நாலு பேர் ஆறு விதமா..
பணம் இன்னிக்கு வரும். நாளைக்கு போகும். அதுக்காக வராமே இருக்கறதா?
எப்போ அமெரிக்காவுக்கு போனானோ அப்பவே உறவினர்களையெல்லாம் மறந்துட்டான்.
வேலை என்ன பெரிய வேலை. இது இல்லைன்னா வேறே வேலையே கிடைக்காதா என்ன?
இரண்டு மூணு நாள் கூட விடுமுறை கிடைக்கலேன்னா, அலுவலகமே இவன் தலையில்தான் ஓடுதா என்ன?
வீட்டுக்கு பெரியவனா முன்னிருந்து நடத்த வேணாமா? இப்படியா தொலைபேசியில் விசாரிக்கறது?
எல்லாம் பணம் பண்ற வேலை. அந்த காலத்துலே எப்படி இருந்தோம்னு நினைச்சி பாக்க வேணாமா?
*****
இப்படி எல்லோரும் எதைப் பத்தி பேசறாங்க? விவரங்கள் இடுகையில்..
*****
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23வது ஆண்டு விழாவில் மாபெரும் பதிவர் சந்திப்பு ஒன்று நடக்க இருக்கிறது. பதிவர்களும், அனானிகளும், மற்றும் அனைவரையும் வருமாறு அழைக்கிறேன்.
உள்ளூர் அண்ணன் விழாவின் பிரச்சார பீரங்கி (மாதிரி!) பழமைபேசியும், வெளியூர் அண்ணன் அப்துல்லா அவர்களும் பங்கேற்கிறார்கள். அனைவரும் வருக, ஆதரவு தருக!!!
*****
ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டு முடிவடையும்போது சஹானாவின் வாத்திகளிடம் ஒரு சின்ன நோட்டு கொடுத்து, சஹானாவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதுமாறு சொல்வோம்.
மூன்றாவது வருடமாக இந்த வருடமும் எழுதி வாங்கியிருக்கிறோம். கடந்த வருடங்களின் குறிப்புகளை இப்போது படித்தாலே பரவசமாய் இருக்கும்போது இன்னும் 15-20௦ வருடங்கள் கழித்துப் படித்தால் எப்படி இருக்கும்? ஏய் யாருப்பா அது பின்னாலே - 15 வருடம் கழிச்சி வா, எப்படி இருந்துச்சுன்னு சொல்றேன்னு சொல்றது?)
*****
ரொம்ப நாளைக்கு முன்னாடியே மின்னூல் கிடைத்தாலும், புத்தகம் வாங்கித்தான் படிக்கணும்னு இருந்தது - சேத்தன் பகத்தின் 2 States. பஞ்சாப் பையனுக்கும், தமிழ் பொண்ணுக்கும் நடுவே ஒரு ’இது’. பல தடைகளைத் தாண்டி ’அது’ எப்படி திருமணத்துலே முடியுதுன்னு புத்தகம்.
போன தடவை இந்தியா போயிருந்தபோது அந்த புத்தகத்தை வாங்கி வந்து - ஓய்வறையில் படிச்சி படிச்சி ஒரு வழியா படிச்சி முடிச்சேன். நிறைய பேர் ஏற்கனவே படிச்சிட்டிருப்பீங்க. கதையில் வர்ற தமிழ்க்குடும்பம் மூலமா தமிழர்களை நல்லா வாரியிருக்காரு சேத்தன்.
கதையில் வர்ற தமிழ் வார்த்தைகளுக்கெல்லாம் பொருள் கேட்கும் என் குழுவிலிருக்கும் (இந்தியப்) பெண்களுக்கு நான் சொல்லும் பதில் வெறும் ‘ஙே’தான். ஏன்னு கேக்குறீங்களா? அட. புத்தகத்தில் அங்கங்கே அக்மார்க் தமிழ் கெட்ட வார்த்தைகள். அதுக்கெல்லாம் பொருள் சொல்லமுடியுமா? அதுவும் பொண்ணுங்க கிட்டே போய்? இந்த விளையாட்டுக்கே நான் வரலேப்பா!!!
*****
இந்த வாரயிறுதியில் சென்னையில் என் கூடப்பிறந்த (கூடன்னா கூடவே இல்லை. ஒரு நாலு வருஷம் தள்ளி!) தம்பிக்கு திருமணம். பல்வேறு காரணங்களால் என்னால் போக முடியவில்லை. வரமுடியாதுன்னு பல மாதங்களாய் சொன்னாலும், கடைசி நிமிடத்தில் <இடுகைத் தலைப்பு> பேசத்தானே செய்வாங்க.
*****
14 comments:
நண்பர்களே! உங்களின் பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள். சீரியஸ்ஸான விடயமாக எழுதத் தொடங்கி சிந்தனையைத் தூண்டும் வகையில் பதிவினை நிறைவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் தோழா!
அருமையான பதிவு வாழ்த்துகள்..!
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html
அண்ணே, இருந்தாலும் நீங்க... :-)
சிரிப்புத்தான் வருது பாஸு... ஆனாலும் தம்பி கல்யாணத்துக்க போகாம போய்ட்டீங்களே...
ஓபாமாவே ஊர் சுத்துறாரு... அவரைவிடவா உங்களுக்கு பொறுப்பு அதிகம்...?
ஆமா இருந்தாலும் இது எல்லாம்..
வேணாம்.. அப்பறம்.. 5 பேர் ஏழுவிதமான்னு எழுதுவீங்களோ?
//இந்த வாரயிறுதியில் சென்னையில் என் கூடப்பிறந்த (கூடன்னா கூடவே இல்லை. ஒரு நாலு வருஷம் தள்ளி!) தம்பிக்கு திருமணம். பல்வேறு காரணங்களால் என்னால் போக முடியவில்லை//
தம்பிக்கு கல்யாண வாழ்த்துக்கள்
அவங்க அப்பிடி புலம்புனா, பதிலுக்கு நீங்களும்,’என்னத்த வேலை இது? உங்களப் போல ஒரு கல்யாணம் விடாம போக முடியுதா? உங்க கம்பெனியில ஒரு வேலை கிடைக்குமா?’ன்னு பதிலுக்கு புலம்பிட வேண்டியதுதான்!!
//என் கூடப்பிறந்த (கூடன்னா கூடவே இல்லை. ஒரு நாலு வருஷம் தள்ளி!) தம்பிக்கு //
அப்படி என்றால் நீங்கள் ச்சின்னப்பையன் இல்லையா ?
:-)
சேத்தன் எதை கத்துக்கிட்டாரோ இல்லையோ சரிசரி,சரிசரியும் கெட்ட வார்த்தைகளும் சரளம்...
பதிவர் சந்திப்பு + தம்பிதிருமணம்.
வாழ்த்துக்கள்.
தம்பி திருமணம் வாழ்த்துக்கள் மற்றும் நீங்க போகாத காரணத்துக்கும் வாழ்த்துக்கள்.
இந்த ஊரில் இருந்தா முக்கியமான நிகழ்ச்சிக்கு போகவில்லைனா ஒரே காரணம் தான் இருக்க முடியும்.
சஹானாவிற்கு கூட விளையாட ஒருவர் கூடிய விரைவில் வர போகிறார் என்று அர்த்தம்.
கூடப்பொறந்த தம்பி கல்யாணத்துக்கு போகலைன்னா அது தப்புதாங்க.. அப்படி என்ன வெட்டி முறிக்கறீங்க அங்க.? (நாயம் சொல்றனாம்)
அப்புறம் அங்கு வரும் எங்கள் பீரங்கியை விழா முடிந்தவுடன் பத்திரமாக திரும்பி அனுப்பி வைக்கவும். :-))
அண்ணனா லட்சணமா கல்யாணத்துக்கு வந்து நடத்தி வெப்பீங்களா.... வராம இருக்கறதுக்கு எதாவடு சாக்கு போக்கு சொல்லாதீங்க !!
Post a Comment