Friday, April 11, 2008

சன் ம்யூசிக் தொகுப்பாளினியை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்தால்???

சன் ம்யூசிக் தொகுப்பாளினி ஒருவர், ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். முதல் நாளே அவரை ஒரு நேர்காணல் (interview) எடுக்கச்சொல்லி விட்டார்கள். அதுவும் தொலைபேசியில். விடுவாரா அவர்?... புகுந்து விளையாடிட்டார்... எப்படின்னு பாருங்க...


பதில்களில் ஒண்ணும் சுவாரசியம் இல்லாலதால், நேர்காணலில் அவர் கேட்கும் கேள்விகள் மட்டும் இங்கே.. பதில்கள் உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்...

இப்போ இன்டர்வியூ ஆரம்பம்.


ட்ரிங்... ட்ரிங்..

ஹலோ...

ஹலோ...


வாழ்க்கையிலே சுகம், துக்கம் ரெண்டுமே சேந்துதாங்க வரும். இந்த இரண்டையும் சரிசமமா ஏத்துக்கிட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுபவங்கதான் மனுசன். இன்னிக்கி காத்தாலே பாருங்க, நான் எழுந்தவுடனே காப்பி குடிக்கலாம்னு பாத்தேன்.. ஆனா, பாலே வரலே. சரி, பரவாயில்லேன்னு சொல்லி காப்பியே குடிக்காமெ நான் வேலைக்கு வந்துட்டேன். இதமாதிரி நீங்களும் இருந்திட்டீங்கன்னா, வாழ்க்கையிலே எந்த பிரச்சினையும் இல்லே. என்ன சொல்றீங்க.. சரி.. இப்போ இந்த நேர்காணலுக்குப் போகலாமா?


ஹலோ, சுரேஷ் இருக்காரா?


அப்படியா, சுரேஷ்தான் பேசறதா... நாங்க மன்னார் அன்ட் மன்னார் கம்பெனியிலேர்ந்து பேசறோம். நீங்க எப்படி இருக்கீங்க சுரேஷ்?


என்ன, ரொம்ப நாளா என் லைனை எதிர்பார்த்துட்டிருந்தீங்களா?... நானே இன்னிக்குத்தான் வேலைக்கு சேர்ந்தேன்!!! நீங்க எப்படி இருக்கீங்க?


ரொம்ப சந்தோஷம்... நானும் நல்லா இருக்கேன்... கொஞ்சம் உங்க டிவி வால்யூமை குறைக்கிறீங்களா? நீங்க பேசறது இங்கே எதிரொலி கேக்குது.


ஓகே.. நேர்காணலை ஆரம்பிக்கலாமா? சுரேஷ், நீங்க முதமுதலா வேலை பாத்த கம்பெனி பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.


ஆஹா.. அப்படியா...இருங்க உங்க வீட்டிலே இதை பத்தி சொல்றேன். ஆமா.. கல்யாணத்துக்குப் பிறகு நீங்க செஞ்ச முதல் டெஸ்டிங் எது?


சோ ச்வீட்... உங்களுக்குப் பிடித்த மென்பொருள் என்னன்னு நான் தெரிஞ்சிக்க முடியுமா?


ஹாஹா... ரொம்ப தமாஷா பேசறீங்க... நீங்க சமீபத்திலே எழுதிய மென்பொருள் என்ன? அதிலேர்ந்து சில வரிகளை சொல்லுங்க பாக்கலாம்.


சரி சுரேஷ்.. உங்களுக்கு நாங்க வேலை கொடுத்தால், எவ்ளோ நாளில் வந்து சேர்வீங்க?


லவ்லி.. இப்படிப்பட்ட ஆளைத்தான் நாங்க தேடிண்டிருந்தோம். இன்னிக்கே உங்களுக்கு ஆபர் லெட்டர் அனுப்பறோம். உடனடியா வந்து வேலைக்குச் சேருங்க.. என்ன... போனை வச்சிடவா.. வீட்லே எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க... பை......

சுரேஷ் ரொம்ப நல்லா பேசினாரு இல்லே... இப்படியே எல்லாரும் இருந்திட்டா, உடனடியா நாங்க செலக்ட் பண்ணிடலாம்...

ஓகே. அடுத்து நாம பேசப்போற நபர் ரமேஷ். அவர்கிட்டே பேசறதுக்கு முன்னாடி ஒரு சிறு இடைவேளை... நான் போய் காபி எடுத்துக்கிட்டு வந்துடுறேன்...சீ யூ... பை...

10 comments:

பிரேம்ஜி April 11, 2008 at 7:07 AM  

:-)) பட்டய கெளப்புங்க

SP.VR. SUBBIAH April 11, 2008 at 8:12 AM  

/////2011-ல் நாந்தான் தமிழக முதலமைச்சர். இது உங்களுக்கு பயங்கர காமெடியாகத் தெரிந்தால் - இந்த வலைப்பூ உங்களுக்காகத்தான்!!!////

எந்த மாநிலத்திலேன்னு போடாம விட்டிட்டியே கண்ணா?

உத்ராஞ்சல் மட்டும் வேண்டாம் - என்ன், சரியா?

ச்சின்னப் பையன் April 11, 2008 at 9:17 AM  

வாங்க பிரேம்ஜி, நல்லாயிருந்துதா... நன்றி....

வாங்க வாங்க வாத்தியாரையா... என்ன இப்படி சொல்லிபுட்டீங்க?... 'தமிழக' அப்படின்னு போட்டிருக்கேனே!!! எனக்கு ரெண்டு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!!!
அ. 2011-லெ தமிழகமே இருக்காதுன்னு சொல்றீங்களா (கர்னாடகாவோட சேத்துடுவாங்களோ???)
ஆ. உத்ராஞ்சல் மேலே அப்படி என்ன கோபம் உங்களுக்கு?... !!!

SP.VR. SUBBIAH April 11, 2008 at 9:41 AM  

////வாங்க வாங்க வாத்தியாரையா... என்ன இப்படி சொல்லிபுட்டீங்க?... 'தமிழக' அப்படின்னு போட்டிருக்கேனே!!! எனக்கு ரெண்டு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!!!
அ. 2011-லெ தமிழகமே இருக்காதுன்னு சொல்றீங்களா (கர்னாடகாவோட சேத்துடுவாங்களோ???)
ஆ. உத்ராஞ்சல் மேலே அப்படி என்ன கோபம் உங்களுக்கு?... !!!////

தமிழகம் என்றுள்ளதைப் பார்க்காமலா?
அதுக்கு ல்க்கியார், உண்மைத்தமிழன் போன்ற அறிவுஜீவிகள் இருக்கும்போது - வேறு எவருக்கும் - நோ சான்ஸ்!

ஆகவே மற்ற மாநிலங்களுக்கு நீங்கள் முயற்சி செய்வது நல்லது!

உத்ராஞ்சல் வேண்டாம் என்பதற்குப் பதிவில் பதில் சொல்ல முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்

ச்சின்னப் பையன் April 11, 2008 at 10:27 AM  

ஆஹா!! வாத்திரைய்யா!! ஏதோ வில்லங்கமான விவகாரமா இருக்கும் போலிருக்குதே!!! ம்ம்ம்...:-))))

பினாத்தல் சுரேஷ் April 11, 2008 at 11:04 AM  

ஆஹா.. எல்லாத்தையும் நல்லா சொல்லிட்டு இந்த மேட்டரை விட்டுட்டீங்களே..

"எல்லா நிகழ்ச்சியும் போல, இந்த இண்டர்வியூக்கும் நிறைய பேர் வந்து மகிழ்ச்சியா வேலை வாங்கி இருக்காங்க. உங்கள்லே சில பேருக்கு வேலை கிடைக்காமலும் இருக்கலாம். நான் என்னங்க சொல்லப்போறேன்? Keep trying, Keep on trying"

ச்சின்னப் பையன் April 11, 2008 at 12:46 PM  

வாங்க பினாத்தல் சுரேஷ் -> ரசிச்சீங்களா... ஓ... இது விட்டுட்டேனா... நன்றி....:-))))

goma April 13, 2008 at 1:53 PM  

நீங்க என்ன எழுதினாலும் இந்த தொகுப்பாளினிகளையைத் திருத்தவே முடியாதுங்கோ ,சின்னப் பைய[ர்]

சரவணகுமார் April 13, 2008 at 11:03 PM  

ச்சின்னப்பையனுக்கு நல்ல கற்பனை :)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP