Wednesday, January 5, 2011

டென்சனை குறைங்க! டென்சனை குறைங்க!!

நேற்றைக்கு ரொம்ப நேரம் விவேக் ஜோக்குகளை பார்த்துக்கிட்டிருந்ததால் நானும் ஏதாவது கருத்து சொல்லலாம்னு கிளம்பிட்டேன். படிச்சிட்டு டென்சனாகாதீங்க. ஏன்னா, பதிவே டென்சனைக் குறைப்பது எப்படின்றதுதான்.

நீங்க கடவுள் இல்லை!

உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் நிறைய இருக்குன்னு தெரிஞ்சிக்கோங்க. அப்படிப்பட்ட விஷயங்களுக்காக நீங்க வருத்தப்படாமல், பேசாமே அந்த வருத்தங்களை outsource பண்ணிடுங்க. அதுதான் உடம்புக்கு நல்லது. உதா: வடநாட்டுப் பெண்மணியும் தென்நாட்டுப் பெண்மணியும் தொலைபேசியதை உங்களால் வெறும் கேட்கத்தான் முடியும். வேறெதாவது செய்ய முடியுமா?

தமிழக அரசுக்கு உதவாதீங்க.

டென்சனைக் குறைக்க தண்ணி அடிக்காதீங்க. அதனால் டென்சன் குறையாது. அப்படின்னா, தம் அடிக்கலாமான்னு கேக்காதீங்க. மூச். கூடவே கூடாது. எனக்குத்தான் ஓவியம் வரையத் தெரியாதே. அப்புறம் சுவர் எதுக்குன்னு கேக்காதீங்க. 'சுவர்' கண்டிப்பா தேவை. பாத்துக்குங்க.

மிட்நைட் மசாலா வேண்டாம்.

சீக்கிரம் படுத்து தூங்கற வழியைப் பாருங்க. டென்சனைக் குறைக்கறதுக்கு நீண்ட இரவுத் தூக்கம்தான் நல்ல மருந்துன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதுக்காக ஆபீஸ்லே தூங்காதீங்க. தூங்கினாலும் வேலை போகாமே இருக்க நீங்க ஒண்ணும் பாராளுமன்றத்தில் வேலை செய்யலே!

மிருகமா மாறிடுங்க!

சாப்பிடுற விஷயத்துலே மிருகமா மாறிடுங்கன்னு சொல்ல வந்தேன். பசி எடுத்தபிறகு சாப்பிடுங்க. overload பண்ணாதீங்க. ஆத்துலே போடும்போதே அளந்து போடும்போது, ஆத்துலே (வீட்டுலே) உக்காந்து வயித்துக்குள் போடும்போது அளந்து போடாமே இருக்கமுடியுமா.

நாயைப் பாத்து கத்துக்குங்க.

ஏதாவது ஒரு நாய்க்கு தொப்பை இருந்து பாத்திருக்கீங்களா? ஏன்? அது நாள் முழுக்க ஓடிட்டே இருக்கு. உங்களையும் அதே மாதிரி நாள் முழுக்க ஓடச் சொல்லலே. ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது ஓடுங்க. உடற்பயிற்சி செய்யுங்க.

சைட்லே பாக்காதீங்க!

நேர்மறைன்னு ஒரு வார்த்தை இருக்கான்னு கவலைப்படாமே நேர்மறையா இருங்க / பேசுங்க / யோசிங்க. அப்பத்தான் யார்கிட்டே என்ன (பொய்) சொன்னோம், என்ன பேசினோம்னு நினைவில் வெச்சிக்க வேண்டாம். Excel கோப்பில் நிறைய ஃபார்முலா இருந்தா, சேமிக்கறது கஷ்டம். ஜிம்பிளா இருங்க.

பைத்தியமாயிடுங்க.

தனக்குத்தானே பேசிக்கோங்க. அட, வாய் விட்டு இல்லேங்க. மனசுக்குள்ளே. அப்படி பேச முடியலியா, அமைதியா உக்காருங்க. எவ்ளோ புலன் முடியுதோ அவ்ளோ புலன்களை அடக்கி தினமும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.

ஒரு வேலை ஒரே வேலை

தொகா பெட்டியில் சன் டிவி, ஜெயா டிவின்னு நூறு சேனல்கள் இருந்தாலும், ஒரு சமயத்தில் ஒரு டிவி பாத்தாதான் நல்லாயிருக்கும். அதே மாதிரி ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையை செய்யுங்க. டென்சனை குறைங்க.

*****

9 comments:

sibikargil23@gmail.com January 5, 2011 at 11:03 AM  

நல்ல ஆலோசனை நண்பரே ,நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi January 5, 2011 at 10:20 PM  

ரொம்ப நல்ல அறிவுரைகள். நேர்மறை என்று ஒரு வார்த்தை இருக்கிற்து..:)

Prathap Kumar S. January 5, 2011 at 10:57 PM  

இருங்க ஒரு நிமிசம் சொறிஞ்சுட்டு வந்துடறேன்.... புல்லரிக்குது... :))

என்னது நாய்களுக்கு தொப்பை இல்லயா? நீங்க சொல்றது தெருநாயைப்பத்தி...
ஜீம்மி, பப்பின்னு பேரு வச்சு பென்ஸ் கார்ல மட்டுமே சுத்துற நாய்களை நீங்க பார்த்ததேயா இல்லயா? என்னக்கொடுமை சார் இது :))

சேக்காளி January 6, 2011 at 3:53 AM  

//உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன்.//
இதுவரை யாரையாவது பார்த்தீர்களா?

Unknown January 6, 2011 at 4:33 AM  

ரைட்.. ரைட்..

ஈரோடு கதிர் January 6, 2011 at 9:02 PM  

பெரிய பையன் பார்வைகளாய்!

Anonymous,  April 10, 2011 at 12:45 PM  

Always like the sense of humor in your blogs..good suggestions..thank you.

ReeR February 3, 2013 at 2:07 AM  

நல்ல ஆலோசனைகள்

நன்றி.

www.padugai.com

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP