உப்புமா - ஒரு விமர்சனம்!
என்னங்க - உப்புமா சாப்பிடும்போது கூட கணிணியில் அப்படி என்னதான் அடிக்கிறீங்களோ? சாப்பிட்டு பிறகு அடிக்கக் கூடாதா?
ம்?
நான் பேசறதாவது காதுலே விழுதா? இல்லையா?
ம். ம். விழுதும்மா. அதான் சாப்பிட்டுட்டு இருக்கேன்ல. கணிணியில் அடிக்கறதும் அதைப் பத்திதான்.
அதைப் பத்திதான்னா? உப்புமாவைப் பத்தியா?
ஆமா.
என்னத்தையோ அடிச்சித் தொலைங்க. அதை சாப்டுட்டு அடிக்க வேண்டியதுதானெ? அப்படி என்ன அவசரம்?
விமர்சனமெல்லாம் லேட் பண்ணக்கூடாதும்மா. படம் பாக்கும்போது, ஏதாவது கூட்டத்தில் இருக்கும்போது, இப்படி ஏதாவது சாப்பிடும்போதெல்லாம் உடனுக்குடன் விமர்சனம் போட்டாதான் அந்த விமர்சனத்துக்கே ஒரு மரியாதை.
என் உப்புமாவைப் பத்தி ஊர் உலகத்துக்கு சொல்றதுக்கு முன்னாலே என்கிட்டே மொதல்லே சொல்லுங்க. நல்லாயிருக்கா? நல்லா இல்லையா?
இப்படி ஓரிரு வார்த்தையில் கேட்டா எப்படி? விரிவா கேக்க மாட்டியா?
விரிவாவா? இந்த உப்புமாலே விரிச்சு சொல்றதுக்கு என்ன இருக்கு? சரி. சொல்லுங்களேன். கேட்டுத்தான் பாப்போம்.
காலாட்டிக்கிட்டு மானாட மயிலாட பாத்துக்கிட்டு அப்பப்போ நீ எடுத்து சாப்பிடணும்ன்றதுக்காக பாவம் அந்த அரிசியும், உளுந்தும் கிரைண்டர்லே பாறாங்கற்களுக்கு நடுவிலே அடிபட்டு இடிபட்டு அரைபட்டு நசுங்கிப் போகுதே.. அதைப் பத்தி நாம ஒரு நாளாவது நினைச்சி பாத்திருப்போமா?
அதைப் பத்தியே நினைச்சிட்டிருந்தா இட்லி எப்படி கிடைக்கும்? அது சரி. உப்புமா பத்தி சொல்றேன்னுட்டு இட்லியை பத்தி சொல்றீங்களே?
பேசாமே நான் சொல்றத கேளு. ஒரு ஃப்ளோவா வரும்போது நடுவில் பூந்து கலைச்சிடாதே.
உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சு. ராத்திரி பூரா கண்முழுச்சி கம்ப்யூட்டர்லே கண்டதையும் படிக்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே? நாளைக்கே அப்பாவை வரச்சொல்றேன்.
அடித்தட்டுலே இருந்தாலே வாழ்க்கை பிரச்சினைதானா? பாருங்க இந்த அடித்தட்டு இட்லியை. மேல்தட்டினால் அமுக்கி, சுருக்கி, தட்டி வைக்கப்படுகிறதே? கடைசியில், அதுவும் சரியில்லையென்று சொல்லி அதை பிசைந்து உப்புமாவாக மாற்றப்படும் கொடுமைக்கு முடிவே கிடையாதா?
ரைட்டு விடுங்க. இனிமே ஒரே ஒரு தட்டுலே மட்டும் மாவு ஊத்தி இட்லி வைக்கிறேன். எனக்கென்ன. சாப்பிடறதுக்கு நீங்கதான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணனும்.
அழுக்கா ரவா..
ஆமாங்க. எப்படி கண்டுபிடிச்சீங்க. ரவாலே பூச்சி வந்துடுச்சு. அதை சுத்தம் பண்ணனுமேன்னுதான் இட்லியை உப்புமாவா மாத்திட்டேன்.
அட. நான் உன்கிட்டே பேசலே. அடுத்த பதிவுக்கு ஒரு ஐடியா வந்துச்சு. அதைத்தான் சொல்லி பாத்துக்கிட்டேன். அழுக்காறு அவா வெகுளி... இது திருக்குறள்மா.
எனக்கு நாளைக்கு நிறைய வேலை இருக்கு. பக்கத்து ஆஸ்பத்திரியில் ஏதாவது ஒரு டாக்டர்கிட்டே உடனடியா அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குதான்னு பாக்கணும். இப்போதைக்கு சீக்கிரம் தூங்கறதுக்கான வழியைப் பாருங்க.
ஏய் ஏய். ச்சே.. முழுசா கேக்காமே போயிட்டா. சரி. நீங்களாவது எனக்குத் தொலைபேசுங்க. இணையத்துலே போடறதுக்கு முன்னாடி உப்புமா விமர்சனத்தை உங்களுக்குப் படிச்சிக் காட்டுறேன். என்ன ஹலோ.. ஏன் பதிவை மூடுறீங்க? ஹலோ ஹலோ.
9 comments:
நீங்க என் குருங்கிறதுக்காக நான் பெருமைப்பட்டுக்கிறேன். ஹிஹி..
இட்லி உப்புமாதானே?
பதிவில, நல்லா கிண்டி இருக்கீங்க.
Hi..
Romba nallaa irukku....Naan unkaloda ella blogs( from 2009 to till now) patichu mudichachu....
So Nice to read... and after reading ur blogs i am laughing like anything and i am explaining to my friends about ur blogs...
Keep writting...
I am very proud of myself to be the follower of u.. :)
இனி உங்க வீட்டுல தினமும் உப்புமா செய்யனும்னு நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்
எனக்கு ஒரு பழைய கதை ஞாபகம் வருது. புதுப் பொண்டாட்டிக்கு உப்புமா தவிர வேறு எதுவும் செய்யத் தெரியாது. மாதக்கணக்கில் மூன்று வேளையும் உப்புமாவே தின்று வெறுத்துப்போன அவன் ஒருநாள் ஹோட்டலுக்குப் போயிருக்கான். அங்க மெனுகார்டை நீட்டினால் இங்கிலீஷில் இருக்கு. படிக்க தெரிய்யாத இவனும் குத்து மதிப்பாக ஒன்றைக்காட்ட...வந்ததோ உப்புமா. வெறுத்துப்போய் அதை தின்னுக்கிட்டு இருக்குறப்ப பக்கத்து சீட்ல குளோப்ஜாமூன் சாப்பிட்ட ஒருவர் சர்வரிடம் ரிப்பீட் என்க மீண்டும் அவருக்கு குளோப்ஜாமூன் வந்தது. ஒஹோ..அப்ப குளோப்ஜாமூன் வேணும்னா ரிப்பீட்டுன்னு சொல்லனும்போலன்னு நம்பாளும் ரிப்பீட் என்க மீண்டும் வந்தது உப்புமா.
அன்புத்தோழர்,
ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். பதின்ம வயதுகளை நினைவு கூறும் ஒரு பதிவினை நீங்கள் எழுதவேண்டும் என்பது என் ஆசை. மறுக்கமாட்டீர்களென நம்புகிறேன். நன்றி.
http://www.aathi-thamira.com/2010/02/blog-post_11.html
அஃபிஷயலி உப்புமான்னு இண்டென்ஷனோட பண்ணின அரிசி அல்லது ரவா உப்மாவை மட்டும் தான் உப்மான்னு சொல்லனும். இத இட்லி உப்புமான்னு சொல்லிருக்கனும்...
வாங்க ஆதி -> ஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்க... :-)))
வாங்க சித்ரா, கருப்பு -> மிக்க நன்றிங்க.. :-))
வாங்க நாஸியா -> அவ்வ்வ்....
வாங்க அப்துல்லா அண்ணே -> சூப்பர் 'குட்டி' கதைண்ணே.. :-))
வாங்க ஆதி -> யெஸ். இப்படியாவது ஒரு பதிவ தேத்தமுடியுதேன்னு சந்தோஷமாயிருக்கேன்.. :-))
வாங்க பப்பு -> சரி சரி. இட்லி விட்டுப்போயிடுச்சு... :-(( மன்னிச்சிடுங்க.. :-))
Nalla Tamas.
Post a Comment