எது முக்கியம்?
எத்தனை கோவில்கள்
சுற்றினோம்
கணக்கில்லை
எத்தனை மருத்துவர்களை
பார்த்தோம்
நினைவில்லை
எத்தனை பரிகாரங்கள்
செய்தோம்
தெரியவில்லை
ஏசுவார்கள் என்று
எதிர்பார்த்து
விசேஷங்களுக்கு
போகவில்லை
ஒவ்வொரு மாதமும்
உன்னை எதிர்பார்த்து
ஒருவருக்கும் தெரியாமல்
தனிமையில் அழுதோம்
என் கண்மணியே
என் செல்லமே
அடச்சீ..
கொஞ்ச நேரம்
தள்ளி உக்காரு..
நாளைக்கும் இதே
ரோதனை
மானாட மயிலாட
பாக்கமுடியாமே
சோதனை...
10 comments:
கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..
வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக உள்ளது..
வாழ்த்துக்கள்..
super...
ஹி ஹி
தங்கள் முதல் பின்னூட்டத்திற்கு மிகவும் மிகவும் நன்றி குணசீலன் ஐயா... இந்த பக்கம் நீங்க வந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நன்றி...
ஆஹா.. கவிதையில் நிதர்சனம் நிரம்பி வழிகிறது.. ;)
நாளைக்கும் இதே
ரோதனை
மானாட மயிலாட
பாக்கமுடியாமே
சோதனை... .......ஹா, ஹா, ஹா..... நல்லா இருக்குங்க
குட்...!
நல்லா இருக்குங்க
அட்டகாசம் ச்சின்னப்பையன்.. கவிதைப் போட்டிக்கு அனுப்பவீர்கள் என்று நம்புகிறேன்.
சரியா சொன்னீங்க!! இப்ப எல்லாம் நம்ம ஊருல யாரு வீட்டுக்காவது சாயங்காலம் போனா வாங்க ன்னு சொல்லிட்டு விளம்பர இடைவேளையின் போது தான் எப்படி இருக்கீங்க ன்னு கேட்குறாங்க! தமிழிஷ் ல போட்டாச்சு!
Post a Comment