சொன்னதையே செய்! செய்வதையே சொல்!!
நிறைய விளம்பரங்களில் - இது ஒரு தரமான பொருள் - அப்படின்னு சொல்லியிருப்பாங்க. இதுலே ‘தரம்’னா என்ன?
** தர நிர்ணயம்
** தரக் கட்டுப்பாடு
** தரப் பொறியியல்
** தர மேலாண் அமைப்பு -
இப்படி பல தொழில்நுட்ப வார்த்தைகளுக்குப் போவதற்குமுன், ‘தரம்’னா என்னன்னு தெரிஞ்சிக்க வேண்டியது அவசியம்.
ஒரு பொருளை வாங்க கடைக்குப் போறீங்க. அந்தப் பொருள்
** நீங்க எதிர்பார்த்த மாதிரியே இருக்கா?
** உங்க தேவைகளை பூர்த்தி செய்யுதா?
** உங்களுக்கு கட்டுப்படியான விலையில் கிடைக்குதா?
** நீங்க எதிர்பார்த்த வாடிக்கையாளர் சேவை கிடைக்குமா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் ‘ஆமா’ன்னு பதில் சொன்னீங்கன்னா, அதை நுகர்வோர் பார்வையிலான ‘தரம்’னு சொல்லலாம்.
இதையே இன்னொரு கோணத்திலிருந்து பாத்தா -
** சரியான பொருளை தயாரிச்சிருக்கோமா?
** சரியான வழியில் தயாரிச்சிருக்கோமா?
** முதல் தடவையே சரியா வந்திருக்கா?
** திட்டமிட்ட நேரத்திலேயே தயாரிக்க முடிஞ்சுதா?
இவை தயாரிப்பாளருக்கான கேள்விகள்னு பாத்தவுடனேயே தெரிஞ்சிருக்கும். எல்லாத்துக்கும் அவர் ‘ஆமா’ன்னு பதில் சொல்லிட்டாருன்னா, அதை தயாரிப்பாளர் பார்வையிலான ‘தரம்’னு சொல்லலாம்.
ஆனா, நடைமுறையிலே எல்லா கேள்விகளுக்கும் ‘ஆமா’ன்னு சொல்ல முடியுமா? எல்லாத்திலேயும் ஏதாவது ஒரு குறை இருக்குமில்லையா?
அதாவது -
தயாரிப்பாளர் தரப்பில் - செய்ய நினைத்த பொருளுக்கும் - உருவான பொருளுக்கும் உள்ள வித்தியாசம் -- (அ)
நுகர்வோர் தரப்பில் - வாங்க நினைத்த பொருளுக்கும் - வாங்கிய பொருளுக்கும் உள்ள வித்தியாசம் -- (ஆ)
(அ) மற்றும் (ஆ) - இந்த இரு வித்தியாசங்களையும் தவிர்ப்பது அல்லது குறைப்பதே - ஒவ்வொரு நிறுவனத்திலிருக்கும் தர நிர்ணயத்துறைக்கான (Quality Assurance) வேலையாகும்.
**
** சொன்னதையே செய
** செய்வதையே சொல்
** இந்த இரண்டையும் நிரூபி
** தொடர்ந்து தரத்தை உயர்த்து
மேலே சொன்ன இந்த நான்கும்தான் இந்தத் துறையின் தாரக மந்திரமாகும்.
இதை அடைய ஒவ்வொரு நிறுவனமும் நிறுவ வேண்டிய ஒன்றுதான் - தர மேலாண் அமைப்பு (Quality Management System).
இந்த தர மேலாண் அமைப்பையும், அதன் உள்கட்டமைப்பையும் அடுத்த பகுதியில் விரிவாக பார்ப்போம்.
**
இந்தப் பகுதிக்கான கேள்விகள்:
** நாய்களுக்கான பிஸ்கட்கள் தரமானவையென்று எப்படி தெரிந்து கொள்வது? (ஒரு பொருளின் தரத்தை நுகர்வோர்தான் தீர்மானிக்கிறார்கள்னு பாத்தோமே!)
** தரத்தை நிறுவுவதற்கும், அதை தொடர்ச்சியாக உயர்த்துவதற்கும் ஒரு நிறுவனத்திற்கு அதிக செலவாகுமே? அவ்வளவு செலவு செய்து தரத்தை எட்டித்தான் ஆகவேண்டுமா?
*****
6 comments:
//நாய்களுக்கான பிஸ்கட்கள் தரமானவையென்று எப்படி தெரிந்து கொள்வது?//
கரீட்டு நாயக்கு ஆமா இல்லைன்னு சொல்லத்தெரியாதே....
ஏன் கொஞ்சமா எழுதறீஙக... ஒரு வருசத்துக்கு இதைவச்சே ஓட்டிரலம்னு ஐடியாவா??
முழுசா எழுதுங்க...நறிய டவுட்ஸ் கீது... மொத்தமா கேக்கறேன்....
/
நாய்களுக்கான பிஸ்கட்கள் தரமானவையென்று எப்படி தெரிந்து கொள்வது?
/
எங்கூட்டுக்காரி வாங்கிக்குடுக்கிற மாரி கோல்ட் பிஸ்கட் தரமாகவே உள்ளது
இப்படிக்கு
நன்றியுள்ள
:):)
நல்ல பதிவு சின்ன பையர்
வாங்க நா.பி -> இன்னும் கொஞ்சம் நீளமா எழுதறேன். போரடிச்சிடுமோன்னு பயமா இருக்கு. அதான். கேள்விகள் இருந்தா கேட்டுடுங்க. ஒரு தனி பதிவா(லா) போட்டுடறேன்... நன்றி..
வாங்க ம.சி -> நன்றி.
நாய்களின் வளர்ச்சியில் அதை அறியலாம். மருத்துவர்களின் சிபாரிசால் அதனை வாங்கலாம்.
>>தரத்தை நிறுவுவதற்கும், அதை தொடர்ச்சியாக உயர்த்துவதற்கும் ஒரு நிறுவனத்திற்கு அதிக செலவாகுமே? அவ்வளவு செலவு செய்து தரத்தை எட்டித்தான் ஆகவேண்டுமா?<<
தரம் தானே ஒரு நிறுவனத்தை நீடித்து நிற்க உதவும். அதனால் தரம் என்பது அவசியம். தரமான பொருள் அதிக செலவில் தான் கிடைக்கும். மக்கள் அப்பொழுது தானே அந்த பொருளை மீண்டும் வாங்குவர். தரம் மக்களை திருப்தி படுத்துவது மட்டுமல்லாமல் லாபத்தையும் அதிகரிக்க செய்யும். என்றுமே தரமான பொருள்களுக்கு மவுசு ஜாஸ்தி தானே
Post a Comment