FeTNA-2010: திரைக்குப் பின்னால்.. நடந்தது என்ன?
இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெவ்வேறு ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள், ஒலி/ஒளி அமைப்பு இருந்தும் எப்படி இவை அனைத்தும் தங்குதடையின்றி (சிற்சில பிழைகளைத் தவிர) நடந்தேறின?
இவற்றுக்குக் காரணம் மேடைக்குப் பின்னால் 8 பேர் கொண்ட ஒரு குழு. இவர்கள் செய்தது என்ன?
ஒருவர் ஒலி.
ஒருவர் ஒளி.
ஒருவர் வெண்திரையில் விவரங்களைக் காட்ட.
ஒருவர் மேடையில் தேவையான பொருட்களை சேகரிக்க
ஒருவர் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்களை ஒருங்கிணைக்க
ஒருவர் தகவல் பரிமாற்றத்துக்கு
ஒருவர் அவசர தேவைகளுக்கு
இவர்கள் எல்லோருக்கும் மேலாளராக ஒருவர்
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இந்த 8 பேரும் ஒருவரையொருவர் (கம்பியில்லா சாதனத்தின் மூலம்) தொடர்பு கொண்டு - அனைவரும் தயாரா என்று கேட்டபிறகு - மேலாளர் "திரையைத் தூக்கலாம்" என்று சொன்னவுடன் அவரவர் வேலையைத் துவக்க வேண்டும்.
இதில் யாரேனும் ஒருவர் பிரச்சினை என்று சொன்னாலும், திரையைத் தூக்காமல், 'ஒலி'க்காரர் ஏதேனும் ஒரு பின்னணி இசையை போட்டுவிடுவார். ஏதேனும் அறிவிப்பு இருந்தால் அறிவிப்பு செய்ய மற்றொருவர் வந்துவிடுவார். அதற்குள் பிரச்சினை களையப்பட்டு திரையைத் தூக்க ஏற்பாடு செய்யப்படும்.
இதில் இன்னொரு தகவல் என்னன்னா, இந்த 8 பேரும் ஒரே அலைவரிசையில் இல்லை. அரங்கத்தின் கம்பியில்லா அலைவரிசையில் மூவரும், நம் (தனியார்) அலைவரிசையில் பாக்கி பேரும் இருந்தோம். அரங்க அலைவரிசையில் ஆங்கிலேயரும் இருந்ததால் அதில் ஆங்கிலத்திலும், நம் அலைவரிசையில் தமிழிலும் பேசவேண்டும்.
இந்த கூட்டுமுயற்சியில் என்னுடைய வேலை என்னவென்றால், இரண்டு அலைவரிசைக்கும் நடுவில் இருந்து, தகவல் பரிமாற்றம் செய்வது.
இக்குழுவில் ஓரிருவரைத் தவிர பாக்கி அனைவருக்கும் இந்த வேலை புதிதாக இருந்தாலும், ஆரம்ப சில பிழைகளுக்குப்பின், வேலைகள் கடகடவென நடந்தன.
அரங்கத்திலிருந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் யாருக்கும் கடைசிவரை இந்த 8 பேரைப் பற்றி தெரியாவிட்டாலும், இவர்களது ஒருங்கிணைப்பே இந்த இரண்டு நாட்கள் முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற வலுவானதொரு காரணமாகும்.
விழா சுமுகமாக முடிந்தபிறகு வேலை செய்த அனைவரும் பயங்கர திருப்தியாக உணர்ந்தோம். வாய்ப்பளித்த பேரவைக்கு நன்றி கூறி குழுவின் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்.
9 comments:
இன்னும் நிறைய சொல்லுங்க கேட்கிறோம்
//
வாய்ப்பளித்த பேரவைக்கு நன்றி கூறி குழுவின் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்
//
போட்டோவ காணோம்???
அருமையான ஒருங்கிணைப்பு..! வாழ்த்துக்கள்..!
Congratulations for this as well for one of your tweet appearing in Vikatan :)
Srini
ஹிஹி.. இதுதாங்க நிஜமாலுமே திரைக்குப்பின்னால்.!
(அப்புறம் நீங்க எட்டில் ஒருவர் ஆயிட்டீங்க.. ஆயிரத்துக்கு போறதுக்குள்ள விடிஞ்சிடும் போலருக்கே..)
good one!
என்னாது இவ்வளவுதானா?
அட இதுதான் மேட்டரா?
என்னடா இந்தப் பசங்க எப்பப் பார்த்தாலும்
எதோ காதுல மாட்டிகிட்டு, கையுல எதையோ வச்சி
அலஞ்சிகிட்டு இருக்காங்கன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.
:):)
அடுத்த ஆண்டும் நம்ம ஊர்ல வந்து ஒருங்கிணைச்சுடலாமே! பேரவை விழாவைக் குறித்த எல்லாப் பதிவுகளையும் ஓரிடத்தில் போட்டால் அடுத்த ஆண்டு விழாவைச் செம்மையாகத் திட்டமிட எங்களுக்கு வசதியாக இருக்கும்! பார்க்கலாம்!
Post a Comment