தொ(ல்)லைபேசி - அரைபக்கக் கதை
நேரம்: விடியற்காலை 4 மணி
இடம்: அமெரிக்காவில் எங்க வீடு
செய்துகொண்டிருப்பது : காலையில் 4 மணிக்கு என்ன செய்வாங்க, தூக்கம்தான்.
***
ட்ரிங் ட்ரிங்..
”என்னங்க, தொலைபேசி அடிக்குது பாருங்க. போய் எடுங்க”.
”யாரும்மா இந்த நேரத்துலே. நீயே போய் எடு”.
”என்னங்க. இந்தியாவிலேந்து வருது. ஆனா நம்பர் யார்துன்னு தெரியல. உங்க அம்மாவா இருக்குமோ.. அவங்கதான் இப்படி நேரம்காலம் தெரியாமே தொலைபேசுவாங்க”.
”ச்சேச்சே.. அதெல்லாம் ரொம்ப முன்னாடிம்மா. இப்போதான் அவங்களுக்கு நேர வித்தியாசம் தெரிஞ்சிடுச்சே”.
”சரி. ஆனா எனக்கு இந்த அழைப்பை எடுக்க பயமா இருக்கு”.
”கட்டாயிட போகுது. ஆமா. நீ உங்க பாட்டிகிட்டே பேசினியோ”?
”மொதல்லே வாயை கழுவுங்க. நேத்துதான் பாட்டியோட பேசினேன். அவங்க நல்லாதான் இருக்காங்க”.
(இதற்கிடையில் தொலைபேசி அழைப்பு நின்றுவிடுகிறது).
”ஒரு வேளை உங்கப்பா புறப்பட்டு அமெரிக்கா வர்றேன்னு சொல்ல தொலைபேசறாரோ என்னவோ? கட்டானதும் நல்லதுதான்”.
”ம்கும். அவரை வம்பு இழுக்கலேன்னா உங்களுக்கு தூக்கம் வராதே. அந்த விஷயத்துக்கு எதுக்கு இவ்ளோ சீக்கிரம் கூப்பிடப்போறாரு. யாருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. ஆண்டவா.. எதுவும் கெட்ட செய்தியா இருக்கக்கூடாது. இந்தியா வரும்போது, உன் கோயிலுக்கு வந்து நெய் விளக்கு ஏத்தறேன்”.
”சரி சரி புலம்பாதே. அழைப்பை எடுக்கவும் இல்லே. இப்போ தூக்கமும் போச்சு”.
”உங்களுக்கென்ன. ஆபீஸ் வேலையிருக்குன்னு போயிடுவீங்க. நான்தானே வீட்டில் உக்காந்து யார் போன் பண்ணாங்களோன்னு பயந்துட்டே இருக்கறது”.
”அதுக்கென்ன இப்போ, காலையில் எல்லாருக்கும் நீயே போன் பண்ணி பேசிடு. இப்போ வந்து தூங்கற வழியைப் பாரு”.
(மறுபடி ட்ரிங் ட்ரிங்...)
”ஹலோ. ஹலோ”.
”...”
”யெஸ்.. ஆமா. சொல்லுங்க”.
“...”
“நீங்க யார் பேசறீங்க? உங்களுக்கு யார் வேணும்?”
“...”
டொக்.
“காலங்கார்த்தாலே ரோதனையா போச்சு இந்த ராங் நம்பரோட. நாடு விட்டு நாடுகூடவா பண்ணுவாங்க இந்த ராங் நம்பர்காரங்க.”
*****
6 comments:
//காலங்கார்த்தாலே ரோதனையா போச்சு இந்த ராங் நம்பரோட. நாடு விட்டு நாடுகூடவா பண்ணுவாங்க இந்த ராங் நம்பர்காரங்க.”//
ஆமாம் , சில நேரம் அதிகாலை அழைத்து எங்க நிறுவனம் வழங்கும் தொலை அட்டை (prepaid phone card )உபயோகித்து இந்தியா பேசினால் (less than vonage service)
விட குறைவு என்றும் சொல்லுவார்கள்
இந்த ராங் நம்பர் தொல்லை - தூக்கமும் போயிடும் - கவலயும் அதிகரிக்கும் - என்ன செய்யறது
எச்சரிக்கை:
"குறட்டை" புலி உலா வருகிறது.
வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது.
--- sleepingtiger007.blogspot.com
எச்சரிக்கை:
"குறட்டை" புலி உலா வருகிறது.
வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது.
--- sleepingtiger007.blogspot.com
adappavame...
நல்ல கதைங்க.. ஆரம்பத்துல இருந்து முடிவு வரைக்கும் விசயம் ஒன்னும் இல்லைனாலும் சுவாரசியமாக இருந்தது..
Post a Comment