FeTNA-2010 : பழமைபேசியையும், நசரேனையும் தோற்கடிச்சிட்டோம்ல!
பேரவைக்காக நான் செய்த பல்வேறு வேலைகளுக்கு நடுவில் (அவை தனித்தனி இடுகைகளில் வரும்!) இலக்கிய வினாடி வினாவில் பங்கேற்பதாகவும் பேர் கொடுத்திருந்தேன்.
பின்னர் தன்னந்தனியாக இருந்தவொரு நேரத்தில் - இலக்கியத்துக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? அதில் நாம் என்ன பதில் சொல்ல முடியும்? - என்றெல்லாம் யோசித்துப் பார்த்தேன். கல்யாணம்ற ஒரு பெரிய சவாலையே ஏத்துக்கிட்டே, இந்த வினாடி வினா முடியாதான்னு எதிரே இருந்தவர் (கண்ணாடியில்) சொன்னார்.
சரி நானும் ஆட்டத்துக்கு வர்றேன்னு சொல்லிய அடுத்த நாளுக்குள் அண்ணன் பழமைபேசி, அணிகளெல்லாம் அறிவிச்சிட்டு பல்வழி அழைப்புகளுக்கான நேரம் காலத்தையெல்லாம் குறிச்சி அனுப்பிட்டார். நானும் இரண்டொரு அழைப்பில் கலந்துகொள்கிறேன். எனக்கு சில பாடத்திட்டங்களை ஒதுக்கி, நீ கண்டிப்பா இதை படிக்கணும்னெல்லாம் சொல்லிட்டாங்க.
அப்பதான் பேரவை விழாவுக்கான வேலைகள் சரியான சூடு பிடித்திருந்த நேரம். நானும் __யாக ஆரம்பித்த காலம். இந்த எனக்கான பாடத்தையும் படிக்க ஆரம்பிச்சேன். நல்லவேளை, செய்யுள், வெண்பா அப்படியெல்லாம் குடுக்காமே எனக்கு உரைநடைப்பகுதிகளை ஒதுக்கியிருந்தாங்க. ஜாலியா பல தடவைகள் படிச்சேன். கொஞ்சம் விட்டுப்(பி)படிப்போம்னு முடிவு செய்தேன். விட்டுட்டேன். ஹிஹி.. உங்களுக்குத்தான் தெரியுமே.. அப்புறம் (பி)படிக்கவேயில்லை.
அதற்குள் விழாவுக்கான நேரம் வந்துவிட்டது. நான் பயங்கர __யாயிட்டேன். நம்ம அணியிலிருக்கிற மத்தவங்க படிக்காமலா போயிருப்பாங்க. அவங்க நம்மளையும் ஜெயிக்க வெச்சிருவாங்கன்னு தைரியம் வந்துடுச்சு (வேறே வழி?). மேலும் எங்க அணியில் அண்ணன் அப்துல்லா இருந்தாருன்றது ஒரு யானையளவு தைரியத்தை கொடுத்திருந்தது. எதிரணியில் அண்ணன் பழமைபேசியும், தம்பி நசரேயனும்.
இங்கே ‘கட்’ பண்றோம். இப்போ விழாவில் இரண்டாம் நாள்.
வினாடிவினா துவங்குகிறது. அட்டகாசமான வடிவமைப்பு. பல்லூடத்தின் சிறப்பான பயன்பாடு. உருவாக்கியவர் திரு. நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள். பலவிதமான கேள்விகள். பதில்கள் கொட்டுகின்றன. மறுபடி ஒரு ஹிஹி. பதில்கள் கொட்டுறது என்கிட்டேயிருந்து இல்லே. என்னைத் தவிர மத்தவங்க எல்லார்கிட்டேயிருந்தும். இப்படி எல்லாக் கேள்விகளும் பாடத்திட்டங்களுக்கு வெளியே (out-of-syllabus) கேட்டா நான் எப்படி பதில் சொல்றதுன்னு, என்னையே நான் சமாதானப்படுத்திக்கிட்டேன்.
நடுவில் ஒரு கேள்வி கேட்டப்போ டக்குன்னு கையத் தூக்குறேன். பக்கத்திலிருந்த அண்ணன் அப்துல்லா, மைக்கை சத்யாகிட்டே கொடுங்க. கையத் தூக்குறாரு. பதில் அவருக்குத் தெரியும்போலங்கறாரு. சட்டை ரொம்ப ச்சின்னதானதால், அதைக் கொஞ்சம் தளர்த்திக்கலாமேன்னு கையைத் தூக்கியது பேராபத்துலே முடிஞ்சுடுச்சு. அப்புறம் வழியறது நமக்கென்ன புதுசா, உண்மையச் சொல்லிட்டு கையை இறக்கிட்டேன்.
கடகடன்னு பறக்குற வினாடிவினா கேள்விகள். எல்லாத்துக்கும் சடசடவென பதில்கள். தமிழார்வலர்கள், அறிஞர்கள் கலக்குறாங்க. அருமையான பதில்களுக்குப் பிறகு நிகழ்ச்சி முடிவடையுது. ஜெயிக்கப் போவது யாரு? வேற யாரு? எங்க அணிதான். 9 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் நாங்க ஜெயிச்சிட்டோம். எல்லோருக்கும் முனைவர் பர்வீன் சுல்தானா சான்றிதழ்கள் வழங்குறாங்க.
மத்தவங்க எல்லாரும் படிச்சி தெரிஞ்சிக்கிட்டு நிகழ்ச்சிக்கு வந்தாங்கன்னா, நான் மட்டும் நிகழ்ச்சிக்கு வந்துட்டு நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். அடுத்த வருடமாவது ஏதாவது உருப்படியா படிக்கலாம்னு ஒரு யோசனை. பாப்போம். டேய் அடுத்த வருடமும் இதே இடுகையை மறுவெளியீடுதான் செய்யப்போறேன்னு அவரு கண்ணாடியில் சொல்றாரு. (மொதல்லே வீட்டிலிருக்கிற கண்ணாடியையெல்லாம் தூக்கணும்...)
*****
பிகு-1 : எனக்குக் கொடுத்த சான்றிதழில் என் பேருக்கு முன்னால் இருக்கிற இரண்டு சொற்களைப் பாத்து சிரிக்கக்கூடாது சொல்லிட்டேன்.
பிகு-2 : இடுகையில் ரெண்டு இடத்தில் __ போட்டிருக்கிறேன். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். ‘பி’யில் துவங்கி ‘ஸி’யில் முடியுற ஒரு சொல். அதை கொஞ்சம் ஓவராத்தான் சொல்லிட்டேன் போல. அவருக்குப் பிடிக்கலே. அவரு போட்டிருக்கிறது நீதானா பாருன்னு உரலைக் கொடுத்த நண்பருக்கு நன்றி..
*****
13 comments:
வாழ்த்துகள்.... உங்க அணிதான் உண்மையிலேயே கலக்கல்.... குறைந்த நேரத்தில்.... அணியை ஒருங்கிணைத்து... செயலாற்றியமை நன்று.....
இதெல்லாம் ஒத்துக்க மாட்டோம். எங்கள் சார்லெட் சிங்கம் இந்த மாதிரியான விஷயத்துல எல்லாம் தோற்றதா சரித்திரமே கிடையாது. நாங்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். கொஞ்சம் காசும் செலவு பண்ணலாமுன்னு வெச்சிருக்கிறோம். முடிவுகள் வரும் வரை எந்த கொண்டாட்டமும் ஒத்துக்கொள்ளப் படமாட்டாது..
சார்லெட் தமிழ் மறவர் பேரவை
செயல்வீரர் சீமாச்சு...
அண்ணே நாங்க கவுஜ படிச்சதையும் போட்டு இருக்கலாம்
FETNA இனிதே நடந்தேற தங்களுடைய பங்களிப்பு மிக முக்கியமானது..
உங்க எல்லோராட ஆர்வமும், உழைப்பும், அதற்கான வெற்றியும் பொறாமையா இருக்கு நண்பர்கள். நேர்ல வந்து வாழ்த்தணும்னு மனசு துடிக்குது...
டிக்கெட் ப்ளீஸ்...
அடுத்து இந்தியா வரும்போது இதுக்கு ட்ரீட் தராமல் போக கூடாது ச்சத்யா...
very good keep it up.. அடுத்த முறை சென்னை வரும் போது இதே போல ஒரு போட்டி வைப்போம்
ரசித்து, சிரித்துப் படிக்கும் படியான விவரணை.:-))
அப்படியே நீங்க என்ன மாதிரிண்ணே. (எழுதறதில் இல்ல.. ஹிஹி.. டேலண்டில்.)
:) வாழ்த்துக்கள்.
இலக்கிய ஆர்வலர்னா எதாவது வியாதியா தல!?
இலக்கியத்திற்கு ஆர்"இடர்"னு தெரிந்து விட்டது :)))))))))
அது யாருங்க அந்த கண்ணாடில இருக்கற ஆளு?
விபுலானந்தர் அணி கலக்கிட்டோம்ல...
Post a Comment