சிகரெட் நாற்றம் எனக்குப் பிடிக்காது...
ச்சின்ன வயசிலேந்தே எனக்கு இந்த சிகரெட் நாற்றம் (சில பேரு வாசனைன்னு சொல்லுவாங்க!) பிடிக்காது. நல்ல வேளையா எங்க வீட்டுலே யாரும் சிகரெட் பிடிக்க மாட்டாங்க. ஆனா, மத்த பொது இடங்கள்லே சிகரெட் பிடிக்கறவங்களால் எப்பவும் பெருந்தொல்லைதான்.
அலுவலகத்தில் அப்பப்போ டீ குடிக்கப் போகும்போது, கூட வர்ற நண்பர்கள் தம் பத்த வைப்பாங்க. அவங்ககிட்டே ”ஏண்டா இப்படி சிகரெட் குடிச்சி உங்க உடம்பை கெடுத்துக்கறது பத்தாமே என் உடல்நலத்தையும் கெடுக்குறீங்க? இந்த கண்றாவியை விட்டுத் தொலையுங்களேன்" - அப்படின்னு நான் சொன்னா ஒருத்தனாவது கேட்டாதானே. சிரிச்சிக்கிட்டே "தம் அடிக்குறதால்தான் எங்களுக்கு மன நிம்மதியே கிடைக்குது. உனக்குப் பிடிக்கலேன்னா தள்ளி நில்லு".
சிகரெட் குடிக்கக்கூடாதுன்னு சிறுவர்கள் பள்ளியில் படிக்கும்போதே சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கணும். சிகரெட் குடிக்கறதால் வரக்கூடிய நோய்கள், சும்மா பக்கத்தில் நின்று அந்த புகையை சுவாசிக்கிறதால் வரக்கூடிய பிரச்சினைகள் - இதையெல்லாம் தெளிவா பசங்களுக்கு புரியற மாதிரி பாடம் நடத்தணும். இதெல்லாம் நான் சொன்னா யாரு கேக்குறாங்க?
நான் அடிக்கடி நினைச்சிக்குவேன். இந்த விமான நிலையத்துலே இன்னும் சில இடங்கள்லே, சிகரெட் பிடிக்கறவங்களுக்குன்னு தனியா இடம் ஒதுக்கியிருப்பாங்க. அதே மாதிரி ஒவ்வொரு ஊரிலும் இவங்களுக்கு தனியிடம் கொடுத்துட்டு - அங்கேதான் இனிமே தம் அடிக்கணும்னு சொல்லிடணும்னு.
முடிஞ்சா இவங்களுக்காக ஒரு தனி ஊரே உருவாக்கிட்டு - அதுக்கு தம்பரம் (தாம்பரம் மாதிரி!) அப்படின்னு பேரு வெச்சி எல்லாரையும் அங்கே அனுப்பிட்டா, மத்தவங்க இந்த சிகரெட் புகைலேந்து தப்பிக்க முடியும். நான் ஒரு நாள் முதல்வரானா போடும் முதல் கையெழுத்து இந்த தம்பரம் நகருக்குதான் இருக்கும். (அடுத்தது ஸ்விஸ் வங்கி கணக்கு அப்ளிகேஷன்!).
சரி விடுங்க. நாம எவ்வளவு சொன்னாலும் இவங்க யாரும் கேக்கப்போறதில்லே. நம்மாலே முடிஞ்சது இந்த சிகரெட் புகையிலேந்து தப்பிக்க அந்த கடைப்பக்கம் ஒதுங்கிக்குவோம்.
“தம்பி, காஜா பீடி ஒரு கட்டு எடுப்பா...”.
என்ன ஆச்சு? உங்களுக்கும் இருமலா? கொஞ்சம் தள்ளி நிக்கவேண்டியதுதானே?
*****
13 comments:
ஏன் இப்படி? மணிரத்னம் மாதிரி படம் எடுக்கிறத விடுங்க. அதாங்க தெரிஞ்ச கதைய...
ஹி..ஹி.. பீடி மட்டும்தானா, சுருட்டு கூட உண்டா.. :)
அடுத்தது ஸ்விஸ் வங்கி கணக்கு அப்ளிகேஷன்// சிரித்துக்கொண்டே வரும்போது இடையே ஒரு சிரிப்பு வெடிகுண்டு. இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்.
ஒரு நாள் முதலவரானாலா...இல்ல ஒரு நாள், முதல்வரானாலா...?
தம்பரம் நல்லாத்தான் இருக்கு...
புகையுர், பீடிப்பட்டி, சிகரெட் புரம் இந்த மாதிரிகூட வைக்கலாம்....
ஒரு நாள் முதலமைச்சரா வந்தா கொஞ்சம் பீடி விலையை கம்மி பண்ணுங்க தலைவரே...:))
தம்பரம் தாம்பரம் பக்கத்தில் இல்லையே..எங்களுக்கும் பிடிக்காது..
சின்னப்பையன் டச்
எனக்கும் சிகரட் நாற்றம் பிடிக்காது.
எதுக்குத்தான் இந்த கருமத்தை புகைச்சிட்டு திரியிரங்களோனு தோணும்.
நீர் பீடி பார்ட்டியா?
பீடி நாத்தத்துக்கு சிகரெட் புகையே தேவலை..!
கார்,ரயில்,தொழிற்சாலை,மனிதனே வைக்கும் சூனியம்(போர்) போன்ற பெரிய பெரிய ஆளுகளையெல்லாம் விட்டுட்டு இத்துணூண்டு இருக்கிற பீடி,சிகரெட்டுக கிட்டு மல்லு கட்டுறீங்களே!ஊருக்கு இளைச்சவன்ங்கிறதாலதானே:)
(நான் சிகரெட் பிடிப்பது,கொடுப்பது,தொடுவது,ஊதுவது,வத்தி வைப்பது செய்வதேயில்லை.சுகாதாரமே சுகம் பஜனை கோஷ்டி.)
//பீடி நாத்தத்துக்கு சிகரெட் புகையே தேவலை..!//
உங்களை யாரு பீடி குடிக்கச் சொன்னா?
:))))
Post a Comment