Sunday, January 17, 2010

நான் பாதி, நான் பாதி...!!!



பல படங்கள்
முழுமையாக
பார்க்கப்படாமல்
விடப்பட்டன
பாதியில்.

பல நட்புகள்
தொடர முடியாமல்
முறிந்தன
பாதியில்.

பல இடுகைகள்
முடிக்க முடியாமல்
‘'டிராஃப்ட்'டில்
கிடக்கின்றன
பாதியில்.

வயலின்
கற்றுக் கொள்ளப் போய்
திரும்பி வந்தேன்
பாதியில்.

விமானம் ஓட்டக்
கற்கவேண்டும் -
வெறும் வார்த்தையிலேயே
நிறுத்தினேன் -
என் சரிபாதியின்
கண்களில்
எக்கச்சக்க கோபம்.

இப்படி எல்லாமே
பாதி பாதியாய் இருக்கிறதே? -
நண்பர்களிடம் தீர்வு
கேட்டேன்.

பாதிப்பேர்
சொன்னார்கள் -
இதற்கு பாதி அல்ல -
முழு காரணமும்
நான்தானாம்.

இந்த பாதி அனுபவத்தை
ஒரு புத்தகமாக
எழுதலாமென்று
நினைத்தேன்.

நான் பாதி, நான் பாதி
என்று தலைப்பிட்டு
ஆரம்பித்த அந்த
புத்தகம்
பாதியில் நிற்கி

13 comments:

ரோஸ்விக் January 17, 2010 at 10:53 PM  

எங்க இதையும் பாதில விட்டுருவீகலோனு பார்த்தேன்... :-))
பாத்துண்ணே இதை படிச்சிட்டு சம்பளமும் பாதின்னு சொல்லிறப் போறானுக...

Anonymous,  January 17, 2010 at 11:15 PM  

என் பின்னூட்டமும் பாதி

நல்லா ....

முத்துலெட்சுமி/muthuletchumi January 17, 2010 at 11:31 PM  

\\பாதிப்பேர்
சொன்னார்கள் -
இதற்கு பாதி அல்ல -
முழு காரணமும்
நான்தானாம்.//

எவ்வளவு சரியா சொல்கிற நண்பர்களை கொண்டிருக்கிறோம் நாம்.. அதுவே பாதி வெற்றிங்க.. முயற்சி செய்வோம்.. எப்படியாச்சும் பாதியில் விடறத மாத்துவோம்..
( ஹ்ம்.. இங்கயும் அதே கதைதான் )

Chitra January 18, 2010 at 12:05 AM  

மத்த பாதி நண்பர்கள் கவுத்துட்டாங்களா?
:-)

விஜயசாரதி January 18, 2010 at 12:55 AM  

அரைகுறையா ஒரு விஷயத்தை சொல்லி....சாரி பாதியிலேயே நிண்டுருச்சி...முடிச்சுக்கங்க தலைவரே..

ILA (a) இளா January 18, 2010 at 8:24 AM  

என்னய்யா வர வர பின்நவீனத்துவவாதியாகிருவீங்க போல இருக்கே

ராஜ நடராஜன் January 18, 2010 at 9:18 AM  

எப்படியெல்லாம் யோசிக்கிறாக!

(நல்லா இருக்கீகளா)

சின்னப் பையன் January 18, 2010 at 12:22 PM  

வாங்க ரோஸ்விக் -> அவ்வ்.. ஏற்கனவே சம்பளத்த குறைச்சிட்டாங்க... அதையே பாதியா குறைச்சா... அவ்ளோதான்... :-((

வாங்க அண்ணாச்சி -> இருங்கன்னுதானே சொல்ல வந்தீங்க.... :-)))

வாங்க மு-க அக்கா -> நிறைய பேரு இப்படிதான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்... :-))

வாங்க சித்ரா -> கவுத்தாலும் நண்பர்கள் நண்பர்களே.. :-))

வாங்க விஜய் -> கிணறு மட்டும்தாங்க பாதியில் தாண்டக்கூடாது. மத்ததெல்லாம் அவ்ளோ பிரச்சினையில்லே..

வாங்க இளாஜி -> :-))))

வாங்க அறிவிலி -> நன்...

வாங்க ராஜ நடராஜன் -> பார்த்து ரொம்ப நாளாச்சே... நன்றி.. :-))

R. Jagannathan,  January 19, 2010 at 4:11 AM  

// பாதியில் நிற்கி //. Aahaa, yeppadi padhiyil niruththineergal gnabagamaai! // பாதிப்பேர்
சொன்னார்கள் -
இதற்கு பாதி அல்ல -
முழு காரணமும்
நான்தானாம். // Meedhip paadhip paerin karuththukkale mukkiyam! Nice posting. - R. Jagannathan

நிலாமதி January 20, 2010 at 3:23 PM  

ஒரு அரைபோத்த்லை ஏத்திக்கிட்டு எழுதுங்க ஐயா நல்லாய் வரும்...........

Thamira February 10, 2010 at 1:09 PM  

என்ன.. ஒரே கொலவெ..

பாலராஜன்கீதா February 11, 2010 at 5:48 AM  

ஒருவர் (அவர் யாரென்று உங்களுக்குத்தெரியும்) கணினி வாங்கச் சென்றாராம். விற்பனையாளர் அவரிடம் இந்தக் கணினியை வாங்கினால் உங்கள் வேலையில் பாதியை அதுவே செய்துவிடும் என்றாராம். வாங்கவந்தவர் விற்பனையாளரிடம் அதுபோல இரண்டு கணினிகளை வாங்கிக்கொள்கிறேன் என்றாராம். (இந்த நகைச்சுவை உங்களின் இடுகையில் முன்னரே வந்துள்ளதா ? )

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP