தமிழ்ப்பித்தர் தி.வெ.ச!!!
நண்பர் தமிழ்ப்பித்தர் தி.வெ.ச. ஒரு பதிவரும் கூட. அவர் இந்த வாரம் பல மைல்கற்களை தாண்டியுள்ளார். தனது 300வது இடுகையை போட்டிருக்கும் இவ்வேளையில், பதிவுலகத்தில் தன் இரண்டாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார். மணம், குணம், சுவை நிறைந்த (இவைகளில் ஒன்றிரண்டு குறையலாம்!) அவரது பதிவை படிக்க இங்கே செல்.... அட,
அதான் படிச்சிட்டே இருக்கீங்களே... அனைவருக்கும் நன்றி... (ஹிஹி. அது நாந்தான். என் பெயரை தமிழ்ப்'படுத்தினேன்'. அவ்வளவுதான்!).
*****
பல வருடங்களுக்குப் பிறகு தலைவரின் ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை' படித்தேன். அடடா.. அருமை.. அற்புதம்.. இதெல்லாம்தான் எல்லாருக்கும் ஏற்கனவே தெரியுமே.. அதுக்கென்னன்றீங்களா.. நண்பர் நர்சிம்மின் மாறவர்மன் படிக்கும்போதே, நாமும் இந்த மாதிரி ஒரு சரித்திரத் தொடர் எழுதினா என்ன என்று தோன்றும். (டேய். உனக்கெதுக்கு இந்த
வேண்டாத வேலை. சரித்திரமெல்லாம் ஒழுங்கா இருக்குறது போதாதான்னு எல்லாருமே சொல்றது கேக்குது!).
ஆனா விதி வலியது. இப்போ அந்த ஆசை கொழுந்து விட்டு எரியுது. அதனால் கூடிய விரைவில் இங்கே ‘இளவரசன் விஜயன்' நகைச்சுவைத் தொடர் - கதையில் உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ ஒருவர்தான் ஹீரோ!!!.
*****
முன்னாடியே எழுதியிருக்கணும். மறந்துட்டேன். இப்போ எங்க கிராமத்துலே பதிவர்களின் எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. ஹிஹி.. அதிகம்னா ரொம்ப அதிகமில்லே ஜெண்டில்மேன்.. என்னையும் சேர்த்து ரெண்டு பேர். நண்பர் ஆளவந்தான் இங்கே வந்திருக்கிறார். என்னமோ வேலையாம், அது ரொம்ப ஜாஸ்தியாம். அதனால் கொஞ்ச நாளா எதுவுமே எழுதலியாம். (ஆமா.. வேலைன்னா என்ன?!!) ஆளவந்தான் அண்ணே.. நம்ம கிராமத்து பேரை நிலைநாட்ட வேணாமா.. சீக்கிரமா மறுபடி எழுத ஆரம்பிங்க...
*****
என்னை மாதிரி வெளிநாட்டுலே இருக்குறவங்களுக்கு சென்னையில் (அல்லது அவங்கவங்க ஊரில்) என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்படுது - பாலம் வந்துடுச்சா - பைபாஸ் ரோடு போட்டுட்டாங்களான்ற கேள்விகள் இருக்கும். என்னைப் பொருத்தவரை தென்சென்னையில் என்ன நடக்குதுன்னு தேடிக்கிட்டே இருப்பேன். இப்படி எல்லா தகவல்களையும் ஒரே இடத்துலே கிடைக்கறதுக்கு இங்கேதான் போவேன். பல்வேறு தலைப்புகள்லே மக்கள் பேசிக்கிட்டே இருக்காங்க. எனக்கு வேண்டிய தகவல்களுக்கு கேள்வி கேட்டா யாராவது ஒருத்தர் பதிலும் சொல்றாங்க. நல்லா இருக்கு.
*****
கதை நேரத்துலே என்னோட திறமையை முன்னாடியே சொல்லியிருக்கேன். இங்கே இருக்கு. (சகோதரி ரம்யா -> ப்ளீஸ் ஸ்டாப் த சிரிப்பு!). இதோட அடுத்த கட்டம் என்னன்னா, ஊர்லே இருக்கும் ‘பெரிசுங்க' தொந்தரவு தாங்கமுடியாமே புராணக் கதைகள் சொல்லலாம்னு முடிவு பண்ணோம்.
ஹிஹி. அதுக்கு முதல்லே நமக்கு தெரியணுமே. ச்சின்ன வயசுலே படிச்சது
எல்லாம் மறந்து போயே போச்சு!. ரெண்டு புத்தகத்தை வாங்கி முதல்லே நாங்க படிச்சி அப்புறம் சஹானாவுக்கு சொல்லலாம்னு ஆரம்பிச்சா... வந்த ஏகாகூடமான சந்தேகங்களைக் கேட்டு இப்பல்லாம் நான் சீக்கிரம் தூங்கிடறேன். கொர்..கொர்..
1. மேலே அவங்களுக்கெல்லாம் குளிராதா? ஒண்ணுமே (சட்டை!) போட்டுக்காமே நிக்குறாங்களே?
2. தேவர்கள் நல்லவர்கள்னு சொல்றீங்க. அவங்க எதையும் 'share' பண்ணாமே, கெட்டவர்களோட எதுக்கு எப்ப பாத்தாலும் சண்டை போடறாங்க?
3. கடவுளுக்கே ஒரு பெரிய கயிறு கிடைக்கலியா? ஏன் பாம்பை எடுத்து கடையணும்?அந்த ஆமை வேறே.. பாவம்.
4. அவங்கவங்க (கடவுள்கள்!) சிங்கம், பாம்புன்னு வெச்சிருக்காங்க. நான் ஒரு ச்சின்ன பூனைதானே கேக்குறேன். எனக்கு வாங்கித் தர மாட்டேன்றீங்க. ஏன்?
5. தசரதனுக்கு மூணு wife-ஆ? (உண்மையான நம்பரை நான் சொல்லவில்லை!). அது எப்படி?
இதெல்லாம் ஒரு சாம்பிள்தான்.. அவ்வ்..
*****
கடைசி மேட்டருக்கு மட்டும் பின்னூட்டம் போட்டு தப்பிச்சிடாதீங்க... அப்புறம் முதல்லேந்து படிக்கலேன்னு கண்டுபிடிச்சிடுவேன். ஆமா..
*****
15 comments:
300 க்கு வாழ்த்துகள் தல.
300 க்கு வாழ்த்துகள்.
அப்புறம் அந்த கடைசி மேட்டர் நல்லாருக்கு :)
தமிழ்த்தாத்தா தி வெ ச வுக்கு வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
முதல் பாரா மட்டும் படிப்போர் சங்கம்
கோவைக் கிளை
நீங்க ஒரு வலையுலக சேவாக்!
3 centuries............. இது பெரிய விஷயங்க. வாழ்த்துக்கள்.
தமிழ்த்தாத்தா தி வெ ச வுக்கு வாழ்த்துக்கள்.
சஹானாவுக்கு அதிக வாழ்த்துகள் !!
இப்படிக்கு
முதல் பாரா மற்றும் கடிசி பாராக்கள் மட்டும் படிப்போர் சங்கம்
சிங்கப்பூர் தலைமையகம்
அடிச்சி ஆடுங்க
சஹானாவின் கேள்விகள் யோசிக்கவேண்டிய விசயம்
அடங்கொக்கமக்கா, இது வெறும் சுயபுராணப் பதிவுதானே... இதுக்கும் ரெண்டு மைனஸ் ஓட்டா... முடியலேடா சாமி!!!
//skyscrapercity.com//
நல்லா யூஸ் ஃபுல்லா இருக்கும் போல இருக்கே.
இப்படிக்கு நடுவிலும் படிப்போர் சங்கம். சிங்கப்பூர் கிளை.
2 வருடங்களில் 300 பதிவுகள்..பிரமிக்க வைக்கிறது..வாழ்த்துக்கள். இளவரசன் விஜயன் கதைக்கு ஆவலுடன் வெயிட்டிங்!! எனது பதிவுகளில் கமெண்ட்ஸ் அனுப்ப இருந்த பிரச்னையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி..
இந்த ச்சின்னப் புள்ளைங்க கேட்குற கேள்விகளுக்கு பதில் சொல்லுறதுக்குள்ள தாவு தீர்ந்திருது..அங்கயும் இந்த கதை தானா? ஏதோ..யான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் ன்னு சந்தோசப் பட்டுகிறேன்..
வாழ்த்துகள் தி.வெ.ச..
ஆஹா.. வணக்கம் தல.. இப்பொ தான் உங்க பதிவ படிக்கிறேன்.. சீக்கிரமே கடைய தொறக்கணுங்கிற திட்டத்துல தான் இருக்கேன் :)
300க்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
300 க்கு வாழ்த்துகள்
300 விரைவில் 3000 ஆக வாழ்த்துகள்
Post a Comment