நண்பர்கள் தின வாழ்த்துகள்.
அமெரிக்காவில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம்.
ஒரே குழுவில் இருந்த நாங்கள் மூவரும் நண்பர்கள் ஆனோம். வாரயிறுதிகளில் சேர்ந்து ஊர் சுற்றுவது, கடை கண்ணிகளுக்குப் போவது என பொழுது போக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு நண்பர் வேலை & இடமாற்றத்தால் வேறொரு ஊருக்குச் சென்றார். அடுத்து வந்த ஒரு நீண்ட வாரயிறுதியில் எங்கள் இரு குடும்பத்தையும் அவர் ஊருக்கு அழைக்க, அவர் குழந்தைகளுக்கு பரிசுகள் வாங்கி நாங்களும் பயணப்படத் தயாராக இருந்தோம். இங்குதான் George Orwell வருகிறார்.
All Friends are equal, but some Friends are more equal than others-ன்னு சொன்னாரே, அவர்தான்.
இங்கிருந்த மற்றொரு நண்பரின் மனைவியும், போகவிருந்த ஊரிலிருந்த நண்பரின் மனைவியும் மிகச்சிறந்த நண்பிகள். தங்கள் நட்பை கற்பைப்போல எண்ணக்கூடியவர்கள். அதில் உண்டான Possessiveness, மற்ற எவரையும் தங்கள் நட்புக்கிடையில் சேர்க்காத பண்பினைக் கொண்டவர்கள். அப்படி இருக்கும்போது, less equalஆக இருந்த என்னை, இந்தப் பயணத்திலிருந்து எப்படி ‘கட்’ செய்வது? அதைத்தான் த்ருஷ்யம் போல் ஒரு MasterPlan செய்து முடித்தார்கள். அது என்ன ப்ளான் என்பதுதான் இந்தப் பதிவு.
நாள் முழுக்க நடந்த இந்த ஆபரேஷன் பற்றி, துவக்கத்தில் எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு சில மணி நேரங்களிலேயே தெரிந்தது. (’திடுக்’ திருப்பங்களுடன் எவ்வளவு ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல் படித்திருப்போம்!!).
அடுத்த நாள் காலை 6 மணிக்குக் கிளம்பி 1மணிக்கு நண்பர் வீட்டில் மதிய உணவு என்று ப்ளான். முந்தைய நாள் நடந்தவை:
9மணி: லோக்கல் நண்பர் அழைத்து - ஏம்பா, நீ கண்டிப்பா வர்றேயில்லே?. அட ஆமாம்பா. கண்டிப்பா போறோம் - இது நான்.
10மணி: லோக்கல் நண்பர் மனைவி அழைத்து: நாளைக்கு போற வழியில் பனி பெய்யும் போலிருக்கு. எப்படிப் போறோம்னு தெரியல. நான்: அட 30% பனிதான். ஒண்ணும் பிரச்னையில்லை. போகலாம்.
11மணி: ஊரிலிருக்கும் நண்பர்: குழந்தைக்கு உடம்பு சரியில்லை. இங்கு வந்தால் உன் குழந்தைக்கும் அது பரவிவிடும். எதுக்கும் நான் மாலை confirm செய்றேன்.
12மணி: லோக்கல் நண்பர்: எனக்கு ஆபீஸ் வேலை வரும் போலிருக்கு. நாம் அடுத்த வாரம் போகலாமா? அல்லது நீ மட்டும் போறியா? நான்: போவதென்றால் சேர்ந்தே போகலாம். நீ போகலேன்னா நானும் போகலை.
1மணி: லோக்கல் நண்பர்: பனி, அவர் குழந்தையின் ஜுரம், ஆபீஸ் வேலை - இதெல்லாம் காரணங்கள். நாம் இந்த வாரம் போகவேண்டாம். நீ வாங்கின பரிசுகளை போய் அந்தந்த கடைகளில் ரிட்டர்ன் கொடுத்துவிடு. நானும் அதேதான் செய்யப் போகிறேன்.
2மணி: ஊரிலிருக்கும் நண்பருக்கு தொலைப்பேச, அவரின் அனைத்து தொலைப்பேசிகளும் switchoff.
3மணி: பரிசுகள் ரிட்டர்ன் செய்தாச்சு.
4மணி: மனைவியிடம் சொன்னேன். (ரமணா மருத்துவமனைக் காட்சியில் விஜயகாந்த் குரலில்) இப்போ எந்த நேரத்திலும் தொலைப்பேசி வரும். இவன் மட்டும் புறப்பட்டுப் போறேன்னு சொல்வான். அடுத்த முறை இருவரும் சேர்ந்து போவோம்னு சொல்வான் பாருன்னேன்.
5மணி: லோக்கல் நண்பர்: எவ்வளவு பனி இருந்தாலும், என்னை மட்டுமாவது வரச்சொல்லிட்டாங்க. நான் மட்டும் இப்பவே கிளம்பிப் போறேன். உன்னால் உடனடியா கிளம்ப முடியாதில்லே. அடுத்த முறை சேர்ந்தே போகலாம். பை.
பிறகு நாங்கள் அமெரிக்கா காலி செய்துவிட்டு வரும்போது ஊரிலிருந்த அந்த நண்பரிடம் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து, சொல்லிவிட்டு வந்தேன் - அன்னிக்கு என்னை வரவேண்டாம்னு சொல்லியிருந்தாலே, நான் வந்திருக்க மாட்டேன். அதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். பரவாயில்லை. சென்னை வந்தால் கண்டிப்பாக என் வீட்டுக்கு வா.
***
‘நண்பேண்டா’ லேபிளில் இதே போல் வேறு சில சம்பவங்களும் உள்ளன.
***
5 comments:
படிக்க படிக்க பத்திட்டு வந்துச்சு..எப்படி இவ்ளோ அசால்டா நண்பன் என்று சொல்றீங்க..
இதே மாதிரி 'நண்பர்கள்' தொல்லை எனக்கும்! அனுபவமும் இதே போல. கொடுமை இந்த விளையாட்டில் மாட்டி கேட்ட பெரும் வாங்க வேண்டியிருந்தது.. என்ன.. அதற்கப்புறம் கூப்பிட்டு நட்பை கட் செய்துவிட்டேன்!
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன்." இதப் பாத்துட்டுதான் நீங்க செட்டாவ மாட்டீங்கன்னு கழட்டிவிட்டுருப்பாங்க ;)
பார்த்து ரொம்ப நாளாச்சு! எப்படியிருக்கீங்க.வாழ்க வளமுடன்.
Post a Comment