Tuesday, November 16, 2010

பேஸ்மென்ட் ஸ்ட்ராங்! பில்டிங்கும் ஸ்ட்ராங்!

தரத்தில் கவனம் செலுத்தும் அனைவருக்கும் இந்த ‘தர மேலாண் அமைப்பு’தான் (Quality Management System) பேஸ்மெண்ட். இது கண்டிப்பா ஸ்ட்ராங்கா இருக்க வேண்டியது அவசியம். இந்த தர மேலாண் அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் இதில் இருக்கும் இரண்டு முக்கிய குழுக்களை பாத்துடுவோம்.

முதலாவது - தர நிர்ணயக் குழு (Quality Assurance). இவங்கதான் வேலையை எப்படி செய்யணும்னு சொல்லித் தர்றவங்க.

** திட்டப்பணி வரைவு (Project Planning)
** செந்தரங்கள் உருவாக்குதல் (Standards development)
** பயிற்சிகள் (Trainings)

இதெல்லாம் தர நிர்ணயக் குழுவின் வேலைகளில் சில.

அடுத்தது - தரக் கட்டுப்பாட்டுக் குழு (Quality Control). நடந்த தவறுகளை கண்டுபிடிச்சி, அதை திருத்தச் சொல்றவங்க.

** அகச்சோதனை (Unit Testing)
** அமைப்புச் சோதனை (System Testing)
** குறிமுறை மீள்பார்வை (Code Review)
** வடிவமைப்பு மீள்பார்வை (Design Review)

இதெல்லாம் தரக்கட்டுப்பாட்டுக் குழுவின் வேலைகளில் சில.

சரியா? இப்போ இந்த இரண்டு குழுவிற்கும் ஆதாரமான 'தர மேலாண் அமைப்பின்’ வேலையை விரிவா பாத்துடுவோம்.

** பொருளின் உற்பத்திக்கு என்ன பண்ணனும்?

** அதை செய்யக்கூடிய வழிமுறைகள் என்ன?

** அந்த வழிமுறைகள் சரியா பின்பற்றப்படுகின்றனவா?

** வேலை செய்கிறவர்களுக்கு அதை செய்யக்கூடிய தகுதி இருக்கிறதா? இல்லேன்னா, அவங்களை எப்படி தயார்படுத்துவது?

** உற்பத்தி செய்யப்பட்ட பொருள் நாம எதிர்பார்த்த மாதிரியே வந்திருக்கிறதா?

** வரலேன்னா, அதை எப்படி திருத்தணும்?

** நடந்த தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

** மறுபடி அதே தவறு செய்யாமலிருக்க, என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?

அவ்ளோதாங்க. சிம்பிளா இருக்கில்லே.

இவ்வளவையும் செய்துட்டு, ‘பேஸ்மெண்டை’ ஸ்ட்ராங்காக்கிட்டா - அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் சிலவற்றை பாத்துடுவோம்.

** வேலைகளை துரிதப்படுத்தலாம். எல்லா வேலைகளுக்கும் செந்தரங்களை (standards) உருவாக்கிட்டதால், அவைகளை வேகமாக செய்ய முடியும். இது எப்படி பண்றது? அது எப்படி பண்றதுன்னு யாரும் யோசிக்கத் தேவையில்லை.

** ‘அதிர்ச்சி’களைக் குறைக்கலாம். எல்லா வேலைகளையும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட வழிமுறையில் செய்வதால், வருவிளைவு (output) எப்படியிருக்கும்னு யூகிக்க முடியும். என்ன இப்படி ஆயிடுச்சுன்னு அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை.

** நேரம் மிச்சம். என்ன செய்யப் போறோம், எப்படி செய்யப் போறோம்னு எல்லாருக்குமே தெரியுமாகையால், நேரம் மிச்சமாகும். நேரம்தான் பணம்றது உங்களுக்கு தெரியும்தானே?

** வாடிக்கையாளரின் திருப்தி அதிகரிப்பு.

மற்றும் பல.

***

இத்துடன் 'தரம்' பற்றிய முன்னுரை முடிந்தது. அப்போ அடுத்த பகுதியிலிருந்து???

***

இந்த பகுதிக்கான கேள்விகள்:

** இந்த பேஸ்மென்ட் வீக்கா இருந்தா என்னென்ன பிரச்சினைகள் வரும்?

** பல்வேறு தரச் சான்றிதழ் வாங்கிய நிறுவனங்களெல்லாம் நிஜமாவே ’பிழை’யில்லாமல் மென்பொருளை உற்பத்தி செய்கின்றனவா?

** எப்படியும் தரக் கட்டுப்பாட்டுத் துறை எல்லா தவறுகளையும் கண்டுபிடிச்சிடப் போகுது. அப்புறம் எதுக்கு மத்ததெல்லாம் (தர நிர்ணயக்குழு)?
** இந்தியாவிலேயே முதல்முறையா CMMi சான்றிதழ் யாரு வாங்கினாங்க?

*******

5 comments:

அமுதா கிருஷ்ணா November 16, 2010 at 10:30 AM  

டபுள் ஸ்ட்ராங்..ஜமாய்ங்க..

பழமைபேசி November 16, 2010 at 10:32 AM  

//’பிழை’யில்லாமல்//

வழு இல்லாமல்...

ராஜ நடராஜன் November 16, 2010 at 11:49 AM  

டச் விட்டுப்போச்சு:)

Deepak Sadanandan November 17, 2010 at 12:03 AM  

Great..following the principle of KISS..easy to follow...

Mahesh November 17, 2010 at 8:30 PM  

ரொம்ப எளிமையா எழுதி புரிய வெச்சுட்டீங்க... அருமை...

பழமை அண்ணன் சொன்னதைத்தான் நானு சொல்ல வந்தேன்.. தரக்கட்டுப்பாடு "வழு"க்களை (defects - குறைபாடு) தவிர்க்கவே.. "பிழை"கள் (errors, mistakes) மனிதனாலோ இயந்திரத்தாலோ இருந்து கொண்டுதான் இருக்கும். அவற்றை களையவும், வழிமுறைகளை மறுபடி நெறிப்படுத்தவும் தரக்கட்டுப்பாடு உதவும்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP