வாரயிறுதி பயணத்தில் கற்றுக் கொண்டவை!
சென்ற வார இறுதியில் வகிமாவில் ஒன்றான நியு ஹாம்ப்ஷைர் (நியூ Hampshire) மாநிலத்துக்கு மரியாதை நிமித்தமாக (!!) பயணம் போயிருந்தோம். அந்த பயணத்தில் கற்றுக் கொண்ட விஷயங்கள்தான் இங்கே சொல்லப்பட்டிருக்கு. நான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கனும்ற உயர்ந்த நோக்கத்தில்தான் இந்தப் பதிவு.
*****
20 மைல் வேகத்தில் கடக்கவேண்டிய ஒரு கொண்டை ஊசி வளைவை 65 மைல் வேகத்தில் கடந்தால், வண்டியில் இருப்பவர்களும் / இருக்கும் பொருட்களும் நகர்ந்து ஒரே பக்கத்தில் வந்து விடுவர்/விடும்.
ஒரு பெரிய ட்ரக்கின் (லாஆஆஆரி) முன்னால் போய் திடீர்னு நிறுத்தினா (சடன் ப்ரேக் போட்டா), லாஆஆஆரியின் ஒலிப்பான் அதிக பட்ச சத்தத்தில் ஒலிக்கும்.
ஒரே அறையில் 8 பேர் மற்றும் 5 குழந்தைகள் "அமைதியாக" இருந்தால், பக்கத்து அறையிலிருந்தும், ஹோட்டல் வரவேற்பரையிலிருந்தும் தொலைபேசி - இன்னும் கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்வர்.
கும்பலா இருக்கும்போது மனைவியை கிண்டல் பண்ணிட்டா, பிறகு தனியா இருக்கும்போது பெண்டு நிமிர்ந்து விடும்.
65 மைல் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் - 92 மைல் வேகத்தில் போனாலும், காரின் சக்கரம் அந்தரத்தில் பறக்காமல் தரையில் உருண்டுதான் போகும்.
அமெரிக்காவில் எந்த மூலைக்கு சென்றாலும் குஜ்ஜூ மக்களின் சாப்பாட்டுக் கடை ஒன்று இருக்கும். சாப்பாடும் அருமையா இருக்கும்.
ஹோட்டல் செக்-இன் செய்து ஐந்தே நிமிடத்தில் வம்பு பேச வெளியே வந்தால், மாற்றுச் சாவி வாங்க கட்டிய துண்டோடு போக வேண்டி வரும்.
அலறிக்கொண்டிருக்கும் ஒரு அவசர ஊர்திக்கு வழி விடலேன்னா, அந்த ஓட்டுனரின் கெட்ட விரலை பார்க்க நேரிடும்.
ஒரே ஒரு காப்பி வாங்கிட்டு அதை by-3 (மூன்றாக பங்கிடுதல்) செய்து குடிச்சா, கடைக்காரி கேவலமா பார்க்கத்தான் செய்வா.
ரெண்டு மணி நேர பார்க்கிங்க்னு சொல்றது வண்டிகளுக்குத்தான், மனிதர்களுக்கில்லை.
20 comments:
ஓஒஹ் டன் கணக்குல துவைக்கிற மலையா? படம் இவ்ளோதானா?
super. all new to me. thanks for sharing.
நல்லது!
//அமெரிக்காவில் எந்த மூலைக்கு சென்றாலும் குஜ்ஜூ மக்களின் சாப்பாட்டுக் கடை ஒன்று இருக்கும். சாப்பாடும் அருமையா இருக்கும்//
அட...மல்லுக்களுக்கே போட்டியா.... எந்தா மாஷே இது...
//அலறிக்கொண்டிருக்கும் ஒரு அவசர ஊர்திக்கு வழி விடலேன்னா, அந்த ஓட்டுனரின் கெட்ட விரலை பார்க்க நேரிடும்//
நடுவிரலுக்கு இப்படி ஒரு பேரு இருக்குன்னு இப்பத்தான் தெரியும்...:)))
நச்
//ஒரு பெரிய ட்ரக்கின் (லாஆஆஆரி) முன்னால் போய் திடீர்னு நிறுத்தினா (சடன் ப்ரேக் போட்டா), லாஆஆஆரியின் ஒலிப்பான் அதிக பட்ச சத்தத்தில் ஒலிக்கும்.// ட்ரக் ட்ரைவர் நல்ல விரலைக் காட்டியிருந்தாலும் உங்களூக்குத் தெரிந்திருக்காதுன்ற நல்ல எண்ணத்தில, ஒலிப்பான் அடிக்கிறார். ஒலிப்பான் எவ்வளவு சத்தமா இருக்கோ, அவ்வளவு கெட்ட வார்த்தையால திட்ட நினைச்சாருன்னு புரிஞ்சுக்கலாம்.
//கும்பலா இருக்கும்போது மனைவியை கிண்டல் பண்ணிட்டா, பிறகு தனியா இருக்கும்போது பெண்டு நிமிர்ந்து விடும்.// பக்கத்திலியே உங்க ட்வீட் "30 வருஷமா ஒண்ணும் தெரியாம"ன்னு ஏனோ வந்தது. ஏன் சார்?
//டன் கணக்குல துவைக்கிற மலை// ஙே????
அடப்பாவமே. :(
பட் எங்களுக்குஒரு ஜாலி போஸ்ட் கிடைச்சது .. :))
truckaala சடன் ப்ரேக் போட முடியாது. பின்னாடி இருக்கிற சாமான் வெயிட்டால கவுந்திடலாம். அந்த ரிஸ்க் மட்டும் எடுக்காதீங்க
//டன் கணக்குல துவைக்கிற மலை// ஙே????//
அது Mount Washington. வண்டியில மலையேறினா சர்ட்டிபிகேட் எல்லாம் கொடுப்பாங்க, ரொம்ப நல்லவங்க.
அப்புறம் சத்யா அண்ணே, எங்க ஊரைத் தாண்டிப் போயிருக்கீங்க, ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் பார்த்திருக்கலாமில்ல
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//ஹோட்டல் செக்-இன் செய்து ஐந்தே நிமிடத்தில் வம்பு பேச வெளியே வந்தால், மாற்றுச் சாவி வாங்க கட்டிய துண்டோடு போக வேண்டி வரும்.
//
soooppppppper !!
சின்னப் பையன் டச் உடன் இருக்கிறது.
//ஒரே ஒரு காப்பி வாங்கிட்டு அதை by-3 (மூன்றாக பங்கிடுதல்) செய்து குடிச்சா, கடைக்காரி கேவலமா பார்க்கத்தான் செய்வா.//
hi.. hi.. same blood
//கும்பலா இருக்கும்போது மனைவியை
கிண்டல் பண்ணிட்டா// அவ்ளோ தைரியமா???
romba sooper sir post :)
:-)))))))
/
கும்பலா இருக்கும்போது மனைவியை கிண்டல் பண்ணிட்டா, பிறகு தனியா இருக்கும்போது பெண்டு நிமிர்ந்து விடும்.
/
என்னமோ இந்த வார இறுதிலதான் இத கத்துகிட்ட மாதிரி????
:))))))
:)
கும்பலா இருக்கும்போது மனைவியை கிண்டல் பண்ணிட்டா, பிறகு தனியா இருக்கும்போது பெண்டு நிமிர்ந்து விடும்.// ஹிஹி.. அனுபவம் பேசுது.!
போட்டோ// அவ்வ்வ்வ்.. உங்க அளகு யாருக்கு வரும்.?
Post a Comment