Tuesday, March 16, 2010

ஃப்ரான்ஸுக்கும் வெளிநாட்டுக்கும் போகமாட்டேன்!!!

நான் கடந்து வந்த வாழ்க்கையின் பக்கங்களை திருப்பி பார்த்துக்கிட்டிருந்தபோதுதான், எவ்வளவு பெரிய தவறு ஒன்றை செய்துகொண்டிருக்கிறேன்னு எனக்கு தெரிஞ்சுது. பல வருடங்களுக்கு முன் ஒரு அர்த்த ராத்திரியில் செய்து கொடுத்த சத்தியம் ஒன்றை காப்பாற்ற முடியாமல் போனதை எண்ணி எண்ணி... சரி போதும் விடுங்க. மொத்தம் ரெண்டே ரெண்டு சம்பவங்கள்தான். ஒண்ணொண்ணா படிங்க.

*****

நூலகம், நீச்சல்குளம் (ஒன்லி வேடிக்கை!!), காலை நேரப் படிப்பு, மாலை நேர விளையாட்டு இப்படி எல்லாத்துக்காகவும் மெரினா கடற்கரைப் பக்கமே இருந்த காலம் ஒன்று இருந்தது. அப்போ வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் சேகரிக்கும் பழக்கம் வேற இருந்தது. பாக்குறவங்க எல்லார்கிட்டேயும் புது தபால்தலைகள் இருக்கான்னு கேட்டுக்கிட்டே இருப்பேன்.

கடற்கரையில் அவ்வப்போது வெளிநாட்டினரையும் பார்க்கலாம். நாங்கள் (இரு/மூவர்) அவர்களை துரத்திச் சென்று “stamp?.. coin?"ன்னு ஆங்கிலத்தில் அவங்களை கேட்டு டெரர் பண்ணியிருக்கோம்.

ஒரு தடவை ஒருவரிடம் வெளிநாட்டு நாணயம் கேட்டு வாங்கி வந்தது ஒண்ணே ஒண்ணு. ஆனால் வீட்டில் முதுகில் கிடைத்தது - குறைந்த பட்சம் பத்து. என் ஆங்கிலப்புலமை மீது அப்பாவுக்கு பலத்த நம்பிக்கை. ச்சின்னப்பையன் பிச்சை கேக்குறான்னு பரிதாபப்பட்டுதான் காசு கொடுத்திருப்பான்னு பயங்கர திட்டு. அன்னிலேந்து காசு கேக்குறத விட்டு, தபால்தலையை கேக்க ஆரம்பிச்சோம்.

கொஞ்ச நாள் கழிச்சி இன்னொருவர் சிக்கினாரு. அவரிடம் போய் நான் எப்பவும் போல் - "sir, which country?"ன்னு கேட்க, அவரோ “france"ன்னு சொன்னாரு. நான் “you have stamp?"ன்னு கேட்க, அவரோ, ‘no no go go'ன்னு கத்த ஆரம்பிச்சிட்டாரு. எனக்கு பயங்கர ஏமாற்றம். வெளிநாட்டுக்கு வர்றவன்கிட்டே தபால்தலை இல்லாமே எப்படி இருக்கும்னு ஒரே கோபம் வேறே. ஒரு பத்தடி தள்ளிப் போய் நின்னுக்கிட்டு, அவரை பார்த்து - “I dont come to france"ன்னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்ததும், அப்பாகிட்டே - வாழ்க்கையிலே நான் கண்டிப்பா ஃப்ரான்ஸுக்கு போகமாட்டேன்னு சொன்னேன்.

அந்த சபதத்தை இது வரைக்கும் காப்பாத்திட்டு வர்றேன்னா பாத்துக்குங்க!!!.

******

இனி அடுத்த சம்பவம். பக்கத்துலே ஏதாவது மிதிவண்டி இருந்தா அதில் ஏறி உக்காந்து சுர்ருன்னு சுத்துங்க. ஒரு பதினைஞ்சு வருடம் முன்னாலே போவோம்.

*****

நண்பர்கள் மொத்தம் மூணு பேரு, நோய்டாவில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு இந்தி படத்துக்கு போவோம். ஷாருக், ஐஸ், ஏ.ஆர்.ரஹ்மான் - இந்த மூணு பேர்லே யாராவது ஒருத்தர் இருக்குற படமா பாத்து போவோம். அப்படி எதுவும் கிடைக்கலேன்னா, பாத்த படத்தையே மறுபடி பாக்கவும் தயங்க மாட்டோம். அப்படி பார்த்த ஒரு படம் - ஸ்வதேஸ்.

அமெரிக்கா நாசாவில் (போன வாரம் நம்ம பழமைபேசிகூட போய் ஹெல்மெட் மாட்டி படம் புடிச்சிக்கிட்டாரே, அங்கேதான்!!) வேலை செய்யும் ஷாருக், இந்தியாவில் தன் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு, அந்த வேலையையே உதறிவிட்டு, இந்தியாவில் செட்டிலாவதாக படம்.

எங்களோட படம் பார்த்தவர்கள் அனைவரும் சீரியஸாக படத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, நாங்க மட்டும் படத்தோடு ஒன்றிப் போய், அழுதுகிட்டே உக்காந்திருந்தோம். இரவு சாப்பிட்ட சாப்பாட்டில் காரம் அதிகமாயிடுச்சு போல, அதனால்தான் அப்படின்னு தப்பா நினைக்காதீங்க. படத்துக்கு நேரமாயிடுச்சுன்னு சாப்பிடாமேயே இரவுக் காட்சிக்குப் போயிருந்தோம்.  பசி வேறே - ஷாருக் வேறே செண்டிமெண்டலா டச் பண்ணிட்டாரு. இது எல்லாமுமாக சேர்ந்து எங்களை அழ வெச்சிடுச்சு.

ஒரு வழியா படமும் முடிஞ்சுது. நடுராத்திரியில் நடந்து வீட்டுக்கு வரும்போது ஒரு நண்பர் மட்டும் தேம்பித் தேம்பி அழுதுட்டே வந்தாரு. ‘மச்சான், நாம எல்லாரும் சேர்ந்து ஒரு சத்தியம் செய்யலாமா'ன்னாரு. இந்த ராத்திரியிலா? அப்படி என்ன சத்தியம்னு கேட்டா - ஷாருக் மாதிரியே நாமும் வெளிநாட்டுக்கு போகாமே, இந்தியாவுலேயே இருந்து நம்ம தாய்நாட்டுக்கு சேவை செய்யணும்னு சத்தியம் எடுத்துக்குவோம்னாரு.

மத்த ரெண்டு பேரும் சம்மதிச்சதாலே, எங்க தெரு முனையில், மூணு (நிஜ) நாய்கள் முன்னாலே, நாங்க மூணு பேரும் மேற்படி சத்தியம் செய்துகிட்டோம்.

இது நடந்து இப்போ ஆறு வருஷமாயிடுச்சு. நாங்க மூணு பேரும் அஞ்சு வருஷமா வெளிநாட்டுலே இருக்கோம்.

*****

19 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi March 16, 2010 at 11:13 PM  

நீங்க பாட்டு சத்தியம் சக்கரை பொங்கல் ந்னு அள்ளி விட்டிருக்கீங்க.. சத்யான்னு பேரு வச்சிக்கிட்டு. :))

இருந்தாலும் சத்தியத்தைக் காப்பாற்றலைன்னு வெளிய சொல்லறதுக்கு சத்யமான மனசு வேணும்ன்னு பெருமைப்பட்டுக்கிங்க. :))))))

Anonymous,  March 16, 2010 at 11:33 PM  

எனக்கும் அந்த படம் (ஸ்வதேஸ்) ரொம்ப பிடிக்கும்....என்னோட லேப்டாப் ல எப்பவும்(இப்பவும்) இருக்கும்..
முதல் தடவை அந்த படத்த பாத்துட்டு நானும் சத்தியம் (மனசுக்குள்ள) பண்ணி இருக்கேன்...
நான் மட்டும் தான் அப்படின்னா ஊருக்குள்ள்ள இந்த மாதிரி ரொம்ப பேரு இருக்காங்க போல... :)
என்ன பாஸ் , உங்க பதிவ ரொம்ப நாலா காணோம்... எதாவது எழுதுங்க நாங்க படிப்போம் ((நல்லா இல்லாட்டாலும் )...

தேவன் மாயம் March 16, 2010 at 11:41 PM  

சத்தியத்தைக் காப்பாத்தியது பெரிய விசயம்தான்!!

Thamira March 17, 2010 at 2:08 AM  

15 வருஷம்னு சொல்லிட்டு 6 வருஷங்கிறீங்க.. என்ன ஓய்.?

Happy Smiles March 17, 2010 at 5:06 AM  

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
.
 
 
(Pls ignore if you get this mail already)

Anonymous,  March 17, 2010 at 6:22 AM  

பிரான்ஸ் மக்களுக்கு ஆங்கிலம் மீது ஈடுபாடு குறைவு பிரான்ஸில் கள்ளர்,பிச்சை தொல்லை அதிகம் சில வேளை உங்களையும் அப்படி நினனைத்திருக்கலாம்

Anonymous,  March 17, 2010 at 6:23 AM  

பிரான்ஸ் மக்களுக்கு ஆங்கிலம் மீது ஈடுபாடு குறைவு பிரான்ஸில் கள்ளர்,பிச்சை தொல்லை அதிகம் சில வேளை உங்களையும் அப்படி நினனைத்திருக்கலாம்

Sathya March 17, 2010 at 9:10 AM  

வாங்க ராகி ஐயா -> நன்றி.. விரைவில் சந்திப்போம். மெயிலறேன்...

வாங்க மு-க அக்கா -> அவ்வ். வீட்டுலே கூட அடிக்கடி சொல்வாங்க. உன் பேர் 'அசத்யா'ன்னு வெச்சிருக்கணும்னு... :-((

வாங்க கறுப்பு -> ஐ. நான் உங்கள பாத்துட்டேனே... எங்கே சொல்லுங்க பாப்போம்... :-))

வாங்க தேவன் மாயம் ஐயா -> நன்றி...

வாங்க ஆதி -> அண்ணே... என்கிட்டேயே கணக்கா.. நான் கணக்குலே புலி.. (புலிக்கு கணக்கு தெரியுமா??). 15 வருடம் -> முதல் சம்பவத்துக்கும் ரெண்டாம் சம்பவத்துக்கும் நடுவில்.
6 வருடம் -> ரெண்டாம் சம்பவத்துக்கு அப்புறம்...
இப்போ பிரியுதா???

வாங்க அனானி -> எனக்கு முன்னாடி அவர எவ்ளோ பேரு டெர்ரர் பண்ணாங்களோ? அந்த கடுப்புதான் இருக்கும்... நன்றி...

க ரா March 17, 2010 at 9:29 AM  

குசும்பு.

sriram March 17, 2010 at 9:34 AM  

உங்க கிட்ட இங்கிலாந்துன்னு போட்ட தபால் தலை இருக்கா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous,  March 17, 2010 at 10:17 AM  

என்னைய நியாபகம் வைத்திருந்ததற்கு நன்றிண்ணா !!!!!
கேபிள் சங்கர் அண்ணா வழியனுப்புதல் நிகழ்ச்சியில பார்த்து இருப்பீங்க....

சின்னப் பையன் March 17, 2010 at 11:32 AM  

வாங்க இராமசாமி கண்ணன் -> நன்றி..

வாங்க ஸ்ரீராம் -> அவ்வ். நான் கலர் கலரா ராணியோட தலையை மட்டும்தான் வெச்சிருந்தேன். (கவுண்டமணி மாதிரி அடுத்த கேள்வி கேக்காதீங்க!!). இங்கிலாந்துன்னு போட்ட த.த இல்லேன்னு ஞாபகம்... என்ன சரிதானே??

வாங்க கருப்பு -> அதே அதே... :-))

sriram March 17, 2010 at 12:46 PM  

நீங்க ராணி தலை போட்ட தபால் தலைகளை வச்சிருந்தீங்க, அப்போ....

வேணாம் நான் எதுவும் கேக்கல :)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

செந்தில்குமார் March 18, 2010 at 4:23 AM  

உங்கலுக்கு ஒர் வெளிநாட்டு வாழ் தமிழனின் வணக்கங்கள் செந்தில்குமார்..........

Mahesh March 18, 2010 at 9:57 PM  

//இது நடந்து இப்போ ஆறு வருஷமாயிடுச்சு. நாங்க மூணு பேரும் அஞ்சு வருஷமா வெளிநாட்டுலே இருக்கோம்//

அப்ப ஒரு வருஷம் சத்தியத்தை காப்பாத்திட்டீங்க... சத்யானந்தா சத்யானந்தாதான் :)

Unknown March 18, 2010 at 11:18 PM  

NASAவில் வேலை செய்ய மாட்டோம் என்று சத்தியம் செய்யவில்லையா! :)

அமுதா கிருஷ்ணா March 22, 2010 at 3:01 AM  

நிஜமாவே ச்சின்னப் பையனா இருந்தப்ப போட்ட சத்தியத்தினை காப்பாத்திட்டு இருக்கீங்க...ப்பெரியப் பையன் ஆன பின்னாடி போட்ட சத்தியம்?

தீபிகா சரவணன் March 30, 2010 at 1:34 PM  

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP