Wednesday, November 3, 2010

மென்பொருள் தர நிர்ணயம் - புதிய தொடர்!

ரொம்ப நாளா ரொம்ப ரொம்ப மொக்கையா எழுதறோமே - வாழ்க்கையிலே உருப்படியா ஏதாவது எழுதலாம்னு நினைப்பு இருந்துச்சு. அதனால் நாம ஏழெட்டு வருசமா வேலை பாத்துக்கிட்டிருக்குற ஒரு துறையைப் பத்தி - அதிலிருக்கும் ஒரே ஒரு விஷயத்தைப் பத்தி ஒரு மினி தொடர் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இடுகை போரடிக்காமே இருக்க என்ன செய்யணுமோ அதை கண்டிப்பா செய்வேன். வாங்க, நேரடியா மேட்டருக்கு போயிடலாம்.

*****

மென்பொருள் தர நிர்ணயத்துறைதான் (Software Quality Assurance) அந்தத் துறை.

ஐ.எஸ்.ஓ (ISO)
சி.எம்.எம்.ஐ (CMMi)
சிக்ஸ் சிக்மா (Six sigma)

இதெல்லாம்தான் அந்த விஷயங்கள்.

**

இதில் முதலாவதா இருக்கிற ISO பற்றியும், மூணாவதா இருக்கிற சிக்ஸ் சிக்மா பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனா நாம் இங்கே பாக்கப்போறது - எனக்கு மிகவும் பிடித்தமான - நடுவில் இருக்கும் CMMi (Capability Maturity Model Integration) பற்றித்தான்.

பொதுவா கொஞ்சம் மென்பொருள் தர நிர்ணயத்தைப் பற்றியும், கூடவே CMMi பற்றியும் எழுதலாம்னு நினைச்சி முதல் இடுகையை துவக்குற நேரத்துலேதான், தர நிர்ணயத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு அதிர்ச்சி தரும் அந்த செய்தி வந்துச்சு. அது என்ன? சொல்றேன். சொல்றேன்.

**

பொருளின் தரம் எப்படி இருக்கணும்னு அதை பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்தான் முடிவு பண்ணனும். இதுதான் நடைமுறை.

ஏய், யாருப்பா அது, உங்க வீட்லே நீ கேக்குற மாதிரி காப்பியோ அல்லது பிசிபேளா பாத்தோ கிடைக்குதான்னு கேக்குறது? சரி சரி. அதைப் பத்தி அப்புறம் பேசுவோம்.

அப்படி வாடிக்கையாளர் எதிர்பார்க்குற தரத்தை - குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் அடைய எல்லா மென்பொருள் நிறுவனங்களும் கடுமையா முயற்சி செய்து கொண்டேயிருக்கின்றன.

அப்படி என்ன முயற்சி செய்றாங்கன்னு நீங்க கேக்கலேன்னாலும், சொல்லவேண்டியது என் கடமை.

** செய்வதை திருந்தச் செய்றது (முதல்தடவையிலேயே தப்பில்லாமே செய்யறது)

** செய்ததையே திரும்பத் திரும்ப செய்யாமே இருக்கறது (Re-use)

** ஒரு வேலையை எப்படிச் செய்யனும்னு செந்தரங்களை (Standards) உருவாக்கி, அதன்படியே அனைவரும் வேலை செய்வது

** பிழைகளை குறைப்பது

இப்படி பல்வேறு வழிகளை எல்லா மென்பொருள் நிறுவனங்களும் பின்பற்றுகின்றன.

மேலே குறிப்பிட்டவற்றை எங்கே ஆரம்பிப்பது, எப்படி செய்வதுன்னு தெரியலேன்னா - அதுக்குத்தான் நாம முதல்லே பாத்த ISO, CMMi இதெல்லாம் இருக்கு.

**

** இந்த ISO, CMMi இதெல்லாம் ஒண்ணுதானா?

** ஏதாவது ஒன்றை எடுத்து பயன்படுத்தினா போறுமா?

** CMMiயில் எத்தனை நிலைகள் இருக்கு?

** இவற்றை மென்பொருள் நிறுவனங்கள் மட்டும்தான் பயன்படுத்தணுமா?

இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் அடுத்தடுத்த இடுகைகளில்... நீங்களும் கேள்விகள் இருந்தா கேளுங்க..

**

இந்த CMMiஐ கண்டுபிடித்த - மென்பொருள் தரத்தின் தந்தை (Father of Software Quality) என்று அழைக்கப்பட்ட - வாட்ஸ் ஹம்ஃப்ரே (Watts Humphrey), சென்ற மாதம் - அக்டோபர் 28ம் தேதி, தனது 83வது வயதில் காலமானார்.

*****

தொடரும்...

*****

12 comments:

ILA (a) இளா November 3, 2010 at 12:11 PM  

வாழ்த்துகள்! ஆனா ஜனரஞ்சகப் பதிவுகளுக்கு வர்றா மாதிரி பின்னூட்டங்கள் வராது.. அதனால நிறுத்திறாதீங்க. தொடரை முடிச்சிட்டு PDF மாத்தி வைங்க. கண்டிப்பா பிற்காலத்துல உபயோகமா இருக்கும்.

யாத்ரீகன் November 3, 2010 at 2:27 PM  

i have fwd-ed your post to few known college passout freshers and also asked them to follow your blog for this series without fail :-)

it was interesting & simple for them too :-) Kudos

Bruno November 3, 2010 at 2:32 PM  

நல்ல முயற்சி

தொடர காத்திருக்கிறோம்

க ரா November 3, 2010 at 3:20 PM  

நல்ல முயற்சிங்க.. கட்டாயமா தொடர வேண்டிய தொடர் இது ...

a November 3, 2010 at 4:24 PM  

நல்லதொரு தொடர்......... கண்டிப்பாக தொடர வாழ்த்துக்கள்..........

Anonymous,  November 3, 2010 at 8:52 PM  

Office lla thaan mandatory training thollai thanga mudiyillai... ingayuma?!?!?!?

சிவக்குமரன் November 3, 2010 at 9:41 PM  

தொடருங்கள் நண்பா

Unknown November 3, 2010 at 9:44 PM  

சின்னப் பையன், நடத்துங்க. QA போன்ற வேலைகளுக்கு, கம்பெனிகள் ஆட்களை CMMiக்காக பரிசோதனை செய்யும் இணையத் தேர்வில், ஹிஹி, நான் தேர்வுத்தாள் தயாரிப்பில் இருந்திருக்கிறேன். நான் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறேன்!!

ரைட்டு!

அமுதா கிருஷ்ணா November 4, 2010 at 10:03 AM  

எனக்கு தேவை இல்லை எனினும் வாழ்த்துக்கள்..

Mahesh November 7, 2010 at 3:27 AM  

மென்பொருட்களில் தரம்ங்கறது கடவுள் மாதிரி.... இருக்குன்னா இருக்கு... இல்லைன்னா இல்லை,,,, ஆனா இருந்தா நல்லாயிருக்கும் :))))

வடகரை வேலன் November 14, 2010 at 12:02 AM  

நல்லா இருக்கு சத்யா.

தொடருங்கள். காத்திருக்கேன்.

செந்தில் நாதன் Senthil Nathan January 4, 2011 at 11:23 AM  

நல்ல தொடர்.

எதிர்பார்ப்புகளுடன்,
செந்தில்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP