நான் பார்க்கும் மெகாத் தொடர்கள்!!
ஆபீஸ் முடிந்து குர்காவ்ன்லே மாலை 6.10க்கு வண்டி. தில்லியில் வீட்டுக்கு வர 6.40௦ ஆயிடும். ஆனா 6.30க்கு மெட்டி ஒலி. பத்து நிமிஷ நாடகம் போயிடும். என்ன பண்றது? வீட்டுத் தொலைபேசியை ஸ்பீக்கர்லே போட்டுட்டு தொலைபேசியில் மெஒவை கேட்டுக்கிட்டே ஓடி வீடு வந்து சேருவோம்.
நண்பர்கள்/வீட்டுலே தொடர்ச்சியா நிறைய தொடர்களைப் பார்த்தாலும், நான் பார்த்தது மெஒ & கோலங்கள் மட்டும்தான் (அதுவும் 2006 பிப்ரவரி வரை!). அதுக்கப்புறம் அமெரிக்கா வந்தாச்சு. வந்தவுடன் இங்கேயும் மெகாத் தொடர்கள் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா தமிழ்லே இல்லே. ஆங்கிலத்துலே. (தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாத்து 4.5 ஆண்டுகள் ஆயிடுச்சுங்க!).
இங்கேயும் ஏகப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள். அதுவும் 10-15 வருஷத்துக்கு மேல் ஓடிய தொடர்கள்லாம் இருக்கு. குழந்தையா நடிக்க ஆரம்பிச்சி அதே தொடரில் பெரியவங்க ஆனவங்களும் இருக்காங்க.
இருங்க இருங்க. நம்ம ஊர் தொடர் நாடகங்களுக்கும் இந்த ஊர் தொ.நா’க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.
** இங்கிருக்கும் தொடர்கள் எதுவும் தொடர்கதை கிடையாது. அதாவது ஒரு கல்யாணமோ / கரு**யோ, அதையே ஒரு வாரம் வரைக்கும் இழுத்து காட்டறா மாதிரி கிடையாது. ஒவ்வொரு எபிசோடும் ஒரு ச்சின்ன சம்பவம் - அவ்வளவுதான். அன்னிக்கி ஆரம்பிச்சி அன்னிக்கே முடிச்சிடுவாங்க. அதனால் ஒரு நாள் பாக்காமே போனா, அடுத்த நாள் புரியாதுன்னு இல்லே. (ஹிஹி. தமிழ்த் தொடர்களும் அப்படித்தான்னு யாரோ சொல்றது கேக்குது!).
** எந்தத் தொடரும் வருடம் முழுக்க நடக்காது. ஒரு வருடத்திற்கு 3-4 மாதங்கள் மட்டுமே நடக்கும். அப்புறம் அடுத்த வருடம்தான்.
** ( நான் பார்க்கும்) பெரும்பாலான தொடர்கள் நகைச்சுவைத் தொடர்களே. பட்பட்டென்று நிமிடத்திற்கு நிமிடம் வசனங்களாலும், நடிப்பினாலும் சிரிக்க வைக்கும் நாடகங்களையுமே விரும்பி பார்ப்பது வழக்கம்.
** ரொம்ப பழைய மேட்ச் போட்டாலும் அதை நாள் முழுக்க உக்காந்து பார்ப்பதுபோல், இந்த கீழ்க்கண்ட தொடர் நாடகங்களை ஏகப்பட்ட தடவைகள் பார்த்திருக்கேன் / பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.
* Everybody loves Raymond - இதைத்தான் முதன்முதலில் பார்க்க ஆரம்பிச்சோம். இன்றைக்கும் என் ஃபேவரைட் இதுதான்.
* Friends - ஹிஹி. ஜெனிக்காக பார்க்க ஆரம்பித்தேன்.
* Seinfeld - மூணு / நாலு விதமான கதைப் பின்னல்கள் - கடைசியில் எல்லாத்தையும் ஒரே கோட்டில் சேர்த்துவிடுவார்கள். இவர்கள் கற்பனைத் திறனுக்கு ஒரு ஜே! வாத்தியாருக்கு மிகவும் பிடித்த தொடர். கற்றதும் பெற்றதும்லே இதை சொல்லியிருப்பார்.
* King of Queens
* Home Improvement
* Yes Dear
* Just Shoot me
* George Lopez
* Prince of Bel Air - நம்ம வில் ஸ்மித் சினிமாவில் நடிக்க வரும்முன்னே நடிச்ச தொடர். நகைச்சுவையில் பிச்சி உதறியிருப்பாரு.
* Hot in Cleveland
சஹானா பார்க்கும் சில சிறுவர்களுக்கான தொடர்களை வேறு வழியில்லாமே பார்க்க ஆரம்பித்து, இப்ப அவ தூங்கிட்டாலும் நாங்க பாக்கறதுதான்.
* Hannah Montana
* iCarly
* Victorious
சில 18+ வசனங்கள் வரும் தொடர்களும் இருக்கு. ஆனா நான் அதையெல்லாம் பாக்கறதில்லை. ச்சின்ன மனசு கெட்டுப் போயிடும்னு வீட்டுலே அனுமதிக்கமாட்டாங்க.
* Two and half men
* Family Guy
இதைத் தவிர நான் பார்க்கும் பிற தொடர்கள் (நாடகங்கள் அல்லாதவை).
* Are you smarter than a 5th Grader? - இதில் நிறைய தப்புதப்பா பதில் சொல்லிடுவேன். அப்புறம் நாந்தான் இந்த ஊரில் 5வது படிக்கலியே, அதான் பதில் தெரியலேன்னு சமாளிச்சிடுவேன்.
* Americas Funny Videos - இது என்னன்னு உங்களுக்கே தெரியும்.
இப்படியாக இங்கே பொழுது போகுதுங்க.
******
* ஒரு குடும்பம்.
* மொத்தம் நாலே பேர்.
* நகைச்சுவைதான் முக்கியம்
* சினிமா, அரசியல் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு நோ
இந்த மாதிரி ஒரு சூழலுடன் தொடருக்கான கதைகள் தமிழில் எழுதணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. ஒரு குழுவா இருந்தா முயற்சி செய்யலாம். நீங்க யாராவது ரெடியா?
*****
12 comments:
//நீங்க யாராவது ரெடியா?//
ரெடி ரெடி.. பார்க்கத்தானே
\\\ ILA(@)இளா said...
//நீங்க யாராவது ரெடியா?//
ரெடி ரெடி.. பார்க்கத்தானே///
:)
நல்ல ஐடியா. செய்யுங்க.. தமிழைவாழவைங்க..
Nice Article very useful for me.Thank you
few of them tried in our TVs as well..but didnt work out because of lack of humour script!
Veetuku veedu Looty
Ramani Vs Ramani
Mel maadi gaali
friends maathirye oru serial - but stopped before. name gnabagam varala but directed by Prabu nepal
//ஒரு குடும்பம்.
* மொத்தம் நாலே பேர்.
* நகைச்சுவைதான் முக்கியம்
* சினிமா, அரசியல் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு நோ//
இந்தியத் தொடர்களில் "யே ஜோ ஹை ஜிந்தகி" இது போன்ற அமைப்பில் வெற்றி பெற்ற தொடர்.சதீஷ் ஷா, ராகேஷ் பேடி போன்றவர்களை பிரபலமாக்கிய தொடர் இது. எண்பதுகளில் டிடி யில் சூப்பர் டூப்பர் ஹிட்.
தமிழில், மேலே அனானி மிஸ் பண்ணிய தொடர் "சின்ன பாப்பா-பெரிய பாப்பா". ஓஹோ என்று இல்லாவிட்டாலும் பட்டாபி வெளிச்சத்துக்கு வந்தது இந்த தொடர் மூலம்தான்.
//இந்த மாதிரி ஒரு சூழலுடன் தொடருக்கான கதைகள் தமிழில் எழுதணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. ஒரு குழுவா இருந்தா முயற்சி செய்யலாம். நீங்க யாராவது ரெடியா?
//
அணில் பங்கா ஏதாவது செய்யப் பாக்கறேன்.நான் ஆட்டைக்கு ரெடி.
உள்ளேன் ஐயா .. என்னையும் ஆட்டத்திலே சேத்துகோங்க
""""இந்தியத் தொடர்களில் "யே ஜோ ஹை ஜிந்தகி" இது போன்ற அமைப்பில் வெற்றி பெற்ற தொடர்.சதீஷ் ஷா, ராகேஷ் பேடி போன்றவர்களை பிரபலமாக்கிய தொடர் இது. எண்பதுகளில் டிடி யில் சூப்பர் டூப்பர் ஹிட்.""""""
if i am not wrong its not "yhe jho hai jnnghagi".it was ''dekeh bhai dekeh"
//if i am not wrong its not "yhe jho hai jnnghagi".it was ''dekeh bhai dekeh"//
@அனானி
அது "யே ஜோ ஹை ஜிந்தகி"
தான். இந்த லிங்கை பாருங்கள். http://www.youtube.com/watch?v=S2760NU_jVM
try 'two and half man' also...romba nalla irrukum!!
Dish network mega Tamil pack edunga.. Nadaswaram, thirumadi selvam, thangam and thenral parkalam. Enga veettla 7:30 to 9:30 weekdays Ethan poluthu pokku...
யோவ்.. என்னாய்யா.. லேடீஸ் மாதிரி இம்மாம் தொடர்களை வரிசைப்படுத்துறீங்க.?
தமிழில் தொடர் பாத்து 4.5 வருசம் ஆச்சா.? புண்ணியவான்யா.!
அப்புறம் தொடருக்கு கதை எழுதறது சரிதான், யாரு படம் பண்ணுவா.? :-))
Post a Comment