நான் கட்டிய வீடு!!!
நண்பர்கள்
ஒவ்வொரு ஞாயிறும்
அலைந்து திரிந்து
வீட்டைப் பார்க்க
அப்பா
வேகாத வெயிலில்
போய் பார்த்து
முடிவு செய்ய
அண்ணன்
வங்கிகளில் ஏறி இறங்கி
கடனுக்கு
ஏற்பாடு செய்ய
மாமனார்
ஜோசியரிடம்
புதுமனை புகுவிழாவிற்கு
நாள் குறிக்க
தம்பி
வீட்டின் முகப்பு
மாதிரியே
அழைப்பிதழ் அடிக்க
அம்மா
தொலைபேசியிலும்
நேரிலும் போய்
அனைவரையும் அழைக்க
விழா அன்று
விடியலில்
விமானத்தில் ஜாலியாக
போய் இறங்கிய
என்னிடம் எல்லோரும்
சொல்கிறார்கள் -
ஜமாய்ச்சிட்டே!
கலக்கிட்டே!
கஷ்டப்பட்டு கட்டிட்டே
புது வீடு!!
14 comments:
அடடே, பிரமாதம் சரக்கு.
வரவர ஏன் கவிதையா போடுறீங்க?
//ஜமாய்ச்சிட்டே!
கலக்கிட்டே!
கஷ்டப்பட்டு கட்டிட்டே
புது வீடு!!//
வீடு கட்டியதைப்போல் உணர்வு...
ம்ம்ம் என் அனுபவம் அதே,,,,,,,,,,
வாங்க பப்பு-> அது ஒண்ணுமில்லேங்க. ஜிம்பிளா சொல்லணும்னா -> mental block..
:-))
என்ன பாஸு, கவிதையா கலக்க ஆரம்பிச்சிட்டீங்க... :-)
அவை எல்லாம் நடந்தது நீங்கள் பாடு பட்ட பணத்தால்...........
வாழ்த்துக்கள். உங்கள் குடும்பம் உங்கள் மேல் கொண்ட பாசம், அஸ்திவாரம். அருமையா இருக்கு.
அனைவருக்கும் நன்றி... இந்த கவிதை(!!) எனக்கு கற்பனைதான். ஆனா மேலே சொன்ன மாதிரி பிரபுக்கு (வெளிநாட்டில் இருக்கும் பலருக்கும்) நிஜம்..
:) nice one
:) நல்லா இருக்கு கவிதை..
\\ ஜிம்பிளா சொல்லணும்னா -> mental block..//
அட கவிதை எழுதறதுக்கு இப்படி எல்லாம் காரணம் சொல்லலாமா.. நல்லா இருக்கே..:))
நல்லா இருக்கு. சும்மா வூடு கட்டி விளையிடிருக்கீங்க கவிதைல....
கவித....கவித... .அரும... அரும...
நீர் கவிஞரய்யா.... ஜமாய்ச்சுப்புட்டீர்!!
சொல்லவே இல்லை
யோவ்.. நிஜமாவே நல்ல கவுஜய்யா இது.!
Post a Comment