பாடா, ஆறு மாததிற்கு ஒரு முறையாவது வாடகையை ஏத்திடலாம்).
டி.ஆர்.பாலு ஒரு பாலம் புதிதாக கட்ட ஆரம்பிக்கும்போதும்
(அவருதான் அடிக்கடி ஒரு புது பாலம் கட்டறேன்னு வேலையை ஆரம்பிக்கறாரே)
குமுதன், விகடனில் ரஜினியின் கவர் ஸ்டோரி வரும்போது மட்டும்
(அவரோட கதை இல்லாமே இதுக ரெண்டும் இல்லவே இல்லையே)
தமிழகத்தில் ஒரு போலி சாமியார் பிடிபடும்போது மட்டும்
(மாசத்துக்கு ஒருத்தர் கண்டிப்பா மாட்டுவாரு)
தமிழ்மணத்தில் '@##' மற்றும் '@#$' பதிவுகள் வரும்போது மட்டும்
(அதுதான் அடிக்கடி 'சூடா' வருதே)
தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் கொள்ளை போகும்போது
(இதுவும் அடிக்கடி நடக்குதுன்னு நினைக்கிறேன்)
0 comments:
Post a Comment