Tuesday, July 6, 2010

FeTNA-2010: மதுரை வீரன் தெருக்கூத்து..

பட்டையை கிளப்புறான், பட்டையை கிளப்புறான் அப்படின்னு போட்டி போட்டு கூவும் ‘அவரோட’ ரசிகர்களும், ‘இவரோட’ ரசிகர்களும் இந்த மதுரை வீரன் தெருக்கூத்தை பார்த்திருக்கணும். இவங்கதான் நிஜமா ப.கி.

நானெல்லாம் சென்னையில் பொறந்து வளர்ந்த ஆளு. கோவில் திருவிழான்னா தெரு முழுக்க ஒலிபெருக்கி வெச்சி பாட்டு போட்டு, பசங்களை படிக்கவே விடாமே தொந்தரவு பண்ணுவாங்க (ஹையா. ஜாலி!). கூத்து எல்லாம் பாத்தது இல்லை. திரைப்படங்களில் பாத்த மாதிரியும் தெரியல. அதனால் இந்த விழாவில் பாத்துடலாம்னு முடிவோட
இருந்தேன்.

முதலிலிருந்தே இந்த கலைஞர்கள் வருவதில் பிரச்சினை இருந்தது. முதலில் விசா பிரச்சினை. பிறகு பயணச்சீட்டு கிடைக்காமல் பிரச்சினை. பிறகு விமானம் தாமதமானதால் பிரச்சினை. பிறகு ஒரு வழியாய் விழாவின் முதல் நாளன்று வந்து சேர்ந்தனர். நிகழ்ச்சி நிரலில் கூத்து முதல் நாள் இரவென்று போட்டிருந்தது. இரண்டரை மணி நேர நிகழ்ச்சி. அவர்கள் அன்றுதான் வந்திருந்ததால், கடைசி நேரத்தில் நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டு, அன்று இரவு நட்சத்திரங்களின் அறிமுகம் என்றும், அடுத்த நாள் கூத்து என்றும் அறிவிக்கப்பட்டது.

அடுத்த நாள் மாலை 4.30௦ மணி நிகழ்ச்சிக்கு, மதியம் 12 மணியிலிருந்தே ஒப்பனை செய்யத் தொடங்குகிறார்கள். 4.30 மணியும் ஆயிற்று. அரங்கில் கூட்டம் அப்புகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கூத்து துவங்குகிறது.

ஆரம்பத்தில், சலசலவென மக்களிடமிருந்து வந்த சத்தம் சிறிது நேரத்தில் அடங்குகிறது. கலைஞர்கள் ஆடுகின்றனர். பாடுகின்றனர். குதிக்கின்றனர். சுழலுகின்றனர். சிரிக்கின்றனர். அழுகின்றனர். மக்களை அங்கிங்கு நகரவிடாமல் நாற்காலியில் கட்டிப் போடுகின்றனர். மக்களும் சும்மா உட்காரவில்லை, உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருக்கின்றனர்.

அப்புறம் வந்துச்சு பாருங்க, மதுரை வீரன் வருகை. அரங்க வாயிலிலிருந்து மேடை நோக்கி வரும் அந்த வீரனுக்கு - அடேங்கப்பா.. மக்கள் அனைவரும் எழுந்து நின்று மதுரை வீரனை வரவேற்கின்றனர். கைதட்டலும், விசில் சத்தமும் காதைப் பிளக்கின்றன. (அப்துல்லா அண்ணனின் விசில் சத்தம் ஒலிபெருக்கியே இல்லாமல் அரங்கம் முழுவதும் பரவுகிறது. நான் பாம்பு மாதிரி.. வெறும் புஸ் புஸ்!) .

ஒரு சிலர் வீரன் முன் நடனமாடத் துவங்க, பலர் அவர்களை பின்பற்ற, ஏகப்பட்ட பேர் முண்டியடிக்க, இவர்கள் எல்லோரையும் தாண்டி வீரன் மேடைக்கு வரவே 20 நிமிடங்களுக்கு மேலானது. மேடையிலும் பலர் (இரு பெண்கள் ஆவேசத்துடன் தலைவிரி கோலமாக) ஆட, நாங்கள் இருப்பது அமெரிக்காவா இல்லை தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமமா என்ற ஒரு சந்தேகம் வந்துவிட்டது. பிறகு அனைவரையும் கீழே அனுப்பிவிட்டு மறுபடி கூத்தை ஆரம்பிக்க சிறிது நேரம் பிடித்தது.

மதுரை வீரன் கதை பரபரவென்று நகர்கிறது. நாயகன் பிறப்பது, பெற்றோரை பிரிவது, நாயகி பிறப்பது, இருவரும் பெரியவர்களாவது என்று ஆடல் பாடல்களுடன் விவரிக்கின்றனர். அனைவரது நடிப்பையும் விவரிக்க அருமை, அட்டகாசம் போன்ற வார்த்தைகள் குறைவே.

ஒன்றரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்ததே பெரிய விஷயம்னு நினைச்சிக்கிட்டிருந்தபோதே, கடமை 'காலிங் சத்யா, காலிங் சத்யா' என்று காதில் ஒலித்தது. அதனால், கூத்தின் முடிவே பார்க்காமல் எழுந்து வெளியே வந்துவிட்டேன். கடைசிவரை பார்த்த நண்பர்கள் கூறியதைக் கேட்டு முடிவை தவறவிட்டதை எண்ணி வருத்தமுற்றேன்.

அடுத்த வாரம் காணொளி வரும்போது பார்க்கவேண்டும் என்று இருக்கும் பலரில் நானும் ஒருவன்.

ஒரு அருமையான கலையை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் முனைவர் ஆறுமுகம் குழுவினருக்கு வணக்கங்களும், இந்த அற்புதமான அனுபவத்தை அளித்த பேரவை அமைப்பாளர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

*****

அடுத்த நாள் கூத்துக் குழுவினர் தங்கியிருந்த இடத்தில் வேறொரு வேலை செய்யப் போயிருந்தபோது அக்குழுவில் பங்குபெற்ற ஒரு கலைஞரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் - இந்தியாவில் கூத்து நடத்தி முடித்தபிறகு மக்கள் மேடையேறி அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்றும், அமெரிக்காவிலும் அப்படி கொடுப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்ததாகவும் கூறினார்.

இங்கிருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு (என்னையும் சேர்த்து) கூத்து நிகழ்ச்சியே புதிதாக இருக்கும்போது, அப்படி பணம் கொடுக்கும் வழக்கம் இருக்கு என்பதே தெரிந்திருக்காது என்பதை விளக்கி, கையில் இருந்த சில நோட்டுக்களை கொடுத்து, கூத்துக்காக பாராட்டிவிட்டு வந்தேன்.

******

பிகு: படங்களை பழமை அண்ணனின் இடுகைகளில் பார்த்துக் கொள்ளுங்கள். (என் படங்களைப் பற்றி.. அது ஒரு பெரிய கதை.. தனி இடுகையில்!).

******

6 comments:

ஒரு காசு July 6, 2010 at 9:29 PM  

தகவலுக்கு நன்றி, ச்சி!

நான்தான் மொதோ போனியா ?

M.Mani July 6, 2010 at 10:00 PM  

தெருக்கூத்தாடுபவர்கள்தான் உண்மையான நடிகர்கள்.சினிமாவில் வெட்டி ஒட்டி போடுவதைப்பார்த்துவிட்டு புரட்டு நடிகர் ளசூப்ப்ர ஸ்டார் ... போன்ற புரட்டுவாதிகளின் பின்னால் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. உண்மையான நடிகர்கள்(கூத்து மற்றும் நாடகம்) வறுமையில் வாடுகின்றனர்.

அருமையான எருமை July 7, 2010 at 2:25 PM  

சிறுவயதில் கிராமங்களில் பார்த்த தெருக்கூத்து நிகழ்சிகளை நினைவுப் படுத்திவிட்டீர்கள்! "அந்த" போட்டோக்களைப் பற்றிக் கேட்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்..சீக்கிரம் சொல்லிருங்க! டோனி கல்யாணத்தைப் பத்தி லட்சுமி ராய் அக்கா கிட்ட விசாரிச்சீங்களா? :-)

a July 7, 2010 at 6:41 PM  

//
(இரு பெண்கள் ஆவேசத்துடன் தலைவிரி கோலமாக) ஆட,
//

பூசாரி அவங்க ரெண்டு பேருக்கும் விபூதி பூசி சாந்தப்படுத்தினாரே கவனிக்கலையா???

Thamira July 8, 2010 at 12:36 PM  

அழகான விவரிப்பு. புஸ்.. புஸ்..

சீனூ'Z September 13, 2011 at 3:07 PM  

hai chinnapaiyyan,..please can u post the pictures of this act.i'm really eager to see.I'm also the person who most like therukoothu.please post the pictures. please please...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP