Friday, February 26, 2010

திருதராஷ்டிரருக்கு செலவு ரூ.50,000!!!

என்னடா இடுகை இது, சம்மந்தா சம்மந்தம் இல்லாமே இருக்கேன்னு நினைக்காதீங்க. சம்மந்தப்படுத்தி படிச்சி பாருங்க. புரியும்!!!

*****

அமெரிக்கா வந்த புதுசுலே, இங்கே இருக்கும் ஒரு நண்பர்கிட்டேயிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது - Its Blue! - அப்படின்னு. எனக்கு பேரதிர்ச்சி. அட, நேத்திக்கு நாம சுடர்மணி வாங்கினது இவருக்கு எப்படி தெரிஞ்சுது. அதுவும் கலர் வேறே சரியா சொல்றாரே? - போட்டுக்கும்போது ஒளிஞ்சிருந்து பார்த்திருப்பாரோன்னு சந்தேகப்பட்டு - நண்பருக்குத் தொலைபேசினா - அவருக்கு குழந்தை பொறக்கப் போகுதுன்னும் அது ஆண் குழந்தைன்னும் சொன்னாரு.


இங்கே இவங்களுக்கு கள்ளிப்பால் பிரச்சினை இல்லாததாலே, என்ன குழந்தைன்னு மொதல்லேயே சொல்லிடறாங்க. (மொதல்லேயேன்னா... மொதல்ல்ல்ல்ல்லேயே இல்லே. நாலைஞ்சு மாசம் ஆனப்புறம்தான்!!!). ஆண் குழந்தைன்னா blue; பெண் குழந்தைன்னா pink. மக்களும் அதுக்குத் தகுந்தாற்போல பொருட்களை தயாரா வாங்கி வெச்சிடறாங்க. அப்புறம் வாழ்க்கை முழுக்க - ஆம்பளைங்கன்னா ஆம்பள கலர், பொம்பளைங்கன்னா பொம்பள கலர்தான். மாத்தி வாங்கி வந்துட்டா ஒரே கலாட்டாதான் வீட்டுலே.


ஒரு தடவை சஹானா, நீலம் மாதிரி ஒரு குளிராடை போட்டு பள்ளிக்குப் போயிட்டு, பசங்கல்லாம் கிண்டல் பண்ணிட்டாங்களாம் - வீட்டுக்கு வந்து மொதல்லே அதை தூக்கிப் போட்டாதான் ஆச்சுன்னு அழுகை. இங்கே நிறைய இடத்துலே பழைய துணிகளை அன்பளிப்பா வாங்கிக்க கூண்டு வெச்சிருப்பாங்க. அன்னிக்கே போய், அந்த குளிராடையை ஒரு கூண்டுலே போட்டபிறகுதான் நிம்மதி ஆச்சு.


அதே மாதிரி விளையாட்டு பொருட்கள். பெண் குழந்தைகள்னா - டோரா. ஆண் குழந்தைங்கள்னா - டோராவோட ஒண்ணு விட்ட சகோதரன் டியகோ. இதுலேயும் மாத்தி விளையாட முடியாது. மாஆஆஆனப் (மாஆஆஆன = பெரிய மான) பிரச்சினையாயிடும். போன தடவை இந்தியா போயிருந்தபோது ஒரு பையனின் பிறந்த நாள் விழாவுக்குப் போயிருந்தோம். பிறந்த நாள் கேக்லே டோரா. சஹானாவோட கேள்வி - ராகுலோட பிறந்த நாளைக்கு டியகோ கேக் வாங்காமே ஏன் டோரா கேக் வாங்கறாங்க. அவன் திட்ட மாட்டானா?.


நிற்க. (ஏற்கனவே நின்றிருந்தால், உங்கள் வசதி எப்படியோ அப்படியே செய்க...) மறுபடி குழந்தை - மருத்துவமனைக்கே போவோம்.


இங்கே மருத்துவமனைக்கு போனால்லாம், 'டிப்ஸ்' கொடுக்கறது நம்ம இஷ்டம்தான். கட்டாய அன்பளிப்பு கிடையாது. சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையின் 'அன்பளிப்பு' பட்டியல் வெளிவந்ததை பாத்திருப்பீங்க. ஆம்பள புள்ள பொறந்தா ரூ.500, பொம்பள புள்ள பொறந்தா ரூ.400 - அப்படின்னு.


ஒண்ணு ரெண்டு பெத்து வெச்சிக்கிட்டிருக்கிற நமக்கே இவ்ளோ காசு கேக்கறாங்களேன்னு இருந்தா - நம்ம தல திருதராஷ்டிரருக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும். ஒவ்வொரு தடவை மருத்துவமனை போகும்போதும்
காசு கொடுத்துக்கிட்டே வந்தா 100வது குழந்தை பொறந்தபிறகு அவரோட மொத்த அன்பளிப்பு ரூ.50,000 ஆயிருக்கும். அது சரி, அவரு ராஜா, தாராளமா கொடுக்கலாம். ஆனா, நம்ம மக்கள் - பாவம்தானே.


மறுபடி நிற்க. ஒரு ச்சின்ன கற்பனை - திருதராஷ்டிரர் அரசியல்வாதியானால்!!!


1. இணை அரசர், துணை அரசர், இணை-இணை, துணை-துணை அப்படின்னு ஒரு ஐம்பது பேராவது அரசர் பதவியில் இருந்திருப்பாங்களா ?


2. ஒவ்வொருத்தரா வரிசையா அரசராயிட்டே வந்தா, அந்த 100வது மகன் எந்தக் காலத்துலே அரசராவது?


3. இல்லே அஸ்தினாபுரத்தை 100ஆ பிரிச்சி எல்லோரும் அரசரா ஆயிடுவாங்களா?


4. ஸ்விஸ் பாங்க் கிளை ஒண்ணு அஸ்தினாபுரத்துலே திறந்திடுவாங்களா? தனித்தனியா 100 அக்கவுண்ட், அப்புறம் கண்டிப்பா சில பசங்க கூட்டா வேறே அக்கவுண்ட் வெச்சிருப்பாங்க. அதனால், குறைந்த பட்சம் 200 அக்கவுண்டாவது வெச்சிருப்பாங்களா?


5. 100 பசங்கன்னா, பேரப்புள்ளைங்க 200ன்னு வெச்சிக்குவோம். அப்போ, 200 திரைப்பட நிறுவனங்களா?


6. இவ்ளோ நிறுவனங்கள் இருந்தா, படம் எடுக்க கதைக்கு எங்கே போவாங்க? உல்டா, உல்டாவுக்கு உல்டா இப்படியே எடுத்திட்டிருப்பாங்களா?


7. கௌரவ நாடு கௌரவர்களுக்கே - அப்படின்னு ஒரு இயக்கம் ஆரம்பிப்பாங்களா? ஆரம்பிச்சாலும், அவங்க பசங்களை சண்டைப் பயிற்ச்சிக்காக பாண்டவர்கள் பள்ளியில் சேத்துடுவாங்களா?


அவ்ளோதாம்பா இடுகை. துவக்குக நல்லிசையை!

*****

21 comments:

அருமையான எருமை February 26, 2010 at 6:30 PM  

அட! இன்னைக்கு முதல் ஆளா உள்ள வந்திட்டேன் போல! தல, இப்படி டோரா, டியாகோ, ப்ளூ, பிங்க் ன்னு விலாவாரியா பேசுறது, குழந்தை பிறந்தா ஆகுற செலவு பத்தி பேசுறதுன்னு ஏதோ எங்களுக்கு கோடிட்டு காட்டுற மாதிரி கீதே!!! :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) February 26, 2010 at 6:32 PM  

திருதராட்டிரரில் தொடங்கி திருக்குவளையாரில் முடித்துள்ளீர்கள்.அமெரிக்காவுக்கு ஆட்டோ வராதெனும் தைரியம் தானே!நடத்துங்க.

க ரா February 26, 2010 at 7:44 PM  

நல்லா இருக்குதே இந்த கதை.

Prabhu February 26, 2010 at 7:53 PM  

அப்போ தசரதன் நிலமை? பொண்டாட்டியே 50000 ம்னா?

துளசி கோபால் February 26, 2010 at 8:46 PM  

400 டிவி சேனல் புதுசா வருமே. அதைச் சொல்லையா? ஆளுக்கு ரெவ்வெண்டு:(

பரிசல்காரன் February 26, 2010 at 9:59 PM  

//தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையின் 'அன்பளிப்பு' பட்டியல் வெளிவந்ததை பாத்திருப்பீங்க. ஆம்பள புள்ள பொறந்தா ரூ.500, பொம்பள புள்ள பொறந்தா ரூ.400 - அப்படின்னு.//

நண்பா..

மன்னிக்கவும். வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு இப்படி தமிழகத்தைப் பற்றி தரக்குறைவாக எழுதுவது சரியா? யார் சொன்னார்கள் இந்தத் தகவலை உங்களுக்கு? இது முழுக்க முழுக்க தவறு. எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பல தொழிலாளர்கள் மூலம் நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது சரியல்ல. இனியாவது இப்படி அவதூறாக எழுதாதீர்கள்.

.

.
.
.
.
.
.
.
.
.
பெண் குழந்தைக்கு 300 தான்! 400 அல்ல. தரமுடியலைன்னா அவங்களுக்கு வர்ற ரொட்டி, ஹார்லிக்ஸ், பழங்கள் எல்லாத்தையும் வந்து பிடுங்கீட்டுப் போவாங்க.

வரலாறு முக்கியம் அமைச்சரே!

Anonymous,  February 26, 2010 at 10:44 PM  

ஆம்பிளைப்பிள்ளைகள் மக் குயின் கார்"ஐ விரும்புகிறார்கள்!!!

அமுதா கிருஷ்ணா February 26, 2010 at 11:49 PM  

திருதராஷ்டிரருக்கு ஒரு மனைவிதானா நன்கு விசாரிக்கவும்...

சின்னப் பையன் February 27, 2010 at 12:33 AM  

வாங்க எருமை மூர்த்தி -> ஹாஹா.. ஏங்க நண்பர்களுக்காக பதிவு எழுதக்கூடாதா என்ன? ஏன் சொந்தக்கதையாவே நினைக்கிறீங்க... :-)))

வாங்க யோகன் அண்ணே -> :-)) அதேதான்..

வாங்க இராமசாமி -> நன்றி..

வாங்க பப்பு -> தசரதன்... ரொம்ப கஷ்டம்... :-))

வாங்க துளசி அம்மா -> ரொம்ப நாள் கழிச்சி பாக்குறேன்... குஜராத் தொடர்லே பிஸி?. :-)))

வாங்க பரிசல் -> வாய்ப்பே இல்லே.. ஒரு நிமிடம் பக்குன்னு ஆயிடுச்சு... :-)))

வாங்க அனானி, ராபின் -> நன்றி..

வாங்க அமுதா கிருஷ்ணா -> ஒரு விசாரணை கமிஷன் போட்றுவோமா???? :-))

Anonymous,  February 27, 2010 at 2:33 AM  

சத்யா,

தளபதி, அஞ்சானெஞ்சன்னு பட்டம் 100 வேற வேணுமே?

கண்மணி/kanmani February 27, 2010 at 3:19 AM  

இன்னமும் எந்த காலத்துல இருக்கீங்க.துணை அரசர் இணை அரசர்?
ஒரு கேபினட் அமைக்கக் கூடிய அளவு எல்லா மந்திரிகளும் இருக்காங்கன்னு சந்தோஷத்துல பூரிச்சுப் போயிருப்பாரு

உண்மைத்தமிழன் February 27, 2010 at 3:19 AM  

ச்சின்னப் பையன்.. சொன்னதெல்லாம் உண்மைதான்..!

இங்கதான்.. இந்தியால பொறந்ததுல இருந்தே லஞ்சத்தை அதிகாரப்பூர்வமா நம்ம குழந்தைகளுக்குக் கத்துக் கொடுத்துக்கி்ட்டே வர்றோம்..!

பரிசலின் பின்னூட்டத்தை வெகுவாக ரசித்தேன்..!

Anonymous,  February 27, 2010 at 3:26 AM  

//இங்கே இவங்களுக்கு கள்ளிப்பால் பிரச்சினை இல்லாததாலே, என்ன குழந்தைன்னு மொதல்லேயே சொல்லிடறாங்க. (மொதல்லேயேன்னா... மொதல்ல்ல்ல்ல்லேயே இல்லே. நாலைஞ்சு மாசம் ஆனப்புறம்தான்!!!).//

அக்மார்க் சின்னப்பையன் முத்திரை....

//
பரிசல்காரன், February 26, 2010 9:59 PM

//தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையின் 'அன்பளிப்பு' பட்டியல் வெளிவந்ததை பாத்திருப்பீங்க. ஆம்பள புள்ள பொறந்தா ரூ.500, பொம்பள புள்ள பொறந்தா ரூ.400 - அப்படின்னு.//

நண்பா..

மன்னிக்கவும். வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு இப்படி தமிழகத்தைப் பற்றி தரக்குறைவாக எழுதுவது சரியா? யார் சொன்னார்கள் இந்தத் தகவலை உங்களுக்கு? இது முழுக்க முழுக்க தவறு. எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பல தொழிலாளர்கள் மூலம் நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது சரியல்ல. இனியாவது இப்படி அவதூறாக எழுதாதீர்கள்.

பெண் குழந்தைக்கு 300 தான்! 400 அல்ல. தரமுடியலைன்னா அவங்களுக்கு வர்ற ரொட்டி, ஹார்லிக்ஸ், பழங்கள் எல்லாத்தையும் வந்து பிடுங்கீட்டுப் போவாங்க.

வரலாறு முக்கியம் அமைச்சரே! //

இந்த பொழப்புக்கு அவர்கள் எங்காவது போய் பிச்சை எடுக்கலாம்...
அன்பளிப்பு என்பது நாம் சந்தோசமான தருணத்தில் நாம் பிறருக்கு கொடுப்பது....அதை கட்டாயமாக கேட்டால் அது பிச்சை...

முத்துலெட்சுமி/muthuletchumi February 27, 2010 at 5:13 AM  

:) இந்த மானப்பிரச்சனை கவனிக்கப்படவேண்டிய விசயம் தான்.. இங்கயும் பிங்க் பாட்டில் கொண்டுபோய் தலைகுணிஞ்சு வந்தன் பையன் பாவம்..

துளசி,பரிசல் கமெண்ட் சூப்பர்..

ஜீவன்சிவம் February 27, 2010 at 5:23 AM  

ச்சின்னபையன் பார்வையில் பெரிய சமாசாரம்

ஹுஸைனம்மா February 28, 2010 at 5:27 AM  

100 இளவரசர்களையாவது பொறுத்துக்கலாம்; ஆளாளுக்கு அஞ்சாறு அல்லக்கைகளாவது இருப்பாங்களே, அவங்க... ?

சாமக்கோடங்கி February 28, 2010 at 9:55 AM  

தலைப்பை சூப்பரா கொண்டு வந்து இணைசிருக்கீங்க..

தலைப்பு டெரர்...

அத விட உங்க ரித்தீஷ் போட்டோ.. மச டெரர்...

நன்றி..

ஜெய்லானி March 1, 2010 at 1:38 AM  

//ஹுஸைனம்மா, February 28, 2010 5:27 AM

100 இளவரசர்களையாவது பொறுத்துக்கலாம்; ஆளாளுக்கு அஞ்சாறு அல்லக்கைகளாவது இருப்பாங்களே, அவங்க... ?


ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Thamira March 14, 2010 at 10:39 AM  

வெளங்குச்சு.. :-))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP