Friday, February 12, 2010

தட்டச்சு நிலைய நினைவுகள்! (தொடர் பதிவு)

நம்மையும் ஒரு ஆளா மதிச்சி தொடர் ஆட்டத்தில் சேர்த்த அண்ணன் ஆதிக்கு நன்றி. எல்லாரும் காலச்சக்கரத்துலே ஏறி காலவண்டியில் உக்காந்துக்கோங்க. நாம பின்னோக்கி போறோம். ரெடியா?

******

அந்த காலத்துலே (உடனே 18ம் நூற்றாண்டான்னு கேக்கப்படாது. கொஞ்ச வருடத்துக்கு முன்னாலேதான்) பத்தாவது தேர்வு எழுதியவுடன் பசங்களை அன்றே தட்டச்சு பயிற்சிக்கு சேர்த்து விட்டுடுவாங்க. அப்படித்தான் என்னையும் ஒரு நல்ல நாள் மாலை 4 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு இடத்துலே கொண்டு போய் சேத்தாங்க.


ஏற்கனவே ஸ்கூல் லீவு. அதிலேயும் மாலை நேரம். நானும் தூக்கக் கலக்கத்தில், பயிற்சிக்கு வர்றவங்களும் தூங்கி வழிஞ்சிக்கிட்டு - பின்னணியில் வயலின் வாசிக்கிட்டு திரைப்படங்களில் வரும் சோகக் காட்சி போல் அனைவரும் அமைதியா லொட்டு லொட்டுன்னு(!!!) தட்டிக்கிட்டே இருப்பாங்க. பக்கத்தில் இருக்கும் அக்காவோட(!) பேசலாம்னா, அங்கிருக்கும்
மேற்பார்வையாளர் - என்னப்பா, ஏதாவது பிரச்சினையான்னு பக்கத்துலே வந்துடுவார். இப்படியே பயங்கர போரடிச்சி, ஒரே வாரத்துலே வீட்டுலே சொல்லாமலேயே தட்டச்சுலேந்து நின்னுட்டேன்.


அந்த நிலைய உரிமையாளர் எங்கப்பாவுக்கு தோஸ்து - போட்டுக் கொடுத்தே பேர் வாங்கும் புலவர் போல பேர் வாங்கிட்டார். மறுபடி பயிற்சிக்கு போகச் சொல்லி வீட்டுலே சத்தம்.


இந்த முறை காலையில் 6 மணிக்கு. இப்போ வயலினுக்குப் பதிலா பியானோ. ட்ரொய்ங்ங்ங்ங்... எல்லா கீயையும் வரிசையா வாசிட்டுட்டு அப்படியே கொஞ்சம் மேலே அண்ணாந்து பாருங்க. மடை திறந்து தாவும் நதியலை நான் - மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான்.. அப்படின்னு பாடாத குறைதான்.


6 மணி வகுப்புக்கு 5.45 மணிக்கு கடை திறப்பாங்க. நான் 5 மணிக்கே எழுந்து 5.30 மணிக்கு போய் நின்றிருப்பேன். சொல்லிக் குடுக்குறது எதையும் மிஸ் பண்ணிடக்கூடாது பாருங்க. அதனால்தான்.

ஒரு வழியா 6 மணி ஆனவுடன், கண்ணு ரொம்ப குளிர்ச்சி அடைய ஆரம்பிச்சிடும். அட அதிகாலை பனிமூட்டத்துலே அப்படி ஆயிடும்னு சொல்ல வந்தேங்க. வேறொண்ணுமில்லே. அப்புறம் 9 மணியானாலும் வீட்டுக்கு வரவே மனசு வராது. ஆனா எதையாவது சாப்பிட்டாகணுமேன்னு வேண்டா வெறுப்பாக திரும்பி வருவேன்.


அஞ்சாவது வரைக்கும் என்கூட படிச்ச ஒரு பொண்ணும் அங்கே டைப் அடிக்க வந்திருந்தாங்க (தற்கால மரியாதை). அஞ்சு வருஷம் கழிச்சி பாத்ததுலே ரொம்ப நேரம் பேசினோம். பேசினோம். பேசிக்கிட்டே இருந்தோம். கூடவே சேர்ந்து தட்டச்சினோம். சேர்ந்து சுருக்கெழுத்து கற்றோம். ஒரு ரெண்டு வருஷம் ஜாலியா போச்சுது.


அந்த காலவட்டத்துலே (அல்லது கட்டத்துலே) வீட்டை விட்டு எங்கே போனாலும் சம்மந்தமேயில்லாமல் அவங்க தெரு வழியா போறது பழக்கமாச்சு. புது சட்டை, புது பேண்ட், புது கைக்குட்டை அப்படின்னு புதுசா எது வாங்கினாலும் மொதல்லே அதை காட்டறதுக்கு எங்கே போவேன்னு உங்களுக்கு சொல்ல வேண்டியதேயில்லே. நல்ல வேளை நான் சாதா மேனா இருந்தேன் - அதுவே சூப்பர் மேனா இருந்திருந்தேன்னா, இன்னும் எதையெல்லாம் காட்டியிருப்பேன்னு நினைச்சி... பாக்காதீங்க. நல்லாயிருக்காது!!!.


இதுக்கு மேலேயும் ஆர்வத்தில் நான் ஏதாவது சொல்லப்போக அப்புறம் வீட்டுலே டின்னுதான்னு நினைவுக்கு வர்றதால் நேரா முடிவுரைக்கு வந்துடறேன்.


அப்படியே வேக-முன்சுற்றி (ஃபாஸ்ட் ஃபார்வர்ட்) செய்துடுங்க. அதுக்கப்புறம் இவ்ளோ வருஷத்துலே நடுவில் அவங்களை ரெண்டு மூணு தடவை பார்த்து பேசினாலும், பழைய நட்பை மறக்காமல் ஒருமையிலேயே அழைத்து பேசினார் என்பது என்றைக்கும் மறக்க முடியாத விஷயமாகும்.

*****

11 comments:

Raghav February 12, 2010 at 11:38 PM  

// மாலை நேரம். நானும் தூக்கக் கலக்கத்தில்,//

விளங்கிடும் :)
நானெல்லாம் தட்டச்சு சேராட்டாலும் அங்க போய் உக்காடுறது வழக்கம். ஹும் அந்த நாளும் வந்திடாதோ :(

Arumaiyana Erumai February 13, 2010 at 1:12 AM  

நல்ல பதிவு! இந்த தட்டச்சு நிலைய கூத்து எல்லாருடைய வாழ்விலும் வந்து போயிருக்குது போலயே! (இல்லாட்டி கம்ப்யூட்டர் சென்டர்?). உங்கள் பதிவு பழசையெல்லாம் ஞாபகப் படுத்துது! ரொம்ப விரிவா சொல்லாம ச்சின்னதா சொல்லனும்னா, தட்டச்சு நிலையத்துல பல வருடங்களுக்கு முன் நான் பார்த்த பெண், இன்றும் என் வாழ்வில்!!! ;-)

Anonymous,  February 13, 2010 at 2:55 AM  

இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பக்குரோம்... :)

Nice....

என்றும் அன்புடன்,,,
Karuppu

Anonymous,  February 13, 2010 at 2:56 AM  

இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய பாக்குறோம்..... :)

Nice....

என்றும் அன்புடன்,,,
Karuppu

அமுதா கிருஷ்ணா February 13, 2010 at 3:19 AM  

என்னமோ சொல்ல வந்து சட்டுனு முடித்த மாதிரி இருக்கு .....

ஆதிமூலகிருஷ்ணன் February 13, 2010 at 9:11 AM  

அமுதா கிருஷ்ணா said...
என்னமோ சொல்ல வந்து சட்டுனு முடித்த மாதிரி இருக்கு ..//

அதானே.. அண்ணன் ரொம்ப முன்ஜாக்கிரதையானவர்.

ஹுஸைனம்மா February 13, 2010 at 10:17 AM  

//பழைய நட்பை மறக்காமல் ஒருமையிலேயே அழைத்து பேசினார் //

இது தெரியாம, நானெல்லாம் ரொம்ப மரியாதையாவுல்ல பேசிகிட்டிருக்கேன், அவங்க வீட்டம்மா டின் கட்டிடக்கூடாதேன்னு!!

இப்பத்தான் தெரியுது ஒருமையில பேசினாத்தான் உங்களுக்கெலாம் சந்தோஷம்னு!!

Anonymous,  February 13, 2010 at 2:06 PM  

palamai pesi padivil yittathu....


udambu valaiyatha 8 maninera velai, atharkku mel oeru vinadi pani seithal atharkku yirandu madangu kooli, varathil nangu nattkal mattum velai, thangumidam martrum velaiyidathil midamana seyarkai thatpa veppam, gana nimida dhorathil cafe breakarea and Mc D'. vuyartara pathukappudan koodiya apartment or town house ll kudumbam marrum makkal. thodu dhoorathil bank, utility, online shopping, nanbarkal, movie, songs, games marrum pannattu tholaipesi through high speed internet yenum indiralogam. adivega rail, sogusana car, malivu vilaiyil petrol (gas), anaithu porutkalum nalla deal lil. ellavatrukkum mel sambadhikkum 1 dollarukku kurainthathu 45 rubai yindhiya madhippu (madam 8500 dollar sambalam padivulakukko ellai nanbarkalukko solla vendiya avasiyam ellai :-)).

piranthathu kongu Tamil nattin kukgiramam, tharpothu manaivi makkaludan vasippathu America yenum sorgapuri, Surplus nerathai selavida mattum TAMIL, TamilPadivu (Bothanai :-))

200 rubai erunthal nangu nattkal arai vayirrtudan kadanthuvida ninaikku Unmai Tamila (Truetamilans) un nilai enna? Dharapuratthan.. ethai kavanikka koodatho..


Nanum America thaan... sikako...

jaisankar jaganathan February 17, 2010 at 7:14 AM  

முதல் காதல் தோல்வி . கேக்கவே கஷ்டமா இருக்கு

கவிதை காதலன் February 17, 2010 at 7:39 AM  

- வேக-முன்சுற்றி - இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ March 24, 2010 at 5:08 AM  

கலக்கல் .
பகிர்வுக்கு நன்றி !

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP