Thursday, April 17, 2008

சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!

சங்கம் 'ரெண்டு' போட்டிக்காக தமிழக அரசியல் தலைவர்களை பேட்டி கண்டால் என்ன சொல்வார்கள் என்று ஒரு சிறு கற்பனை. வழக்கம்போல் எல்லோரும் சேவையில் இருப்பதால், ரெண்டு வாக்கியமாவது சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். இனி அவர்கள் சொன்னவை. ஒரு மாறுதலுக்காக தலைவர்கள் வேறு வரிசையில்.

சு.சுவாமி:

ஒரு வாரத்திலே 'ரெண்டு' வழக்காவது போடலேன்னா, எனக்கு தூக்கமே வராது. இன்னும் 'ரெண்டே' பாயிண்ட்கள்தான் பாக்கி, பாத்துண்டே இருங்கோ, மத்திய அரசை 'ரெண்டே' நாள்லே கவிழ்த்துடுவேன்.

ஆற்காட்டார்:

தமிழகத்தில் மின்சாரத்தடை, சென்னையில் பேனர் பிரச்சினை இந்த 'ரெண்டை' தவிர எதுவேணாலும் கேளுங்க. 'ரெண்டே' 'ரெண்டுலே' (செகண்டுலே) பதில் தர்றேன்.

டி.ஆர்.பாலு:

வருடத்துக்கு 'ரெண்டு' பாலம் கட்ட அடிக்கல் நாட்டணும், வாழ்நாளில் 'ரெண்டு' பாலமாவது கட்டி முடிக்கணும் - இதுதான் எனது குறிக்கோள்.

காங்கிரஸ் தலைவர்:

சொன்னா நம்புங்க. நான் தமிழகத்தலைவரா பொறுப்பேத்து 'ரெண்டு' நாள்தான் ஆகுது. அதுக்குள்ளே என்னோட 'ரெண்டு' லோடு வேட்டி கிழிஞ்சி போச்சு.

விஜயகாந்த்:

எனக்கு மட்டும் 'ரெண்டு' அண்ணன் தம்பிங்க, 'ரெண்டு' மச்சான், 'ரெண்டு' சித்தப்பா பெரியப்பா, 'ரெண்டு' பசங்க இவங்கல்லாம் இருந்திருந்தாங்கன்னா, நான் ஏன் மத்தவங்களுக்கு கட்சியில் சீட்/பதவி இதெல்லாம் கொடுக்கப்போறேன்?

ஜெயலலிதா:

நாங்க தோழிங்க 'ரெண்டு' பேரும் ஓய்வுக்குப் போயிட்டிருக்கோம். இப்போ போய் 'ரெண்டு' போட்டியில் கலந்துக்க சொல்றீங்களே?

கலைஞர்:

சொந்த குடும்பத்தில் பிரச்சினை என்றால் 'இரண்டு' நிமிடம் தொலைபேசியில் முடித்துவிடுகிறேன் என்றும் மக்கள் பிரச்சினை என்றால் 'இரண்டு' வரி கடிதம் எழுதுவேன் என்றும் என்னை பற்றி தவறாக பேசுகிறவர்கள் யாராவது இருந்தால் உடனே வரவும். 'இரண்டு' வருடம் உள்ளே போட்டுவிடுகிறேன்.


பிகு: சங்கம் 'ரெண்டு' போட்டிக்கான எனது 'ரெண்டாவது' இடுகை இது.

11 comments:

Syam April 17, 2008 at 6:19 AM  

romba naal atchu blog pakkam ellam vandhu...innaikku engayo irundhu unga blog pakkam vandhen....ella posts um sooooober....adichu aadunga... :-)

சின்னப் பையன் April 17, 2008 at 9:26 AM  

Hello Syam -> Thanks for coming and comments....

வெட்டிப்பயல் April 17, 2008 at 10:04 AM  

//Syam said...

romba naal atchu blog pakkam ellam vandhu...innaikku engayo irundhu unga blog pakkam vandhen....ella posts um sooooober....adichu aadunga... :-)//

நாட்டாமை,
இத்தனை நாள் எங்க போயிருந்தீங்க???

வெட்டிப்பயல் April 17, 2008 at 10:05 AM  

பதிவு சூப்பர்...

மருத்துவரை மிஸ் பண்ணிட்டீங்களே...
அப்படியே கர்நாடக தலைவர்களையும் சேர்த்திருக்கலாம் :-)

SathyaPriyan April 17, 2008 at 11:50 AM  

//
//Syam said...

romba naal atchu blog pakkam ellam vandhu...innaikku engayo irundhu unga blog pakkam vandhen....ella posts um sooooober....adichu aadunga... :-)//

நாட்டாமை,
இத்தனை நாள் எங்க போயிருந்தீங்க???

//

athe than........ Syam where have you been????????????

ச்சின்னப் பையன் unga yella postum superu.......

வால்பையன் April 17, 2008 at 12:06 PM  

ரெண்டே ரெண்டு பசங்க மட்டும் இந்த பூச்சாண்டிய பார்த்து பயப்பட மாட்றாங்க என்ன பண்ணலாம்

வால்பையன்

சின்னப் பையன் April 17, 2008 at 12:26 PM  

வாங்க வெட்டிப்பயல், அட ஆமா, மருத்துவர் விட்டுப்போயிட்டாரு... சரி அடுத்ததுலேர்ந்து அவர விடாமெ புடிச்சிக்கறேன்....:-)))... கர் நாடக தலைவர்களா-> ஓஓ.. இனிமே அவங்களும் நம்ம ஆட்டத்திலே உண்டு... நாமெல்லாம் ஒரே 'செட்'தானுங்களே...

சத்யபிரியன் -> முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

வால்பையன் -> அட.. இந்த பூச்சாண்டி பயங்காட்ற பூச்சாண்டி இல்லீங்க... சிரிப்பு போலீஸ் மாதிரி இது சிரிப்பு பூச்சாண்டி..... :-)))))

ஜாம்பஜார் ஜக்கு April 17, 2008 at 2:07 PM  

ரெண்டே வார்த்தை:

ஆட்டோ வருது!


இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு
(அட, இது யாருப்பா புதுசாக் கீது?)

நையாண்டி நைனா April 18, 2008 at 8:56 AM  

நல்ல கற்பனை... வாழ்த்துக்கள்.
இங்கேயும் வாங்க

தமிழ் April 21, 2008 at 12:32 AM  

/சு.சுவாமி:

மத்திய அரசை 'ரெண்டே' நாள்லே கவிழ்த்துடுவேன்.

ஆற்காட்டார்:

'ரெண்டே' 'ரெண்டுலே' (செகண்டுலே) பதில் தர்றேன்.

டி.ஆர்.பாலு:

வருடத்துக்கு 'ரெண்டு' பாலம் கட்ட அடிக்கல் நாட்டணும்,

காங்கிரஸ் தலைவர்:

அதுக்குள்ளே என்னோட 'ரெண்டு' லோடு வேட்டி கிழிஞ்சி போச்சு.


ஜெயலலிதா:

நாங்க தோழிங்க 'ரெண்டு' பேரும் ஓய்வுக்குப் போயிட்டிருக்கோம்.

கலைஞர்:

என்னை பற்றி தவறாக பேசுகிறவர்கள் யாராவது இருந்தால் உடனே வரவும். 'இரண்டு' வருடம் உள்ளே போட்டுவிடுகிறேன்./

:)))))))))))))

Anonymous,  April 22, 2008 at 12:21 AM  

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Home Broker, I hope you enjoy. The address is http://home-broker-brasil.blogspot.com. A hug.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP