Tuesday, February 7, 2012

சென்னை பள்ளிகள் - பாகம் 2


பாகம் 1

வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்து பள்ளியில் சேருபவர்களுக்கு மிக முக்கியமான பிரச்னை - ஓய்வறையின் சுத்தம், சுகாதாரம். உடனே சிலர் -

ஆரம்பிச்சிட்டான்யா. இங்கே இருக்கும்போது இதே தூசி, சத்தம் மற்றும் சுத்தத்தில் இருந்தவன்தானே. கொஞ்ச நாள் அமெரிக்கா போயிட்டு வந்தா, இங்கே குப்பை, மாசு அதிகம்னு ஆரம்பிக்கறதா - அப்படின்னு சொல்லலாம். இரண்டு இடங்களிலும் இருந்ததால்தான் அந்த வித்தியாசம் தெரிஞ்சுது. இல்லேன்னா, எங்களுக்கும் தெரிஞ்சிருக்காது. சரிதானே?


மேலும் இன்னொரு பாயிண்ட். இப்பவும் நாங்க (adults) இந்தியாவுக்கு வந்தா, ஓரிரு நாளில் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டாலும், சிறுவர்/சிறுமியர்க்கு மிகவும் கடினம். சாலை, சுற்றுப்புறங்களில் அசுத்தத்தை அவர்கள் பொறுத்துக் கொண்டாலும், 'ஓய்வறை சுத்தம்' இந்த விஷயத்தில் கண்டிப்பாக பிரச்னை செய்வார்கள்.



சென்னையில் எங்க வீட்டின் மேல் குடியிருக்கும் ஒரு நண்பர், சென்ற வருடம் அமெரிக்காவிலிருந்து திரும்பி, தன் இரு குழந்தைகளுக்கு பள்ளி
வேட்டையாடியிருக்கிறார். நங்கநல்லூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்களில் குறைந்தது ஆறு பள்ளிகளை பார்த்து, அங்கே ஓய்வறையை பார்க்க முடியுமாவென்று கேட்டதற்கு அந்த பள்ளிகளில் அதெல்லாம் பார்க்க முடியாது என்றிருக்கின்றனர். அப்படி பார்க்க அனுமதித்த ஓரிரு பள்ளிகளில், குழந்தைகள் (அ)சுத்தம் காரணமாக குழந்தைகள் மறுத்துவிட (ஆஸ்ரம்'மும் இதில் சேர்த்தி) கடைசியில் நங்கநல்லூர் செல்லம்மாள் பள்ளியில் ஓய்வறை ஓரளவு சுத்தமாக இருந்ததால் அங்கு கொண்டு சேர்த்து விட்டார்.



போன பகுதி எழுதும்போது சொல்லாத செய்தி இப்போ. டிவிட்டரில் இருக்கும் நண்பர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். என் குடும்பமும் இந்தியா போயாச்சு. லீவுக்கு இல்லை. அங்கே போய் செட்டில் ஆவதற்கு. ஏன் அந்த முடிவு என்கிற கேள்விக்கு பதில் இன்னொரு பதிவில். இந்த காரணத்தால்தான் பள்ளி ஆராய்ச்சியே துவக்கினோம்.



மேற்படி சென்ற ஆண்டு அதே ஏரியாவுக்கு ஏறக்குறைய அதே வயது குழந்தைகளை சேர்க்கச் சென்ற நண்பர் ஒருவரின் அனுபவங்களை அப்படியே கேட்டு, சுட்டு, அதன்படியே நடக்கலாமென்ற முடிவுக்கு வந்தோம்.



சென்னையிலேயே பிறந்து பள்ளிக்குப் போகும் சிறுவர்/சிறுமியர்களுக்கு ஓய்வறை பிரச்னைகள் இல்லையா? அவங்களுக்கு மட்டும் சுத்தமா இருக்கான்னு கேட்டா அதுக்கும் ஒரு உதாரணம் இருக்கு.



எங்க ஏரியாவில் இன்னொரு பள்ளி. ரொம்ப வருடமா இருக்கு. நல்லா சொல்லித் தராங்கன்னு மக்கள் அங்கே போய் பசங்களை சேர்க்கறாங்க. ஆனா அங்கே இந்த ஓய்வறை சுத்தம் கொஞ்சம் பிரச்னை. இதை அந்த மாணவர்கள் ஓரிருவர் வீட்டில் போய் புகார் சொல்ல, நம் தமிழ் மக்கள் வழக்கம்போல் அவர்களை திட்டி, அட்ஜஸ்ட் பண்ணிண்டு போ என்று சொல்ல, ஒரே ஒரு தந்தைக்கு மட்டும் கோபம் வந்திருக்கிறது. அவர், தன் பையனின், நண்பர்களின், தந்தைகளை தொடர்பு கொண்டு, பள்ளிக்கு போய் கேட்கலாம் என்றதற்கு - என்ன சொல்லியிருப்பார்கள்னு நினைக்கிறீங்க. கரெக்ட். நமக்கெதுக்கு சார் வம்பு, நான் ரொம்ப பிசி, நான் ஊர்லே இல்லை - இந்த பதில்களில் ஒன்றுதான்.



சரின்னு நம்ம நண்பரும் பள்ளிக்குப் போய் புகார் செய்யலாம்னா, பள்ளிக்கு உள்ளேயே அனுமதிக்க வாயிற்காப்போன் மறுத்திருக்கிறார். ரொம்ப நேரம் கேட்டுப் பார்த்த நண்பர், வாயிலில் இருந்தபடியே உரத்த குரலில் சத்தம் எழுப்ப, 'உள்ளேயிருந்து' அனுமதி வந்திருக்கிறது. இவரும் போய் புகார் கூற, பிரச்னையை சரி செய்கிறேன் என்று சொல்லியிருக்கின்றனர். அவ்வப்போது தன் மகனிடம் அப்டேட் கேட்டுக் கொண்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப் போவதாக சொன்னார் நம் நண்பர். அந்த பள்ளியின் பேர் சொல்லவேயில்லையே? மாடர்ன்.



சுத்தம் சுகாதாரம் பற்றிய இன்னொரு பெரிய பிரச்னை இருக்கு. மேலே படிங்க.



பிரின்ஸ் என்றொரு பள்ளி எங்க ஏரியாவில் இருக்கிறது. அங்கு படிப்பவர்கள் குறைவாக மதிப்பெண் எடுத்தாலோ, ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டாலோ, தண்டனை மிகக் கடுமையானதாக இருக்குமாம். (இந்த தகவல்கள் எல்லாம் இணையத்திலேயே - நிறைய விவாத தளங்களில் - இருக்குது). இதைவிட கொடுமை என்னன்னா, (எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும்) மாணவியருக்கு ஏற்படும் பிரச்னைகள். வகுப்புக்கு நடுவில் ஓய்வறைக்கு போகணும்னு சொன்னாலும் அனுப்ப மாட்டாங்களாம். ஏன்? இப்ப என்ன அவசரம்? அதெல்லாம் லஞ்ச் டைம்லே போயிக்கோன்னு சொல்லிடுவாங்களாம்.


இதெல்லாம் சும்மா, அப்படியெல்லாம் இருக்காது, அப்புறம் எப்படி அங்கே நிறைய பேர் (3000௦௦௦+) படிக்கறாங்கன்னு கேட்டா, நாங்க செய்த ஆராய்ச்சியில், பேசிய நண்பர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள்தான் இவை. அவ்வளவுதான்.



தொடரும்...




9 comments:

bandhu February 7, 2012 at 2:55 PM  

இது ஒரு முக்கியமான, ஆனால் யாரும் எழுத தயங்கும், பிரச்சனை.. நாங்களும் பொட்டியை கட்டுவோம்னு நினைச்சு இருக்கோம். நீங்க எழுதறது எங்களுக்கு மிக பயனுள்ளது.. நம் ஊர் பள்ளி பாத்ரூம் கதியையும் என் மகன் ரியாக்ஷனையும் நினைத்தால் வயறு கலங்குகிறது!

ILA (a) இளா February 7, 2012 at 6:17 PM  

அப்படித்தான் சார் இருக்கும். நாமதான் பழகிக்கனும், அப்படித்தானே நாமளும் வளர்ந்தோம், நம் குழந்தைகள் மட்டும் விதிவிலக்கா(விடுங்க சார், நாங்க ரொம்ப பிஸி)

சுந்தர்,  February 7, 2012 at 8:09 PM  

ஓய்வறையா, கழிவறையா/கழிப்பறையா...?

கலாச்சாரத்தையோ மொழியையோ தூக்கிப்பிடிக்கவேண்டாம் நாம், சரியான பிரயோகம் நமது சிந்தனையை மாற்றலாம்

Vetirmagal February 7, 2012 at 9:45 PM  

பல முறைகள் நடக்கும் பேரண்ட் டிச்சர் மீட்டிங்கில் கேட்க முடியாதா?

பாவம் மாணவர்கள். வீட்டில் எப்படி சுத்தமாக இருக்கவேண்டும் என்பது தெரிந்தாலும், பள்ளியில் வசதிக்ள் இல்லாமலிருந்தால் குழப்பம தான்.

முக்கியமான தலைப்பு, அழகாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

பாராட்டுக்கள்.

ஹுஸைனம்மா February 8, 2012 at 1:40 AM  

ம்ம்...

இப்போ என்றில்லை, நான் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே அப்படித்தான். இப்போ, இதைப் பெரிதாக நினைத்து கம்ப்ளெய்ண்ட் செய்யும் நான் (ஆம், இங்கே.. அபுதாபியிலும்தான் :-(( ) ஏன் நான் படிக்கும்போது பள்ளியில் இதைப் பெரிய பிரச்னையாக நினைக்காமல் இருந்தேன் என்று எனக்கே புரியவில்லை. காலை 8 முதல் மாலை 5.45 வரை... ஹும்..

இங்கேயிருந்து என் தோழி, உறவினர்களும் இந்தியா சென்றபோது, பள்ளி தரத்தைவிட, பாத்ரூம் வசதியைத்தான் பார்த்துப் பார்த்துச் சேர்த்தார்கள்.

//அவர், தன் பையனின், நண்பர்களின், தந்தைகளை தொடர்பு கொண்டு, பள்ளிக்கு போய் கேட்கலாம் என்றதற்கு//
இங்கே அபுதாபியிலும்(!!) இதே அனுபவம் எனக்கு கிடைச்சிருக்கே, சக இந்தியப் பெற்றோர்களிடமிருந்து!! ஆனா, பாத்ரூமுக்காக அல்ல, ஃபீஸுக்காக!! :-(((((

இங்கே பாத்ரூம் சுத்தமாகத்தான் இருக்கும்; கைகழுவ சோப் வைக்கவில்லை என்றுதான் புகார் செய்தேன்) :-)))) நானெல்லாம் ஊருக்குப் போனா என்னென்ன புகார் செய்வேனோன்னு இப்பவே கவலையாருக்கு :-(

Gautham February 8, 2012 at 5:21 AM  

நானும் 'பிரின்ஸ்' ஸ்கூல் மாணவன் தான்.. அனால் இந்த பதிவால் எங்கள் பள்ளியை மாற்ற முடியாது.

Gautham February 8, 2012 at 5:22 AM  

நானும் பிரின்ஸ் ஸ்கூல் மாணவன் தான். எப்படியும் இந்த பதிவால் எங்கள் பள்ளியை மாற்ற முடியாது!

சின்னப் பையன் February 8, 2012 at 9:29 AM  

சுந்தர்ஜி -> 'restroom'ன்னு சொல்றதை அப்படியே 'ஓய்வறை'ன்னு போட்டுட்டேன். பாத்ரூம் / டாய்லட் இரண்டும்தான் பிரச்னைன்னு நான் சொல்ல வந்தது. நன்றி.

வெற்றிமகள் -> பேரண்ட் / டீச்சர் மீட்டிங் பற்றி அடுத்தடுத்த பகுதிகளில்.. :-)) நன்றி.

ஹுசைனம்மா -> எஸ். பள்ளி தரத்தை விட பாத்ரூம் தரம்தான் முக்கியம்.. :-)) அங்கேயே இருந்தவரை நமக்கு அது ஒரு பிரச்னையா தெரியலேன்றது விஷயம்.

கௌதம்ஜி -> கரெக்ட்தான். இணையத்தில் நிறைய பேர் ஏற்கனவே புலம்பி இருக்காங்களே!

Sudha Sathya February 9, 2012 at 7:53 AM  

Heard of Jawahar vidyalaya in Ashok Nagar? One of the best schools for academics. In interview itself, the principal will inform the parents that the toilets will be poor only and if you agree for this, admit your child (Info from a neighbor whose daughter is studying there). A thread in forum Parentree discusses about this alone for this school. We dropped this school only coz of this reason. The school receives 18-20k per year as fees and is well known for top class education but it is not ready to fix this toilet issue.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP