நான் ஒரு நாளும் தலைவன் ஆகமுடியாது!
நான் ஒரு நாளும் தலைவன் (leader) ஆகவேமுடியாதுன்றத இன்னிக்குதான் தெரிஞ்சிக்கிட்டேன். என்ன நடந்தது. வழக்கம்போல் பதில் - இடுகையில்.
****
போன வாரம் ஒரு நாள். சஹானாவை தூக்கி கீழே போடுவதைப் போல் விளையாடிக் கொண்டிருந்தேன். அவரோ கொஞ்சம் கூட பயப்படாமல் சிரித்துக் கொண்டே இருந்தார். பயமா இல்லையாம்மான்னு கேட்டதற்கு - ம்ஹூம். நீங்க என்னை கீழே போடமாட்டீங்கன்னு தெரியும். அப்புறம் நான் ஏன் பயப்படணும்னாங்க.
நான் ஜென் கத்துக்கும் ஒரு ஆசாமியாகவோ அல்லது (ஜோதா) அக்பராகவோ இருந்தால், அந்த நேரத்தில் என் தலைக்குப் பின்னால் ஒரு ஒளிவெள்ளம் வந்து எனக்கு ஞானம் வந்திருக்கும். ஆனா நான் ஒரு ஞான0 ஆகையால், வெறும்னே சிரித்துவிட்டு - பத்து நிமிஷமா பாக்காத ட்விட்டரைப் பாக்க உட்கார்ந்தேன்.
****
எங்க ஊர்லே இருக்கும் நூலகம் இலவசம்தான் என்றாலும், வாங்கிய புத்தகத்தை / குறுந்தகடை தாமதமா திருப்பிக் கொடுத்தா, அபராதம் மட்டும் வாங்கிடுவாங்க. என் மாதிரி சிலர் இருப்பதால், அபராதத்தொகையில் அவங்களுக்கு சரியான வசூல்!
ஒரு ஆறு மாதமா என் அட்டையில் ஒரு $10 அபராதத்தொகை இருந்தது. நானும் சரி, இப்ப கட்டலாம், அப்ப கட்டலாம்னு கட்டாமலேயே இருந்தேன். நமக்கு யாராவது பணம் கொடுக்கணும்னா ஞாபகம் இருக்கும் - அதையே நாம கொடுக்கணும்னா? ம்ஹும்.
இதற்கிடையில் ஒரு நாள் என் நூலக அட்டை காலாவதி ஆயிடுச்சு. அடுத்த தடவை போய் அதை புதுப்பிச்சிட்டு, என் அபராதத் தொகை எவ்ளோம்மான்னு கேட்டா - $0 ன்னு சொன்னாங்க.
இல்லையே, $10 பாக்கி இருந்ததே - அதை கட்டலாம்னுதான் வந்தேன்னு சொன்னேன்.
அப்போதான் சொன்னாங்க - அவங்க மென்பொருளில் ஒரு சிறு பிரச்சினை இருக்காம். அதாவது காலாவதியான அட்டையை புதுப்பிக்கும்போது அதிலிருந்த பழைய பாக்கியெல்லாம் போயே போச்!
இவங்க மென்பொருளை நம்ம கம்பெனிக்காரங்க பண்ணலியே? அப்புறம் எப்படி பிரச்சினை வந்துச்சுன்னு எனக்கு சந்தேகம் வந்துச்சு.
சரி அதை அப்புறமா பாத்துக்கலாம்னு சொல்லிட்டு - சரிம்மா. முன்னாடி $10 பாக்கி இருந்துச்சு. இந்தாங்க புடிங்கன்னு சொன்னா - நோ நோ! கணிணியில் காட்டாத பாக்கியை நாங்க வாங்கிக்க மாட்டோம். அடுத்த தடவையிலிருந்து பாக்கியை உடனுக்குடன் கட்டிடுங்கன்னு சொல்லிட்டாங்க.
கண்டிப்பா இனிமே பாக்கியை உடனே கட்டிடறேன்னு சொல்லிட்டு - அடுத்த தடவை என் அட்டை எப்போ காலாவதி ஆகும்னு ஞாபகமா கேட்டுட்டு வந்தேன்.
****
மென்பொருள் தரத்தைப் பற்றி ஒரு சின்ன தொடர் ஓடிட்டிருக்கு. தனித்தனியா படிச்சீங்கன்னா அப்பப்ப கேள்வி கேளுங்க. மொத்தமா கடைசியில் படிச்சிக்கிறேன்னு சொன்னீங்கன்னா, அதுவும் எனக்கு ஓகேதான். :-))
****
இப்பல்லாம் ஒவ்வொரு வாரயிறுதியிலும் ரெண்டு மணி நேர பயணம் செய்வதால் (பயணம் எதுக்குன்னு தெரியலியா? அதுக்குத்தான் ட்விட்டரில் என்னை பின்தொடரணும்னு சொல்றது!)
- Leadership பற்றிய ஒரு CD புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன்.
நேற்று முதல் முறையா அந்த CDயை கேட்டபோதே - நான் எந்த காலத்திலும் தலைவனாக முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.
அப்படி அதில் என்ன சொன்னாங்கன்னா - “ரெண்டு நிமிடத்துக்கு கண்ணை மூடிக்கிட்டு, இது வரைக்கும் வேலையில் நீங்க என்ன சாதிச்சிருக்கீங்கன்னு யோசிங்க”.
கொய்யாலே. புயல் மாதிரி 80 மைல் வேகத்துலே வண்டி ஓட்டிக்கிட்டிருக்கேன் இதுலே ரெண்டு நிமிடம் கண்ணை மூடுனா என்ன ஆகும்?
அப்பவே தெரிஞ்சி போச்சு <தலைப்பு>.
****
6 comments:
இப்பத்தான் உங்களுக்கு தலைவனாக எல்லா தகுதியும் இருக்கு... :))
தலைவனுக்கு எல்லாம் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கனும்....எல்லாம்னா எல்லாம் இதில் அடங்கும்...:))
நீங்க தலைவர்தான் சத்யா. சொன்ன தகுதி எல்லாம் இருந்தா தொண்டனாக இருக்கத்தான் லாயக்கு.
சொல்ற தகுதியெல்லாம் இருக்கறவன் தொண்டன். என்ன தகுதியெல்லாம் இருக்கணும்னு சொல்றவன் தலைவன்.
(அட.. பஞ்ச் டயலாக் மாதிரியே இருக்கே..)
வாங்க நா.பி -> ‘எல்லாத்துக்கும்’ நன்றி. :-))
வாங்க அண்ணாச்சி -> நன்றி. எப்படி இருக்கீங்க?
வாங்க அறிவிலி -> ஹாஹா...:-))
சஹானா அம்மா மாதிரியோ...
ஹிஹி.. என்ன இத்தனை நாளா நான் வரலையா? நாலைஞ்சு பாக்காத பதிவு இருக்கு. தொடர் வேறயா? அப்போ ஞாபகமா சொல்லிவிடுங்க. தொடர் முடிஞ்சப்புறம் வர்றேன். ஓகே.?
Post a Comment