Monday, January 10, 2011

ISO 9000 - நானே கேள்வி நானே பதில்!

ISO - ஒரு முன்குறிப்பு?

** ISOவின் விருவாக்கம் - 'International Organization for Standardization'.
** உலகளவில் செந்தரங்களை உருவாக்குவதற்காக ஜெனிவாவில் 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
** 1987ம் ஆண்டு முதல் ISO 9000௦௦௦ செந்தரங்கள் உருவானது.
** 1994, 2000, 2008 ஆண்டுகளில் அந்த செந்தரங்கள் மேம்படுத்தப்பட்டன.

ISO 9000 - யாருக்கெல்லாம் பொருந்தும்?

** தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும். அதாவது சோப்பு டப்பாவிலிருந்து விமானம் வரைக்கும் தயாரிக்கும் அனைவருக்கும் ISO பொருந்தும்.
** மென்பொருள் நிறுவனங்களும் "Product" தயாரிப்பதால் அவர்களுக்கும் பொருந்தும்.
** இதைத்தவிர, (தகவல், தொழில்நுட்ப) சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கும் ISO பொருந்தும்.

ISO 9000, 9001, - இவை இரண்டும் ஒன்றுதானா? வெவ்வேறா? 9000ஐப் போல் இன்னும் என்னென்ன சான்றிதழ்கள் உள்ளன?

ISO 9000 குடும்பத்தில் சில கிளைகள் உள்ளன.

** ISO 9000 - Fundamentals and Vocabulary
** ISo 9001 - QMS - Requirements
** ISO 9004 - QMS - Guidelines for performance improvements

நிறுவனங்கள் இந்த 3 கிளைகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்ற வேண்டிய அவசியம் இருந்தாலும், 9001க்குதான் சான்றிதழ் கொடுப்பார்கள்.

9000௦௦௦ஐப் போல் இன்னும் பல சான்றிதழ்கள் உள்ளன. அவற்றில் சில:

** ISO 14000 - Environment Management Systems
** ISO 15000 - Hazards Analysis and Critical Control Point
** ISO 18000 - Occupational Health and Safety Management

ISO 9001ஐ ஒரு நிறுவனத்தில் எப்படி நிறைவேற்றுவது (implement)?

** மேற்கூறிய 9000, 9001 மற்றும் 9004ல் கூறப்பட்டுள்ள முறைகளை நன்கு படித்து தெரிந்து கொள்ளவேண்டும்.

** நம் நிறுவனத்தின் நடவடிக்கைகள், முறைநெறிகளை நன்று அறிந்து கொண்டு அதை, 9001ல் கூறப்பட்டுள்ள தேவைகளுக்கேற்ப பொருத்த வேண்டும். இந்த வேலைதான் இந்த சான்றிதழ் வாங்கும் வேலையில் மிகவும் கடினமானதும், மிகுந்த நேரம் தேவைப்படும் வேலையுமாகும்.

** அப்படி 9001ல் கூறப்பட்டுள்ள சில விதிமுறைகள் நம் நிறுவனத்திற்கு பொருந்தாது போனால், ஏன் பொருந்தாது என்ற காரணங்களை (exclusions) தனியாக ஆவணப்படுத்த வேண்டும்.

** மேற்கூறிய பொருந்தி வந்த நடவடிக்கைகளை, முறைநெறிகளை நம் நிறுவனத்தில் சரியாக நிறைவேற்ற வேண்டும் (Implement).

** இந்த நிறைவேற்றம் திருப்திகரமாக இருக்குன்னு நினைத்தாலோ, அல்லது நிறுவனத்தில் அனைவருக்கும் ISOவில் பயிற்சி தேவைப்படுமென்று நினைத்தாலோ, சான்றிதழுக்கு பரிந்துரைக்கும் நிறுவனங்கள் ஏதேனுமொன்றை தொடர்பு கொள்ளலாம்.

** அப்படி வரும் நிறுவனங்கள், நம் நிறுவனத்தின் முறைநெறிகளை தணிக்கை செய்து, அதன் வெளியீட்டைப் பொறுத்து மேற்கொண்டு நடவடிக்கைகளை பரிந்துரைப்பார்கள்.

ஒரு தடவை ISO 9001 தரச்சான்றிதழை வாங்கிட்டா, அப்புறம்?

** தரம் - எப்படி ஒரு தரம் (தடவை) மட்டும் செய்யும் வேலையில்லையோ, அதே போல்தான் தரச்சான்றிழும்.

** ISOவைப் பொறுத்தவரை, தணிக்கைகள் ஒவ்வொரு வருடமும் செய்யப்பட வேண்டும்.

** அந்த தணிக்கையில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால், உடனடியாக அவை களையப்பட வேண்டும்.

ISOவின் நன்மைகள் என்னென்ன?

இந்த நன்மைகளை நாம் ஏற்கனவே நிறைய தடவை பாத்துட்டோம். இருந்தாலும் இன்னொரு தடவை இங்கே.

** நம் முறை நெறிகளின் வெளியீட்டின் தரம் உயரும்.
** வாடிக்கையாளரின் திருப்தி அதிகரிப்பு.
** சட்ட / ஒழுங்குமுறைகளின் தேவைகள் நிறைவேற்றம்.
** ஒட்டுமொத்த மேலாண்மையில் முன்னேற்றம்.

*****

8 comments:

பழமைபேசி January 10, 2011 at 3:55 PM  

//அந்த தணிக்கையில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால், உடனடியாக அவை களையப்பட வேண்டும்.
//

இது போட்டு வாங்குற வேலையாவல்ல இருக்கு? காசு வாங்குறதே தப்பான காரியம்... அதுல வேற, ஒடனே தரணுமாம்?? நடத்துங்க இராசா!!!

பழமைபேசி January 10, 2011 at 3:57 PM  

//நானே கேள்வி நானே பதில்//

நானும் ஒரு கலைஞர்னு சொல்ல வர்றீங்க? அப்படித்தானுங்ணே??

பழமைபேசி January 10, 2011 at 3:57 PM  

//குடும்பத்தில் சில கிளைகள் உள்ளன.//

இதை குறிச்சுகோங்கப்பா...இதை குறிச்சுகோங்கப்பா...

பழமைபேசி January 10, 2011 at 4:00 PM  

//முறைநெறிகளை நம் நிறுவனத்தில் சரியாக நிறைவேற்ற வேண்டும்//

சந்தடி சாக்குல நம் நிறுவனம்னு சொல்லி வளைக்குற சூட்சுமம் இதாம்போல இருக்கு?!

அண்ணன்டா, நம்ம அண்ணன்டாங்ற கதையா, நிறுவனம்...எல்லாமே நம்ம நிறுவனந்தான்....

பழமைபேசி January 10, 2011 at 4:02 PM  

//சட்ட / ஒழுங்குமுறைகளின் தேவைகள் நிறைவேற்றம்//

நல்லாக் கேட்டுகோங்கய்யா.... சட்டம் ஒழுங்கோட தேவைகளை நாம பூர்த்தி செய்யணுமாம்... நானே கேள்வி, நானே பதில் நாயகன் தெளிவா சொல்ட்டாரு!!!

வடுவூர் குமார் January 11, 2011 at 11:07 AM  

ஆனால் இம்முறை கட்டுமானத்துறையில் அவ்வளவு பெரிய ரிசல்ட் கொடுப்பதில்லை என்பது என் எண்ணம்.

Sudha,  January 12, 2011 at 5:48 AM  

I am not able to read your blog continuously for a min, page cannot be displayed error.Dont know why? Check with your blog settings or your other readers.

nagoreismail February 27, 2011 at 11:46 PM  

Dear Sir,

Please correct me if I am wrong..

It is not ISO 18000

It should be OSHAS 18000

THe Occupational Health and Safety Assessment Series (OSHAS) is a result of collaboration between 13 internationally recognised standards organisations. It describes a health and safety management system, which is thorougly compatible with IS0 9001 and ISO 14001.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP