Friday, March 12, 2010

நான் ஒரு சராசரி கணவனா?

ஸ்வாமி சத்யானந்தாவைப் பார்க்க சென்னை மக்களுக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்கப் போகிறது. ஒரே ஒரு வாரத்திற்கான அந்த பயண விவரங்களை ஆசிரம வெளி'விவகார'த் துறை விரைவில் வெளியிடும்.
ஸ்வாமியை தரிசனம் செய்ய விரும்பறவங்க, வீடியோ காமிராவையெல்லாம் வீட்டிலேயே வெச்சிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தன்மத்ரா, ப்ரமரம் - மலையாளப் படங்களில் இந்த ரெண்டை மட்டும்தான் பாத்திருக்கேன். இதே மாதிரி நம்மை கட்டிப்போடும் மலையளப் படங்கள் (அஞ்சரைக்குள்ள படங்கள் கிடையாது!!!) சிபாரிசு செய்யுங்க. சென்னை வரும்போது டிவிடி வாங்கறேன்னு ஒரு இணைய நண்பர்கிட்டே கேட்டிருக்கேன். நீங்களும் சொல்லுங்க. (அண்ணாச்சி?)

*****

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) ஜூலை மாத விழாவின் வேலைகள் பல்வேறு குழுக்களுக்கு பிரிக்கப்பட்டு தற்போது அனைவரும் முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். (அடியேனும்
அதில் ஒருவன். அதனால்தான் சமீபகாலமாக பதிவு போடுவதும் குறைஞ்சிடுச்சு. ட்விட்டர் பக்கமே போறதில்லை).

தமிழார்வலர்களை விழாவில் பங்கேற்குமாறும், அதற்காக இப்போதே இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறும் விழாக்குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். www.fetna.org தளத்தில் அதற்கான விவரங்கள் கிடைக்கும். விழாவைப் பற்றிய விரிவான இடுகை ஓரிரு நாளில்.

*****

தமிழ்ப்படம் - திரையரங்கில் மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. பயங்கர அருமையா இருக்கு. அப்படி இப்படின்னு பதிவர் விமர்சனங்களைப் படிச்சிட்டு - சரி பாத்துடலாம்னு ஒரு வாரம் பிச்சிபிச்சிப் படத்தைப் பாத்து, மண்டை காஞ்சி போயிருக்கோம். ஓரிரு இடங்களில் சிரிக்க முயற்சித்தடோட சரி.

இதுக்கு டாக்டர் விஜயோட படத்தையோ, அவரது 'பேக்கரி' லொள்ளு சபாவையோ பாத்திருந்தாலே நல்லா சிரிச்சிரிக்கலாம்.

இவ்ளோ பேரு நல்லாயிருக்குன்னு சொல்லி, நான் மட்டும் நல்லாயில்லேன்னு திட்டினா, பிரச்சினை என்கிட்டேதானா? எனக்குதான் நகைச்சுவை உணர்வு குறைஞ்சிக்கிட்டே போகுதா? அடுத்த செய்திக்கும்
இதுக்கும் தொடர்பிருக்குதா? ஒண்ணுமே புரியல.

*****

இங்கே தொலைக்காட்சியில் AFV (Americas Funny Videos) அப்பப்போ போடுவாங்க. நாங்களும் பாத்து சிரிச்சிக்கிட்டே இருப்போம். சஹானா மட்டும் சிரிக்காமே உர்ருன்னு இருப்பாங்க. ஏம்மா சிரிக்கலியான்னு கேட்டா, அந்தப் பையனுக்கு கீழே விழுந்து எவ்வளவு வலிச்சிருக்கும், அந்த விபத்துக்கப்புறம் அந்தம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க - அதனால் அது நகைச்சுவையே இல்லே. எனக்கும் சிரிப்பே வரலேன்னுட்டாங்க.

இனிமே விபத்துகளுக்கோ, மக்கள் தவறி விழுந்து அடிபட்டாலோ சிரிப்பதில்லைன்னு முடிவு செய்திருக்கோம்.

*****

ஒன்றுக்கு மேற்பட்ட எண்கள் இருந்தாதான் சராசரியை கண்டுபிடிக்க முடியும்னு எல்லோருக்கும் தெரியும். அப்போ சராசரி கணவனைக் கண்டுபிடிக்க ரெண்டு/மூணு/மூணு+ பொண்டாட்டிங்க இருந்தாதான்
முடியும்னு சொல்றது சரிதானா? அப்போ என்னாலே சராசரி கணவனா ஆகவே முடியாதா? 'அவரு' மட்டும்தான் அந்த கணக்குலே வருவாரா? யாராவது பதில் சொல்லுங்க.

*****

14 comments:

அமுதா கிருஷ்ணா March 12, 2010 at 11:13 AM  

தமிழ்ப்படம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றே நிறைய பேர் சொன்னார்கள். பதிவில் தான் ரொம்ப தூக்கிவிட்டார்கள்.எனவே கவலை வேண்டாம்.சத்யானந்தா இந்தியா வரும் போது குடும்ப சகிதம் தானே வருகிறார்? இல்லை வரும் போது தனியே வந்து போகும் போது சராசரியாக போக போகிறாரா??

மருதநாயகம் March 12, 2010 at 11:46 AM  

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை விட தமிழ்ப்படம் மிகவும் ரசிக்கத்தக்கதாகவே இருந்தது

நாஞ்சில் பிரதாப் March 12, 2010 at 12:10 PM  

தல கொஞ்ச நாளா ஆணிகள் அதிகம். மெயில் பக்கமே வரலை. அதான் பதில் தரமுடில... உடனே தந்துடறேன்.

நீங்க சொன்னது சரிதான், தமிழ்ப்படம் பத்தி ஆகா ஓகோ சொன்னதைக்கேட்டு பார்த்தா சிலஇடங்களில் சிரிக்கவைக்கிறது, பல இடங்களில் வெறுப்பேத்துகிறது. சரியான மொக்கை.
ஒருவேளை ரொம்ப எதிர்பார்ததுனாலகூட அப்படி தோணலாம்.

குழந்தைங்க கள்ளம் கபடம் இல்லாதவர்கள். நல்லதையே நினைக்கிறார்கள்.

இராகவன் நைஜிரியா March 12, 2010 at 2:31 PM  

// ஸ்வாமி சத்யானந்தாவைப் பார்க்க சென்னை மக்களுக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்கப் போகிறது. //

வாழ்த்துகள். பயணம் சுகமாக அமைய வாழ்த்துகள்.

சராசரி... யப்பே... தாங்கமுடியலை

ராஜ நடராஜன் March 12, 2010 at 3:43 PM  

//குமுதம் விகடன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தமிழக மக்களிடையே தவிர்க்க முடியாத புத்தகங்களாகவே உள்ளன. இந்த இரு புத்தகங்களையும் சிலர் கண்டபடி விமர்சித்தாலும் கூட படித்துக்கொண்டு தான் உள்ளார்கள்.//

வாழ்த்துக்கள்.கூடவே குழந்தையின் மாத்தி யோசிப்புக்கும்.

Kuththuoosi,  March 12, 2010 at 6:13 PM  

I agree. Tamil Padam was given a big hype by all Bloggers...Its a Big Mokkai...

அறிவிலி March 12, 2010 at 9:29 PM  

தமிழ்ப்படம் - எனக்குள் தோன்றியதை அப்படியே 100 % சரியாக எழுதியிருக்கிறீர்கள். சன் டிவி சூப்பர் 10 நிகழ்ச்சியோ அல்லது லொள்ளுசபாவையோ 10 எபிசோட் தொடர்ந்து பார்த்தால் எவ்வளவு கொடுமையாக இருக்குமோ அதுபோல் இருந்தது.

ஸ்வாமிஜி வர்ற வழியில சிங்கப்பூர் விஜயம் செய்து அருள் பாலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi March 13, 2010 at 1:21 AM  

சஹானா சொன்னது நினைச்சுப் பார்க்கிறேன்.. ம்.. அந்த வீடியொல்லாம் பார்த்து நானும் ரொம்ப சிரிச்சிரிக்கேனே.. :(

போன வாரம் பழய வீடியோ எல்லாம் பாத்தோம். அது ல பையன் அப்படித்தான் விளையாண்டுட்டே கீழ விழுந்துட்டான் அதை பாத்த நிமிசம்.. அவன் அழுத சத்தம் கேட்டு.. அவன் என்னவோ இப்பத்தான் விழுந்த மாதிரி அரண்டு போய் உக்காந்துட்டான் பாக்க சங்கடமாகிடுச்சு.. :(

எம்.எம்.அப்துல்லா March 13, 2010 at 1:48 AM  

ஸ்வாமி சத்யானந்தாவை ஃபெட்னாவில் மீட் பண்ணுறேன். அவர் ஆசிரமத்தில்தான் தங்க உத்தேசம் :)

ஹுஸைனம்மா March 14, 2010 at 7:43 AM  

//இதே மாதிரி நம்மை கட்டிப்போடும் மலையளப் படங்கள் சிபாரிசு செய்யுங்க//

இதற்கு நீங்கள் அணுகவேண்டியது, நாஞ்சில் பிரதாப்பின் பதிவை. அவர்தான் மலையாளப் பட விமர்சனங்களின் மொத்தக் குத்தகைதாரர்.

தமிழ்ப்படம் பாத்தப்போ அப்படித்தான் எனக்கும் தோணுச்சு. முடிவு என்னன்னா, பதிவுலக விமர்சனங்களை அப்படியே நம்பிடக்கூடாது!!

ச்சின்னப் பையன் March 14, 2010 at 9:23 AM  

வாங்க அமுதா கிருஷ்ணா -> ஹிஹி.. நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க..

வாங்க மருதநாயகம் -> சரி சரி. நான் இன்னொரு முறை எரிச்சலாக தயாராயில்லைன்றதால் விதாவ பாக்கலை... :-))

வாங்க பிரதாப் -> பிரச்சினை இல்லே தல. உங்க சொந்த நேரத்தை எடுத்துக்கோங்க. (take yr own time)!!!.

வாங்க இராகவன் அண்ணே -> போன முறை உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியே...

வாங்க ராஜ நடராஜன் -> காபி/பேஸ்ட் பிரச்சினையானாலும், கமெண்ட் சரியா போட்டுட்டீங்க. :-))

வாங்க குத்தூசி -> நன்றி..

வாங்க அறிவிலி -> இந்த தடவை இல்லீங்கோ... அஞ்சு நாள் இருக்க, நாலு நாள் பயணம் செய்து போறோம்.. :-))

வாங்க சென்ஷி, மு-க அக்கா -> நன்றி..

வாங்க அப்துல்லா அண்ணே -> யாரங்கே.. கதவைத் திற. அப்துல்லா அண்ணன் வரட்டும்.. :-))

வாங்க ஹுஸைனம்மா -> ஆமாங்க. அவர்கிட்டேதான் கேட்டிருக்கேன்... நன்றி...

ஆதிமூலகிருஷ்ணன் March 14, 2010 at 10:30 AM  

AFV குறித்த சஹானாவின் பார்வை சிறப்பானது. மனதைத்தொட்டது.

கிளைமாக்ஸ் கேள்வி.. என்ன கொடுமை தல? இதுமாதிரில்லாம் உங்களை விட்டா வேறு யாரு சிந்திக்கமுடியும்.?

Mahesh March 14, 2010 at 11:08 AM  

அடாடா... சாமி சத்யானந்தா சிங்கை விஜயம்.... பத்மா லாட்ஜ் காலை 10 முதல் மாலை 4 வரைன்னு போட்டு போஸ்டர் எல்லாம் ரெடி பண்ணேனே... ரூம்ல காமிரா வெக்க பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்... ம்ம்ம்ம்.... வடை போச்சே :(

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP