கலர் பாக்கத் தெரியாதது ஒரு பெரிய குற்றமா?
இந்த அநியாயத்தை நீங்களே கேளுங்க. எல்லோரும் அவங்க வீட்டு ஆம்பளைங்க கலர் பாக்கறாங்கன்னு தெரிஞ்சா உண்டு இல்லேன்னு பண்ணிடுவாங்க. இங்கே அதுக்கு உல்டா. எனக்கு கலரே பாக்கத் தெரியலேன்னு திட்டு விழுது. அப்படி ச்சின்ன வயசுலே என்னதான் பண்ணினீங்கன்னு கேள்வி கேக்குறாங்க.. விஷயம் என்னன்னா...
******
மூணு நாளைக்கு முன்னாடி நண்பர் ஆதி ஒரு இடுகையில் என் பேரை குறிப்பிட்டு எழுதியிருந்தாலும், இணைப்பு ஆரூராருக்கு கொடுத்திருந்தார். நண்பர்கள் சொல்லியும் திருத்தாதலே, எனக்கு வரவேண்டிய ஆயிரக்கணக்கான ஹிட்ஸை திசை திருப்பி விட்டுட்டாருன்னு நான் சொன்னா, அவர் பதில் என்ன என்பதை கனம் பதிவர்கள் முன் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
(ஹிஹி. ஆதி. நோ டென்சன். ச்சும்மா ஜாலிக்குதான். ஆனா இந்த வாரயிறுதியில் நிமிஷத்துக்கு ஒரு தடவைன்னு இரவு முழுக்க பூச்சாண்டியில் F5 தட்டி கணக்கை சரிப்படுத்திடுங்க. சரியா?.)
******
இந்த வருடம் பள்ளி ஆரம்பித்து 100 நாட்கள் ஆனதையொட்டி சஹானாவின் பள்ளியில் 100 பொருட்களை வைத்து ஏதாவது செய்து கொண்டுவாங்கன்னு சொல்லிட்டாங்க. அன்னிக்கு ஆரம்பிச்சு அடுத்த மூணு நாள் ஒரே குழப்பம்தான். என்ன பண்றதுன்னே தெரியல. இணையத்துலே / நண்பர்கள்கிட்டே / அங்கே இங்கேன்னு எல்லாத்திலேயும் கேட்டு / தேடிட்டோம்.
100 ஒரு பைசா காசுகளை வெச்சி ஏதாவதொரு படத்தை வரையலாம்.
100 ச்சின்ன வளையங்களை வெச்சி ஏதாவது செய்யலாம்.
100 பேப்பர் க்ளிப்களை வெச்சி ஒரு மிருகம் செய்யலாம்.
இப்படியெல்லாம் யோசிச்சிட்டிருந்தோம்.
இணையத்துலே ஒருத்தரு சொல்லியிருந்தாரு - 100 மனித உறுப்புகளை வரிசையா ஒரு அட்டையில் எழுதி கொடுத்துடலாம்னு. யோசனை
நல்லாதான் இருந்தது. ஆனா மனித உடம்புலே மொதல்லே 100 உறுப்புகள் இருக்கான்னே எங்களுக்கு தெரியல. எல்லா உறுப்புகளையும் சொல்லப் போய் பிறகு பள்ளியில் ஏதாவது ரசாபாசமாயிடப் போகுதுன்னு அதையும் வேணான்னு சொல்லிட்டேன்.
எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு(!!). பூச்சாண்டியிலிருந்து 100 இடுகைகளை அச்செடுத்து வரிசையா புத்தகம் மாதிரி அடிச்சி கொடுத்துட்டா, பள்ளியில் எல்லோரும் அதை படிச்சி தெளிவடைஞ்சிடுவாங்கன்னு சொன்னேன். அடுத்த நாள் வரைக்கும் வீட்லே யாருமே என்னோட பேசலே. ஏன்னு தெரியல.
பேசிக்கிட்டிருக்கும்போது தங்ஸ் ஒரு ஐடியா சொன்னாங்க. 100 மிருகங்கள்/ பறவைகள் படங்களை இணையத்திலிருந்து சுட்டு, வரிசையா ஒட்டி கொடுத்துடலாம்னாங்க. நிறைய நேரம் தேடியும் 100 விதமான மிரு/பற படங்கள் கிடைக்கவேயில்லை. சுமார் 75 வரைக்கும்தான் கிடைச்சது. என்ன பண்றதுன்னாங்க. பேசாமே 50 புலி மற்றும் 50 சிங்கம் இதோட படங்களை
ஒட்டிடலாம் - மொத்தம் 100தானேன்னு சொன்னேன். ம்ஹும். நோ பேச்சு. நோ மூச்சு.
இன்னொரு முழு நாள் செலவழிச்சி 100 மிரு/பற படங்களை சேகரித்து, அதை ஒரு பெரிய தாளில் ஒட்டி கஷ்டப்பட்டு முடிச்ச அந்த ப்ராஜெக்டை படமே எடுக்காமே பள்ளியில் கொண்டு கொடுத்துட்டோம். அதனால் இணையத்திலும் போட முடியல. :-((
*****
போன வாரம் ஒரு நாள் எங்க ஊர்லே நடந்தது இது. காலையில் கடுமையான பனிப்பொழிவு, மதியம் நல்ல வெயில், பிற்பகல் சூப்பரா மழை, மாலையில் புயற்காற்று. ஒரே நாள்லே நாலு விதமான வானிலை மாறுதல்கள்.
அடுத்த நாள் பேசும்போது நண்பர் ஒருத்தர் - 2012ம் ஆண்டுக்காக கடவுள் இப்போதே தயாராயிட்டாரு. அதுக்கான ஆயத்த வேலையாதான் நம்ம ஊருக்கு வந்து இப்படி ஒரே நாள்லே எல்லாத்தையும் கொடுத்து டெஸ்ட் பண்றாரு - அப்படின்னாரு.
அவ்வ்.. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா... முடியல..
*****
பச்சை, மஞ்சள், சிகப்பு, கறுப்பு - இப்படி பல வண்ணங்கள் நம்ம அரசியல்வாதிகள் புண்ணியத்துலே தெரிஞ்சிக்கிட்டாலும், இந்த பர்பிள், ஆரஞ்ச், பிங்க் இப்படி சில வண்ணங்களை சஹானா கேக்கும்போது தப்புதப்பா சொல்லி திட்டு வாங்குவேன். அப்புறம், குழந்தைங்க புத்தகத்தை பாத்து இந்த மாதிரி நிறைய வண்ணங்கள் பேரை தெரிஞ்சிக்கிட்டேன்.
பிரச்ச்சினை இதோட முடிஞ்சுதுன்னு நீங்க நினைச்சா அது தப்பு.
அடுத்த கட்டமா - பச்சையும் மஞ்சளும் கலந்தா என்ன வரும், சிகப்பும், பிங்கும் கலந்தா என்ன வரும் - அப்படின்னெல்லாம் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதையெல்லாம் எப்படி கண்டுபிடிக்கறது சொல்லுங்க. எதையாவது குத்து மதிப்பா சொன்னா, கண்டிப்பா அது தப்பாதான் இருக்குது. நான் என்ன செய்யறது? கலர் பாக்கத் தெரியாதது என் தப்பா?
*****
9 comments:
100% colorful இடுகை. :-)
ஐயையோ!! இந்த 100 நாட்கள் பள்ளி தொந்தரவு இங்கயும் போனா வாரம் தான் முடிஞ்சுது..நல்ல வேளை எதாவது செஞ்சு கொண்டு வாங்க ன்னு சொல்லலை. ஒரு ziploc பையுல 100 பொருட்கள் போட்டு கொண்டு வந்தா போதும் ன்னு சொல்லிடாங்க. என்ன ஒரு ச்சின்ன பைக்குள்ள 100 பொருட்களைப் போடணும்னா, அதுக்கு ஆட்டுப் புழுக்கை, எலிப் புழுக்கை தான் தேடனும்ன்னு சொன்னேன். நாம சொல்லி யாரு கேட்குறா?
//
இந்த பர்பிள், ஆரஞ்ச், பிங்க் இப்படி சில வண்ணங்களை சஹானா கேக்கும்போது தப்புதப்பா சொல்லி திட்டு வாங்குவேன்
//
சூப்பரு.. நம்ம ஜாதிய்யா நீங்க.. இன்னமும் எனக்கு பர்பிள் கலரை கரெக்டா சொல்லத் தெரியாது, இதுல எங்க கலர் மிக்ஸிங் ????
Boss, பட்டைய கிளப்புங்க...
//எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு(!!). பூச்சாண்டியிலிருந்து 100 இடுகைகளை அச்செடுத்து வரிசையா புத்தகம் மாதிரி அடிச்சி கொடுத்துட்டா, பள்ளியில் எல்லோரும் அதை படிச்சி தெளிவடைஞ்சிடுவாங்கன்னு சொன்னேன். அடுத்த நாள் வரைக்கும் வீட்லே யாருமே என்னோட பேசலே. ஏன்னு தெரியல.//
இதுக்கு எல்லாம் கவலைப்பட முடியுமா ???? .... கேவலப்படுறது நமக்கு ஒன்னும் புதுசு இல்ல ...
whenever i feel alone/sad, i used to start reading of your blogs and kudkudupppai blogs....
Keep writing brother....
Karuppu
குழந்தைங்க புத்தகத்தை பாத்து..:)
கலக்கல்.
ஆண்கள் நிறைய பேருக்கு கலர் blindness இருக்கு..ஏன்னு ஒரு ஆராய்ச்சி யாராவது செய்யணும்...
ஸாரி தல.. கம்ப்யூட்டர் ஊத்திக்கிச்சு. அதான் முடியலை. பினாமி முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறேன். இன்னிக்கு சரி பண்ணிட்டேன் பாருங்கள். (இனிமே எதுக்குங்குங்கறீங்களா? என்னோட பழைய பதிவுகளையும் ஒரு நாளைக்கு 2000 பேர் படிக்குறாங்கன்னு அலெக்ஸா புள்ளிவிபரம் கூறுது)
அப்புறம் கலர் பற்றிய உங்கள் பிரச்சினைக்கு இந்தப்பதிவில் இருக்கும் ஒரு கவிதையை வாசிக்கவும். http://www.aathi-thamira.com/2009/11/blog-post_30.html
ஓ.. அந்த கலரா.. ஹிஹிஹி
Post a Comment