Friday, March 5, 2010

கதவை திறக்கவே பயமா இருக்கு...!!!

இங்கே குளிர் காலம் முடியும் தருவாயில் - மதியத்தில் 45 டிகிரி F வெயில் அடிக்க - வீட்டிலிருக்கும்போது கொஞ்சமா ஜன்னல் கதவையும், காரில் போகும்போது கண்ணாடியையும் திறந்துக்குறேன்னா - வீட்டுலே அலர்றாங்க. எந்த கதவையும் நீங்க திறக்க வேண்டாம் - 'எல்லாத்தையும்' மூடிட்டு சும்மா இருங்கன்னு அதட்டல் வேறே.

என் வாழ்க்கை முழுக்க நான் இருட்டறையிலேயே இருந்துடுவேனோன்னு பயமா இருக்கு. கதவையும் திறக்க முடியல. அதனால் காத்தும் வரலே. இதுக்கெல்லாம் ஒரே வழி - ஜெய் ச்சின்னப் பையனானந்தாய நமஹ அல்லது ஜெய் சத்யானந்தாய நமஹ. எனக்கென்னவோ ரெண்டாவது பிடிச்சிருக்கு. உங்களுக்கு?

*****

நாலு வருடம் முன்னாடி என் நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல்.

அவர்: வாழ்க்கையில் நிம்மதியே இல்லேப்பா. அதனால் நேத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ சாமியார்கிட்டே போயிருந்தேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கு.

நான்: அட, ஒரே நாள்லேயே நிம்மதி வந்துடுச்சா. ஏதாவது காசு செலவழிச்சியா இல்லே இலவசமா நிம்மதி கொடுத்தாரா?

அவர்: இலவசமா யாரு நிம்மதி தர்றா? ரூ.25,000 செலவழிச்சேன்.

நான்: #$%##$%% அடப்பாவி, அங்கே போய் ரூ.25,000 செலவழிச்சதுக்கு, அந்த பணம் தேவையாயிருக்குற எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு கொடுத்திருந்தா வாயார வாழ்த்தியிருப்பாங்க. அதுலேயே உனக்கு நிம்மதி வந்துருக்குமே.

அவர்: அவரு கடவுளை காட்டுறேன்னு சொன்னாரு. அதுக்காகத்தான் போனோம்.

நான்: (மறுபடி $%#$%%). அவர் சொன்னா, நீ நம்பிடுவியா?. சரி ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். தபால்காரர் ஒரு தந்தி வந்து கொடுக்குறாரு. "பாட்டி சீரியஸ். ஸ்டார்ட் இம்மீடியட்லி". தந்தி கிடைச்சவுடன், நீங்க பாட்டி வீட்டுக்கு போவீங்களா? இல்லே, தபால்காரர் வீட்டுக்கு போய் அழுவீங்களா?

அவர்: இதென்ன கேள்வி? தபால்காரர் வீட்டுக்கு எதுக்கு போகணும்? நான் என்ன லூசா?

நான்: அதை என் வாயால சொல்லணுமா? அந்த தபால்காரர் மாதிரி இந்த சாமியார்களும் ஒரு மிடில்மேன்தான். அவர் பாட்டியை காட்ட மாட்டாரு. நீயாதான் பாட்டி வீட்டுக்கு போகணும். புரியுதா?

*****

சென்னையில் வீட்டுலேயும் சரி, நண்பர்கள் சொன்னதும் சரி - ரெண்டு மூணு நாளா சன் டிவி போடவே பயமா இருக்கு - ஒரே மேட்டரா காமிச்சிட்டிருக்காங்க.

நான் சொன்னது - "இதுக்கு முன்னாடியும் அப்படித்தான். முன்னாடி ஏதாவது போட்டி, பாராட்டு விழான்னா குத்தாட்டம் காட்டுவாங்க. அதை ரசிச்சி பாத்துட்டிருந்தீங்க. இப்பொ நித்தி மேட்டரில் போட்டி எதுவும் இல்லேன்றதால், பயங்கர போரடிக்குது - பயமா இருக்குதுன்னு எதையாவது சொல்றீங்க. இன்னும் ஏதாவது ஒரு சாமியாரோட நகர்படமும் வந்துடுச்சுன்னா, அதை போட்டி மாதிரி செட் பண்ணி போடுவாங்க. அப்போ பாருங்க. நல்லாயிருக்கும்".

*****

எங்க வீட்டுலே தமிழ் சேனல்களை வாங்காமே இருக்க முன்னாடி தொலைக்காட்சி தொடர்கள் காரணமாயிருந்துச்சு. இப்போ சன் டிவி - மேட்டர் டிவி ஆனதிலிருந்து அடுத்த ஒரு வருடத்திற்கு அந்த முடிவில் மாற்ற்மில்லை. காசும் மிச்சம். நிம்மதிக்கும் பங்கமில்லை.

*****

சரி விடுங்க. எவ்ளோ மோசடி சாமியார் வந்தாலும் மக்கள் திருந்தப் போறதில்லே. காசை கொண்டு அங்கே கொட்டத்தான் போறாங்க. நான் ஸ்ரீஸ்ரீ சத்யானந்தாவாக ரெடி. கிளைகள் திறக்கணும்றவங்க மின்னஞ்சல் பண்ணுங்க. பதிவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு பில்லிலும் 10% கமிஷன். அப்படியே ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தை பிடிங்கப்பா. நிறைய வேலை இருக்கு. நான் கிளம்பறேன். வர்ட்டா?

*****

23 comments:

இராமசாமி கண்ணண் March 5, 2010 at 10:34 AM  

நல்லாதான் இருக்கு. சிஷ்யன் ஆகறதுக்கு அப்ளிகேஷன் போடலாங்களா :)

pappu March 5, 2010 at 10:49 AM  

ஜெய் சத்யானந்தாய நமஹ. - க்ளிக் ஆவுதே.... சரியில்லயே.. ஏற்கனவே வீரதளபதி படம் போட்டு ரவுடின்னு சொல்லியாச்ச்சு... இப்ப இன்னொரு அவதாரமா?

ரோஸ்விக் March 5, 2010 at 11:19 AM  

ஏன்ணே எல்லா சாமியார்கள் பேரும் "ஆனந்தா"-வுலே முடியுது??

நல்ல நக்கலுங்க உங்களுக்கு... நீங்களும் நம்ம கொள்கை உடையவர் போல... மீள் பதிவு போடுறதை-லையும்... :-))

மருதநாயகம் March 5, 2010 at 11:28 AM  

சீரியல் நடிகைகள் உஷார் சத்யானந்தா வருகிறார்

முத்துலெட்சுமி/muthuletchumi March 5, 2010 at 11:36 AM  

தபால்காரர் உதாரணம் எல்லா நல்லா சொல்றீங்க இப்படி ப்பட்ட கதைகள் மூலம் தான் ஆனந்தாக்கள் ப்ரபலமாகிறாங்க ..ஸோ உங்களுக்கு நல்ல ப்ரகாசமான வாய்ப்பு இருகு.. :)

போட்டி மாதிரியே செட் செய்யறதும் நல்லா இருக்கு.. எதாச்சும் டீவி கம்பெனிக்காரங்க உங்க ஐடியாக்கு காசு தராங்களான்னு பாருங்க..

Anonymous,  March 5, 2010 at 12:10 PM  

கோயமுத்தூர் எங்களுக்குதான் :))

உங்களுக்கு இங்கதான் நிறைய சிஷ்ய கோடிகள் (!?)அதிகம்...

நாஞ்சில் பிரதாப் March 5, 2010 at 12:12 PM  

என்னத்தல நாஞ்சிலானந்தாவுக்கு போட்டியாவா? பார்த்துருவோம் யாரு சக்சஸ் ஆகறாங்கன்னு :)

போஸ்ட்மேட், பாட்டி உதாரணம் சூப்பர் தல

ச்சின்னப் பையன் March 5, 2010 at 12:59 PM  

வாங்க இராமசாமி கண்ணன் -> முதல்லே டெஸ்ட்.. அப்புறம்தான் அட்மிஷன்.. ஓகேவா.. :-))

வாங்க பப்பு -> தசாவதாரத்துலே இன்னும் 8 பாக்கி இருக்கே... :-))

வாங்க ரோஸ்விக் -> ஆனந்தா ஆராய்ச்சி பண்றதுக்கெல்லாம் நேரமில்லீங்கோ. நானும் களத்துலே குதிச்சாச்சு... :-))

வாங்க மருத நாயகம் -> ஆல் காமெராஸ் ஆஃப்... :-))

Madurai Saravanan March 5, 2010 at 1:26 PM  

உண்மையிலே டி.வி. போட பயமா தான் இருக்கு. அருமை . வாழ்த்துக்கள்.

Chitra March 5, 2010 at 1:40 PM  

அன்புடையீர், எனக்கு பதிவர் முன்னுரிமையின் படி, ஸ்ரீஸ்ரீ சத்யானந்தா ஆசிரமத்தின் ஒரு கிளையின் பொறுப்புக்கு, மனு அனுப்பி உள்ளேன். தங்கள் சித்தப்படி அனுமதி வழங்க கோருகிறேன். :-)

நல்ல பதிவு.

இராமசாமி கண்ணண் March 5, 2010 at 1:49 PM  

குருவே தங்கள் சித்தம் என் பாக்கியம். என்ன பரிட்சை குருவே ?

இராகவன் நைஜிரியா March 5, 2010 at 1:59 PM  

ஓம் சத்யானந்தாய நமஹ: - இது ரொம்ப நல்லா இருக்கு.

நைஜிரியாவில் ஓப்பன் பண்ணிடலாமா?

cena March 5, 2010 at 5:54 PM  

நல்ல பதிவு, டிவி போடவே இப்ப பயமா இருக்கு. எந்த நேரத்தில எந்த சாமிய பத்தி போடபோறாங்களோன்னு.
வாழ்த்துக்கள்.

Anonymous,  March 5, 2010 at 10:53 PM  

ok. நாங்க ரெடி. அனால் நீங்க ஒரு விஷயத்தில நித்தியானந்த மாதிரியே ரொம்ப கவனமா இருக்கணும். அதாவது எக்கு தப்பா மாட்டினாலும் cd யில் நிறைய பெண்களுடன் மாட்டக்கூடாது. நித்யானந்தா அருளால் ஒரே ஒரு பெண் அதுவும் popular நடிகையுடன் மாட்டவேண்டும். அப்பதான் எல்லாரும், நடிகை பாவம் என்ற view வில் matter ஐ மறந்துடுவாங்க. அதுவும் ரொம்ப ஆபாசமா காட்டர tv ல போடுங்க. அந்த tv யை வல்லாரும் திட்டுவாங்க. நீங்க மற்ற பெண்களுடன் தப்பிச்சுக்கலாம்.

பரிசல்காரன் March 5, 2010 at 11:29 PM  

தபால்காரர் மேட்டர் (அந்த மேட்டர் இல்ல) நல்லாருக்கு.

10%கறது ரொம்ப அதிகம். இப்ப தெரியாது.. பின்னாடி தெரியும் பாருங்க...

கோமதி அரசு March 6, 2010 at 12:28 AM  

25000 செலவழித்து நிம்மதி ,இது ரொம்ப அதிகம்.

//தேவை உள்ளவர்களுக்கு கொடுத்தால் வாயார வாழ்த்தியிருப்பர்கள்,அதுவே உனக்கு நிம்மதி வந்துருக்கேமே//

இது தெரியாமல் தானே இருக்கிறார்கள், நிறைய பேர்.

நல்ல விழிப்புணர்வு கட்டுரை.

Karuppu March 6, 2010 at 5:16 AM  

எங்க ஏரியாவுல ஒரு கிளை ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்...கம்ப்யூட்டர் பொறியாளர இருந்து பிரபலமாக முடியல...அதனால உங்க கிளை அலுவலகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்...பேரு கூட ரெடி பண்ணிட்டேன்...ஸ்ரீ ஸ்ரீ கருப்பானந்தா ஸ்வாமிகள் மடம்.. எங்களுடைய தலைமை அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது.. தலைமை குரு ஸ்ரீ ஸ்ரீ சத்யனந்தா சரஸ்வதி ஸ்வாமிகள்......

ராஜ நடராஜன் March 6, 2010 at 5:50 AM  

நீங்களும் ஐக்கியமாகிட்டீங்களா:)

ராஜ நடராஜன் March 6, 2010 at 5:55 AM  

கடைசிப் பாரா டீல் ரொம்ப நல்லாயிருக்குதே!இந்த ஊருக்கு நான் தான் டீலரு:)

அமுதா கிருஷ்ணா March 8, 2010 at 2:49 AM  

ரெடிமேடாய் நிம்மதி வேண்டும் என்று பணமாய் அள்ளிக் கொடுத்து இப்பொழுது உள்ள நிம்மதியும் போச்ச்சுன்னு புலம்புறாங்க அவரின் தொண்டர்கள்...

தியாவின் பேனா March 9, 2010 at 10:46 AM  

அருமையான பதிவு வாழ்த்துக்கள்

ஆதிமூலகிருஷ்ணன் March 14, 2010 at 10:37 AM  

செமை. திருநெல்வேலி கிளையை வேணா நான் பாத்துக்கவா?

'ஆதிஸ்ரீ சத்யானந்தர்' எப்பிடி பேரு?

ரிஷி March 17, 2010 at 9:22 AM  

சென்னை கிளைக்கு நான் ரெடி !!!

எப்போ வருகை ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP