Tuesday, October 26, 2010

கடவுள் கண்டிப்பா இருக்கார்..!!

ஆத்திகர்கள், நாத்திகர்கள், இருந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்றவங்க - இவங்க யாருக்குமே இந்த பதிவுலே தீனி எதுவும் கிடையாது. வழக்கம்போல் மொக்கைதான். அதனால்...

*****

வீட்டுலே நான் வேலை எதுவுமே செய்யாமே - கால் மேல் கால் போட்டு உக்காந்திருக்கேன்னு - நாக்கு மேல் பல்லு போட்டு பேசறவங்களுக்கு, அவங்க தப்புன்னு நிரூபிக்க ஒரு வலுவான ஆதாரம் கிடைச்சிடுச்சு. கீழே பதிவில்.

*****


ச்சின்ன வயசிலேந்து உலகத்தை வாங்கணும்னு ஆசை. ..ன்னா ..யே இல்லை. உலக உருண்டையைத்தான் சொன்னேன். பள்ளியில் தலைமை ஆசிரியர் மேஜையில் உ.உ ச்சும்மா
கொலுவிற்காக வெச்சிருந்ததை பாத்ததிலிருந்து - வீட்டிலேயும் ஒண்ணு வேணும்னு கேக்கணும்னு பாப்பேன். ஒண்ணு கேட்டா ரெண்டு கிடைக்கும் முதுகுலே. அதனால் கேக்காமே விட்டுடுவேன்.

சமீபத்தில் இங்கே பழைய பொருட்களை விற்கும் கடை ஒண்ணு. வெளியிலிருந்து பாத்தபோதே பெரிய உ.உ ஒண்ணு உள்ளே இருப்பது தெரிஞ்சுது. சரின்னு உள்ளே போனா அங்கே ஒரு தாத்தா உ.உ.வை சுத்தவிட்டு பாத்துட்டிருந்தாரு.

அங்கிருந்ததோ ஒரே ஒரு உ.உ.தான். அதையும் இந்த தாத்தா விடாமே சுத்திட்டிருந்தாரு. ச்சின்ன வயசிலே உலகத்தை சுத்தி வரணும்னு ஆசையோ என்னவோ.. அல்லது காணாமல் போன அவங்க ஊரு ஆண்டிலேண்ட் (like ஆண்டிப்பட்டி) தேடிட்டிருந்தாரோ தெரியல. ரெண்டு.. நாலு.. ஆறு நிமிஷமாச்சு. அவரும் நகர்ற மாதிரியில்லே. அதை வாங்கற மாதிரியும் தெரியல.

இது வேலைக்காகாதுன்னு அவர்கிட்டேயே போய் - ஐயா, நீங்க வாங்கப் போறீங்களா.. இது எனக்கு வேணும்னு கேட்டுட்டேன். மனுசன் அசராம - யெஸ். இது எனக்கு வேணும்னு சொல்லிட்டாரு.

இருந்தாலும் நப்பாசை. கடைக்குள்ளேயே சுத்திட்டிருக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. தங்ஸ் ஒரு பக்கம், நான் இன்னொரு பக்கம்னு நின்னு அவரை கண்காணிச்சிண்டிருந்தோம். ஒரு நிமிஷம் தாத்தா நகர்ந்தாலும் டக்குன்னு அமுக்கிடலாம்னு ப்ளான்.

இன்னொரு பத்து நிமிடம் கழிச்சிதான் தாத்தாவோட 'உலக ஆராய்ச்சி’ முடிஞ்சி, கொஞ்சம் அந்தப்பக்கம் நகர்ந்தாரு.

பழைய படங்கள்லே 'அந்த' மாதிரி காட்சி வரும்போது காட்டுவாங்களே - மான் மேலே புலி பாயறா மாதிரி - அந்த மாதிரி பாய்ஞ்சி உலகத்தை கைப்பற்றினேன்.

அன்று முதல் அவ்வப்போது உலகத்தை சுற்றி சஹானாவுக்கு கண்டம் / நாடு / கடல் போன்ற பல விஷயங்களை சொல்லிக் கொடுப்பதால் - உலகம் சுற்றும் ச்சின்னப் பையன் என்று பெயர் பெற்றேன்.(ஹிஹி. எனக்கு நானே!).

*****

இந்த வார 18+ ஜோக்:

கொறுக்ஸ், மொறுக்ஸ் இந்த மாதிரியெல்லாம் போட்டா கண்டிப்பா 18+ ஜோக் ஒண்ணு போடணும்னு புது சட்டம் போடப் போறாங்களாம். அதனால் பல (சில?) பேர் படிக்கும் பூச்சாண்டியிலும் ‘இந்த வார 18+ ஜோக்’ போடறதா முடிவு பண்ணிட்டேன்.

நல்லா பாத்துக்குங்க.

இந்த வார 18+ ஜோக்.

போட்டாச்சு..

*****

சஹானாவின் பள்ளியில் தினம் ஒரு கடிதம்னு எழுதவைக்கிறாங்க. உங்க அப்பாவுக்கு கடிதம் எழுதுன்னு சொன்னதுக்கு, என்னமா அனுபவிச்சி எழுதியிருக்காங்க பாருங்க.

இதெல்லாம் மண்டபத்துலே யாரும் சொல்லிக் கொடுத்து எழுதினதில்லீங்க. நான் படற கஷ்டத்தைப் பாத்து தானா வர்றதுதான்.



நானா எப்படிடா சொல்றதுன்னு தெரியாமே இருந்தப்போ, இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பதால்தான், கடவுள் கண்டிப்பா இருக்கார்னு தெரியுது! (அப்பாடா, தலைப்பு வந்தாச்சு!).

*****

14 comments:

Vidhya Chandrasekaran October 26, 2010 at 11:43 PM  

நீங்க சொல்லிக்கொடுத்து தானே சஹானா எழுதுனாங்க:)

Prathap Kumar S. October 26, 2010 at 11:59 PM  

//ஒண்ணு கேட்டா ரெண்டு கிடைக்கும் முதுகுலே.//

ஹஹஹ... நல்ல டைமிங்...

சஹானா அந்த லெட்டரை நீங்க சொல்லிக்கொடுத்தமாதிரியே எழுதிருக்காங்க...:))

ஹுஸைனம்மா October 27, 2010 at 12:00 AM  

அங்கே இந்த மனித உரிமை கழகம்லாம் நிறைய இருக்குமே, உதவி கேட்க வேண்டியதுதானே? :-)))

வெண்பூ October 27, 2010 at 1:11 AM  

//
You wash dishes
//

ஹி..ஹி.. :)))

விஜி October 27, 2010 at 1:57 AM  

நீங்களே பீச்சாங்கையிலே எழுதிட்டு குழந்தை மேல பழி போடறீங்க,,, :)

முத்துலெட்சுமி/muthuletchumi October 27, 2010 at 2:23 AM  

ஜோக் இடம் வந்ததும்.. வேணாட்டி சிலர் எஸ்கேப் ஆகிடுவாங்க..அதுக்கு கீழ போய் சகானா லெட்டரைப் போட்டிருக்கீங்களே..:)

லெட்டர் ரொம்ப க்யூட்டா இருக்கு..

செழியன் October 27, 2010 at 8:41 AM  

வாவ் உண்மையிலேயே சூப்ப்ராய் இருக்கு, தொடர்ந்து எழுதுங்க நண்பரே!

அமுதா கிருஷ்ணா October 27, 2010 at 10:25 AM  

ச்சின்னப்பெண்ணின் கடிதம் சூப்பர்...

வலைச்சரம் நிர்வாகம். October 27, 2010 at 1:56 PM  

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com

Anonymous,  October 27, 2010 at 1:59 PM  

இந்த உலகத்தில் தன்னைதானே அறிவாளி என நினைத்துக் கொண்டு, அது இது நு புரூடா விடும் பேப்பர்கள் உலாவும் இணையத்தில், ஆர்ப்பரிக்காமல், மிகவும் எளிதாக, நம் வாழ்க்கையின் ச்சின்ன விசய்ங்களில் எவ்வளவு அழகும், ஆழமான நகைச்சுவையும், அருமை, ச்சின்னப் பையன் பெயரில் மட்டுமே, எழுத்தில் இல்லை, அவர் பெரிய பைனுக்கு எல்லாம் பெரிய பையன்

Unknown October 28, 2010 at 2:14 AM  

ஆஹா. அருமையான குழந்தை. அப்பா படும் துன்பம் சகிக்கலை. சொல்ல முடியாம எழுதிப் பார்த்திருக்கிறது. அன்பு நிலைக்கட்டும் :)

Thamira October 28, 2010 at 2:05 PM  

ஏம்யா, நம்ப பொழப்பு இப்பிடி இருக்குது.? ஹூம்.. நான் லட்டரைச் சொன்னேன்.

(வரிக்கு வரி ரசனையான நகைச்சுவையைத் தருவது உங்கள் எழுத்து)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP