FeTNA-2010: நான் வாங்கிய திட்டுகள்!!
வீட்டுலே திட்டு வாங்குறது நமக்கு பழக்கமானதுதான். ரெண்டு நாள் தொடர்ந்து திட்டு வாங்கலேன்னா, ஏதோ பிரச்சினைன்னு தோணும். இப்ப அதுவேண்டாம். நாம பேசப்போறது FeTNAவில் நான் வாங்கின திட்டுகளைப்பற்றி.
**********
இந்த விழாவில் என்னுடைய மற்றொரு முக்கிய வேலை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கொடையாளர்களுக்கு தங்குமிட வசதி செய்து கொடுப்பது. தமிழ்லே சொன்னா hotel room booking.
1. ஒரு/இரு படுக்கைகள் கொண்ட அறைகள்
2. ஒரு/இரு/மூன்று இரவுகளுக்கான அறைகள்
3. குழுவினருக்கு ஒரே இடத்தில் அறைகள்
4. தனிப்பட்ட வேண்டுகோள்கள் (சக்கர நாற்காலியில் வருபவர், நாய்க்குட்டியோடு வருபவர் etc.,)
இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவரவர்களுக்கு அறை கொடுத்து, வந்து போக வழி, வண்டி நிறுத்த இடத்துக்கான வழி இப்படி எல்லாவற்றையும் அவர்களுக்கு தெரியப்படுத்துவதே என் வேலை.
தனிப்பட்ட முறையில் அனைவரும் கடிதம் போவதால், மிகவும் கவனமெடுத்து இதை செய்தாலும், என்னுடைய தவறால், ஒருவருக்கு நீங்க கூடுதல் இரவு எடுத்திருக்கீங்க, அதற்குண்டான பணத்தை நாளைக்கு வந்து கட்டிடுங்கன்னு அனுப்பிட்டேன்.
அதுக்கு இரவு 11.30 மணிக்கு தொலைபேசி கத்துனாரு பாருங்க.. ஹிஹி.. நமக்கெல்லாம் இது சாதாரணம்தானே.. என்னுடைய தவறுதான். என்னை மன்னிச்சிடுங்கன்னு எவ்வளவோ சொல்லியும் சமாதானமாகாத அவர், பிறகு விழாவில் நேரில் பார்த்தபொழுது மிகவும் நெருங்கிய நண்பராக மாறினார்.
*****
மேலே சொன்னது என்னுடைய தவறென்றால், ஹோட்டல்காரங்க செய்த தவறு நிறைய. அறையில் வெளிச்சம் போதலே, சுடுதண்ணி வரலே, குளிர்சாதனம் வேலை செய்யலே - அப்படின்னு என்கிட்டே புகார்கள் குவிந்தன. ஹோட்டல் அறைகளுக்கு என் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்ததால், இதெல்லாம்கூட என் காதில். மக்கா, அதெல்லாம்
அங்கேயே சொல்லுங்க. நான் வந்து எதுவும் செய்யமுடியாதுன்னு நிறைய பேருக்கு சமாதானம் சொல்ல வேண்டியிருந்தது.
*****
இதைப்போல், ரொம்ப மோசமாக கத்தினவர் இன்னொருத்தர். அவருக்கு இரு படுக்கைகள் கொண்ட அறைக்குப் பதில் ஓரு ப. கொ. அறைதான் கிடைச்சது. இந்த மாதிரி மாத்தி கொடுத்துட்டேன்னு என்கிட்டேயும் ஹோட்டல்காரங்க சொல்லலே.
நட்சத்திர அறிமுக கூட்டத்தில் நானும் இன்னொரு நண்பரும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம்னு பேசவேண்டியதை தயார் செய்து வைத்திருந்தோம். சரியா அந்த நேரம் பார்த்து மேற்படி ஆளு தொலைபேசி கச்சாமுச்சான்னு கத்த, அவரை சமாதானப்படுத்தி வேறொரு அறை வாங்கிக் கொடுக்க ஆள் எதுவும் கிடைக்காமே நானே போக வேண்டியதாகி, இந்த தொகுத்து வழங்கும் வாய்ப்பு பறிபோனது.
நீங்கதான் இதை ( நிகழ்ச்சி தொகுப்பு) செய்திருக்கணும். திடீர்னு இந்த பிரச்சினை வந்தது எதிர்பாராததுன்னு தலைவர் இன்றளவும் சொல்லி வருத்தப்படும் சம்பவம். ரைட் விடுங்க அடுத்த தடவை பாத்துப்போம்னு சொன்னேன்.
*****
இப்படி திட்டினவங்களைத் தவிர பலர் நேரில் தேடி வந்து பாராட்டியது மிக மிக மகிழ்ச்சியடைய வைத்தது.
அப்படி கிடைத்த பாராட்டுக்களும், பரிசுகளும் அடுத்த இடுகையில்.
*****
7 comments:
அஃகஃகா.....
மக்கா, அண்ணனை நீங்களும் வந்து பாராட்டிட்டுப் போங்க....
வணக்கம்,
"தக்கன வாழும். தகாதன அழியும்" [ "Survival of the fittest"] இதைப் பற்றிய குறிப்புகள்/பாடலகள் தமிழில் இருக்கிறதா என நீங்கள் அறிந்த விடயங்களை இங்கே பகிரவும்.
http://makkalthalapathi.blogspot.com/2010/07/blog-post_09.html
மிகக் கடினமான பணிதான். ஆனால் இதையும் இலகுவாக எடுத்து, நிறைவாய் செயல்பட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
யு த மேன்!
பொறுமை மிகுந்தவர்கள் செய்ய வேண்டிய பணியிது.
அதனால் தான் உங்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.
என்ன தான் பண்ணினாலும், குறைகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும்.
நல்ல ப்ராஜெக்ட் மேனேஜர் ஆயிட்டீங்க !!!
http://tamilpmp.wordpress.com/
Post a Comment