என்னோட முகப்பு அட்டை வேணுமா?
நான் வேலை பாக்குற (நல்லா பாருங்க.. செய்யுற இல்லே!) கம்பெனியில் எனக்கு முகப்பு அட்டை(அட...விசிட்டிங் கார்டுதான்!) கொடுப்பாங்கன்னு நானும் பொறுத்து பொறுத்துப் பாத்தேன். அவங்க கொடுக்கறா மாதிரியே தெரியலே.
திடீர்னு ஒரு நாள் ஒரு இணைய தளத்துலே 250 அட்டைங்க இலவசமா அச்சடிச்சி தர்றேன்னு சொன்னாங்க. ஓசின்னா நம்ம என்ன செய்வோம்னு தெரியும்தானே? மொதல்லே போய் வாங்கினேன். அதோட மின்வடிவம்தான் இங்கன போட்டிருக்கேன்.
அட்டைங்க கைக்கு வந்தப்புறம் கால் கால் புரியல (தலைகால் புரியாததால் தலையையும் காலா நினைச்சிட்டேன்!). சாதாரணமா கை கொடுத்து ‘ஹலோ' சொல்றவங்களுக்கு - இடைத்தேர்தல்லே நம்ம அரசியல்வாதிங்க ஆரத்தி எடுக்குறவங்களுக்கு 1000 ரூபாய் நோட்டை மடிச்சி கொடுக்குறாப்பல - டக்குன்னு என்னோட முகப்பு அட்டையை எடுத்து நீட்டிக்கிட்டிருந்தேன். அதனால், அடிக்கடி குளம்பி சாப்பிட என் இடத்துக்கு வரக்கூடிய நண்பர்களெல்லாம், என் அட்டைத் தொல்லைக்கு பயந்து, அந்தப் பக்கம் வர்றதையே நிப்பாட்டிட்டாங்க.
ஏதோ ஒரு படத்துலே வடிவேலு கதை சொல்ல ஆரம்பிச்சி அதை முடிக்கும்போது கட்டிலோட எல்லாரும் காணாமே போற மாதிரி, என்னோட முகப்பு அட்டையோட அருமை பெருமைகளை பல நாட்கள் நான் தனியாவே பேசியிருக்கேன்!!!.
இதாவது பரவாயில்லை - வீட்டுலே சஹானாவே அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை - அப்பா, எனக்கு நீ அட்டை கொடுத்து ரொம்ப நேரமாயிடுச்சுன்னு சொல்லி என்னை ஓட்டிக்கிட்டிருந்தான்னா பாத்துக்குங்க.
ஒரு நாள் ஒரு நண்பர் வீட்டுலே குழுக்கூட்டம் நடந்துச்சு. மொத்தம் சுமார் 15 பேர் இருந்தாங்க. எல்லாருக்கும் ஒண்ணு கொடுத்துட்டு - மறக்காமே தொலைபேசுங்க.. நம்ம தளத்துக்கும் வந்துடுங்கன்னெல்லாம் சொல்லிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்துட்டு, நானும் பூச்சாண்டியிலே F5 அடிச்சி அடிச்சி பாக்குறேன் - ஒரே ஒரு ஹிட்டு கூட காணோம். அடப்பாவி பசங்களா - நான் என்ன துட்டா கேட்டேன் - வெறும் ஹிட்டுதானே கேட்டேன். அதுகூட தரலியேன்னு வருத்தப்பட்டு தூங்கப் போனேன். அடுத்த நாள் கூட்டம் நடந்த வீட்டு நண்பர் சொல்றாரு - எல்லாரும் போனப்புறம் வீட்டை சுத்தம் பண்ணா - என்னோட அட்டைங்க சுமார் 25 கிடைச்சுதாம். மக்கா எவனுமே வீட்டுக்கு எடுத்துப் போகலே. அந்த வீட்டுலேயே - நாற்காலி, சோஃபா இதுக்கு கீழேயும், அங்கங்கே கிடைச்ச சந்துலேயும் அட்டையை சொருவிட்டு போயிட்டிருக்காங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. இப்படியிருக்க F5 என்ன, F500 அடிச்சாக்கூட ஹிட்டு வராதுதானே?
தமிழ் நண்பர்கள்தான் மோசம் பண்ணிட்டாங்கன்னு எங்க வெள்ளைக்கார தலங்ககிட்டே அட்டையை கொடுத்தேன். அவங்களும் பூச்சாண்டி தளத்துக்கு வந்து பாத்துருக்காங்க. வந்தவங்க நம்ம தமிழகத்தின் விடிவெள்ளி - வருங்கால நிரந்தர முதல்வரின் படத்தைப் பாத்தும், ஜிலேபி ஜிலேபியா எழுத்தை பார்த்தும் பயந்து போய், தளத்துக்கு நாங்க வரலே. ஆனா அட்டையை மட்டும் வெச்சிக்கறேன்னு சொல்லி வெச்சிக்கிட்டாங்க. எப்படியோ, ரெண்டு பேரு அட்டையை பத்திரமா வெச்சிக்கிட்டாங்கன்னா சரிதான்னு நானும் சமாதானப் படுத்திக்கிட்டேன்.
நிலைமை இப்படியிருக்க, போன ஞாயிறு அன்னிக்கு, தமிழ்ச் சங்கப் பேரவை தன்னார்வலர்கள் கூட்டம் நடந்துச்சு. நம்ம நண்பர்கள்தான் நம்மை ஏமாத்திட்டாங்க - அந்த கூட்டத்திலேயாவது எல்லாருக்கும் கொடுப்போம்னு நிறைய அட்டைகள் கொண்டு போனேன். கேட்டவங்களுக்கு 1 வாங்கினா இன்னொண்ணு இலவசம்னு(!!) அள்ளி அள்ளி கொடுத்தேன். மிகச்சரியா கண்டுபிடிச்சிட்டீங்க. கூட்ட முடிவுலே மேஜை மேலிருந்த காகிதங்களையெல்லாம் சுத்தம் செய்துக்கிட்டிருந்தபோது - எனக்கு 2 அட்டைங்க கிடைச்சது.. :-((
அதனால், இனிமே நேர்லே கொடுத்தா வேலைக்காகாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு என்னோட முகப்பு அட்டையை இணையத்துலே பரப்பலாம்னு முடிவு பண்ணிட்டேன். உங்களுக்கு யாருக்காவது வேணும்னா சொல்லுங்க. என்னோட தபால் செலவுலேயே 5 அனுப்பி வைக்கிறேன். அட்டை உங்க கைக்கு கிடைச்ச அரை மணி நேரத்துக்குள்ளே வேறே அஞ்சு பேருக்கு கொடுத்தீங்கன்னா, உங்க தளத்துக்கு ஹிட்ஸும் உங்க காதுக்கு பட்ஸும் தங்கு தடையில்லாமே கிடைக்கும்.
17 comments:
இன்னைக்காவது முதல் டிக்கட் கிடைச்சிதே:)
கபாலி!விலாசம் மாட்டிகிச்சு.ஆட்டோ....
:))
\\ராஜ நடராஜன் said...
கபாலி!விலாசம் மாட்டிகிச்சு.ஆட்டோ....// ஆட்டோ போதுமா சுமோ ரெண்டு கூட்டிக்குங்க.. ;))
//முத்துலெட்சுமி/muthuletchumi, February 2, 2010 10:12 AM
:))
\\ராஜ நடராஜன் said...
கபாலி!விலாசம் மாட்டிகிச்சு.ஆட்டோ....// ஆட்டோ போதுமா சுமோ ரெண்டு கூட்டிக்குங்க.. ;))
//
இன்னும் ரெண்டு சுமோ ௬ட்டிகோங்க
:-)
செம பாஸ்!
அதுவும் அந்த ஆல்வேஸ் ஃபன்னி - நெஜம்!
ஏய்... இந்தப்பா... A380 ரெண்டு... நேரா போய் லெப்ட்ல திரும்பினா முட்டுச் சந்து... அங்கயே வெச்சு...
:-)))
Unmayave Always Funny thaan :)))
ஓடுங்க ஓடுங்க எல்லோரும். ச்சின்னப்பையன் முகப்பு அட்டையோட ஓடி வர்ராரு.
Always funny!
""""""'உங்க தளத்துக்கு ஹிட்ஸும் உங்க காதுக்கு பட்ஸும் தங்கு தடையில்லாமே கிடைக்கும்"""
நல்ல பதிவு
வாங்க ராஜ நடராஜன், மு-க அக்கா, நசரேயன் -> ஆட்டோ / சுமோ அனுப்புற மக்கள் அனைவருக்கும் தலா 10 அட்டைகள் பார்சல்!!!!!
வாங்க வினிதா, தாரணி பிரியா, பரிசல், மகேஷ், டி.வி.ஆர். ஐயா, நாஸியா -> அனைவருக்கும் நன்றி..
வாங்க அண்ணாச்சி -> :-))) வேட்டைக்காரன் எஃபெக்ட் கொடுக்குறீங்களே!!!
வாங்க சித்ரா, பாலாஜி -> நன்றி...
கிரேட் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்......
தாங்க முடியல சாமி, CARD தொந்தரவு இணையத்தளம் வரைக்கும் வந்தாச்சா...உஸ் ஸ்.....
satyanarayan t v
( u mean trans vetitte)
always punni..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment