இது ஒரு குப்பை மேட்டர்!
அமெரிக்கா வந்து இறங்கியதும் எங்களுக்குப் பிடிச்சது - சுத்தம். தெரு, பூங்கா, கடைகள் எங்கு பார்த்தாலும் சுத்தம் x 3. குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் போடமுடியாது. அதுமட்டுமல்லாமல், அந்த குப்பைகளை தரம் பிரித்து வெவ்வேறு தொட்டிகளில் போடவேண்டியிருக்கும்.
1. மக்கும் பொருட்கள் தனியாக
2. காகிதங்கள், அட்டை பெட்டிகள் தனியாக
3. இதர குப்பைகள் தனியாக
இப்படி 3 தொட்டிகள் வைத்திருப்பாங்க. அதில்தான் போடணும். ஒவ்வொரு தொட்டிக்கும் அதற்குண்டான குப்பை வண்டிகள் வந்து காலி செய்து எடுத்துட்டு போயிடுவாங்க. இப்படித்தான் 4+ வருடமா நடந்திட்டிருந்தது. ஆனா 2 மாதத்திற்கு முன் திடீர்னு ஒரு மாற்றம். மேலே சொன்ன 1, 2, 3 எல்லாத்தையும் ஒரே தொட்டியில் போட சொல்லிட்டாங்க. காலையில் 5 மணிக்கு ஒரு வண்டி வந்து மொத்தமா அள்ளிக்கிட்டு போயிடும்.
ஏம்மா இப்படி ஆயிடுச்சுன்னு, எங்க வீட்டுக்காரம்மாகிட்டே (house owner!) கேட்டேன். ஒப்பந்தக்காரர் சொன்னபடிதான் செய்யறோம். இந்த குப்பைகளை அவங்க இடத்தில் போய் தரம் பிரிச்சிப்பாங்கன்னு சொன்னாங்க. ஏம்மா, இங்கே பிரித்து எடுத்துட்டு போறது சுலபமா, இல்லே ஊர் குப்பைகள் எல்லாத்தையும் ஒரு இடத்துலே போட்டு அங்கே பிரிக்கறது சுலபமா? யோசிச்சி சொல்லுங்கன்னேன்.
அவங்களுக்கு சுர்ர்ன்னு கோபம் வந்துடுச்சு. ஊர் முழுக்க இப்படித்தான் பண்றாங்க. உனக்கு என்ன போச்சு? சொல்றதை செய்ன்னு சொல்லிட்டாங்க.
சரிதான், எப்படியும் எல்லாத்தையும் ஒரே கண்டெய்னர்லே போட்டு, தூத்துக்குடிக்குதான் அனுப்ப போறாங்க. அதை எதுக்கு இங்கே உட்கார்ந்து வெட்டியா பிரிச்சிக்கிட்டு, செலவு செஞ்சிக்கிட்டுன்னு அந்த செலவையும் குறைச்சிட்டாங்க போலன்னு நினைச்சிண்டேன். அந்தம்மாகிட்டே சொல்லவில்லை.
டிஸ்கி: நிஜம் என்னன்னு எனக்கு தெரியாது. உண்மையாகவே ஓரிடத்தில் குப்பைகளை தரம் பிரித்து அதை உரியமுறையில் சுழற்சி செய்யலாம். ஆனா, அமெரிக்காவிலிருந்து தூத்துக்குடிக்கு இப்படி நிறைய குப்பைகள் வந்து சேர்கின்றன என்று செய்திகளில் பலமுறை படித்துள்ளதால், இப்படி நினைக்கத் தோன்றியது.
***
பலப்பல வருடங்களுக்கு முன் பதிவு துவக்கும்போது ஆர்வக்கோளாறில் ‘ச்சின்னப்பையன்’னு பேர் வெச்சி ஆரம்பிச்சேன். இந்த மாதிரி ‘ச்’ முதலில் வரக்கூடாதுன்னு சிலர் சொன்னாங்க. அப்புறம் மறந்துட்டாங்க. நானும் விட்டுட்டேன். ஆனா இன்னிக்கு ட்விட்டரில் திடீர்னு என் பெயர் பிரச்சினை ’அடி’பட்டிருக்கு.
நண்பர் @tamilravi இப்படி ஒரு ட்விட் போட்டிருந்தாரு.
”@TPKD_ @nchokkan @karthi_1 சோளி சரி.ச்சின்னப்பையன் என்று தமிழ்ச் சொல்லையே சிதைக்கும் கொடுமையையும் பார்த்திருக்கிறேன்.”
இதை படிச்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. அதனால், இன்றிலிருந்து என் பேரை மாத்திக்கிட்டேன். முழுசா இல்லீங்க. அந்த ‘ச்’ மட்டும் எடுத்துட்டேன். அவ்வளவுதான்.
ஆனா நீங்க உங்க ஆதரவை மாத்தாமே தினமும் வந்து போயிட்டிருங்க.
***
6 comments:
சுத்தம் சார்ந்த விஷயத்தில் நாம் இன்னும் பழக வேண்டும்...
//மக்கும் பொருட்கள்//
ச் - மக்கும் பொருட்கள் பட்டியலில் வந்துருச்சு போல
ம்.. தூத்துக்குடி மேட்டர் உண்மையாக்கூட இருக்கலாம் விசாரிங்க..
ச் ப்ரச்சனை மாதிரியே .. என் பதிவில் ஒரு சொற்றொடர் தவறு என்பதைக்கூட டிவிட்டர்ல தான் பேசிக்கிட்டதாகச் சொன்னாங்க.. எனக்கும் அப்ப ரொம்ப கஷ்டமா இருந்தது..
புனைப்பெயராக வைத்துக் கொள்வது தமிழ்ச்சொல்லாக இருக்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம்? என் பெயரை நான் எலவசம் என வைத்தால் யார் என்னைக் கேட்பது?
ச்சின்னப்பையன் என வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தப்புமில்லை!
ஆனால் சிறுவன் என்று எழுத வந்து சின்னப்பையன் என எழுதாமல் ச்சின்ன என எழுதினால் நானே பிரம்பைத் தூக்க வேண்டியது வரும்.
பெயரை மாற்றச் சொல்வதெல்லாம் மொழி டெரரிசம்தான்! :)
தூத்துக்குடிகாரர்கள் சண்டைக்கு வரப்போகிறார்கள்..நாங்கள் என்ன குப்பை தொட்டியா என்று? இங்கே அப்படி பிரித்து எடுக்கவில்லை என்று கவலை பட்டால்..எல்லாம் தலைகீழ்..
yenakkennavo neenga maathikka venaamnuthaan thonuthu........
Post a Comment