பத்து நிமிஷத்துக்கு முன்னாடி...
பிஞ்சுக் குழந்தைகள்
கை நீட்டி விளையாடக்
கூப்பிடும்போதும்
தாகத்தில் யாரும்
தண்ணீர் தருமாறு
கேட்கும்போதும்
மருத்துவத் துறையிலோ
எந்தத் துறையிலோ
முதலிடத்தில்
தமிழகம் என்று
அறிவிக்கப்படும்போதும்
ஒவ்வொரு தேர்தலிலும்
உங்களுக்கு சேவை செய்ய
எங்களுக்கு ஓட்டு போடுங்கள்
என்று கைகூப்பி
அமைச்சர்கள் வரும்போதும்
திரைப்படங்களில்
நாடகங்களில்
புத்தகங்களில்
எங்கேயானாலும்
பத்து நிமிஷத்துக்கு
முன்னாடி
கூட்டி வந்திருந்தா
காப்பாத்தியிருக்கலாம் என்று
மருத்துவர் கூறும்போது
பதினாறு வருடங்களுக்கு
முன் அதே
பத்து நிமிடங்களுக்கு
இழந்த என் தந்தையோடு
நினைவுக்கு வரப்போகிறவர்
வெற்றிவேல்...
9 comments:
ஹ்ம்ம்ம்.......
:( இந்தக் கொடுமை நினைவை விட்டு நீங்கவே நீங்காது...
:(
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
காலத்தால் ஆற்ற முடியாத எத்தனையோ வலிகளில் இதுவும் ஒன்று.
கண்கள் குழமாகின்றது இதை நினைக்கும் போது. போலீஸ் ஆய்வாளர் வெற்றிவேல் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திப்போம்.
Kaiaalaagaatha naangal thaan idhaip padikkirom. Amaichargalo, police-o padippargalaa? I see a lot of people trying to improve things in India and who are also doing their mite. But the politicians won't allow this to spread at any cost. I also mourn with you and that's what I can do. - R. Jagannathan
வலிக்கிறது என்பதைத் தவிர ஏதும் செய்ய முடியாத நிலையில் நாம்.
அழகான கும்மி கமெண்டுகளை சிதறச்செய்துவிட்டீர்கள். உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்க்கவில்லை.
Post a Comment