பாசம், பொறுமை, சண்டை மற்றும் தமிழ் விழா!
திடீர்னு எங்க வீட்டு பக்கத்தில் இருக்கிற ரெண்டு - மூணு பேரு எங்கிட்டே பேசறத நிறுத்திட்டாங்க. முன்னாடி மெதுவா புன்னகை புரிஞ்சவங்க, பின்னாடி பற்களை கடுகடுன்னு கடிக்கறாங்க. அப்படி என்னதான் ஆச்சு... கீழே படிங்க...
*****
அப்பா வந்துட்டாருடா செல்லம்.
குட் நைட்,
குட் மார்னிங்,
பசிக்குதாடா கண்ணு
அப்படின்னு "அவங்க"கிட்டேயும்
சத்தம் போடாதீங்க. "அவங்க" தூங்கறாங்க
விளக்கை அணைங்க. "அவங்களுக்கு" தொந்தரவா இருக்கில்லே
அப்படின்னு எங்க கிட்டேயும் சொல்லிட்டிருந்தாங்க சஹானா.
(நாங்க = நாங்க. அவங்க = மீன்கள்)
அவங்களுக்கு சாப்பாடு போடறது, தொட்டியை சுத்தம் பண்றது, தூசு தும்பு அவங்களை பாதிக்காமே பாக்குறது - அப்படி இப்படின்னு வேலைங்க கூடிப்போச்சு.
வாங்கின புதுசுலே தொட்டி பக்கத்துலே போனாலே அலறி அடிச்சி ஓடிட்டிருந்த ஸ்வீட்டியும், ப்யூட்டியும் - நாலு வாரத்துலே தைரியமா முன்னாடி வந்து நிக்க ஆரம்பிச்சாங்க.
திடீர்னு ஒரு நாள் ப்யூட்டி குப்புற கவுந்தடிச்சி படுத்திருந்தாங்க. ஒண்ணுமே புரியல. சஹானா அவங்களை மருத்துவர்கிட்டே கூட்டிட்டு போகணும்னு அடம் பிடிக்குறாங்க. அவங்க வாத்தி வீட்டுலேயும் இப்படித்தான் ஆகி, பின்னாடி மருத்துவர்கிட்டே போய் சரிசெய்தாங்கன்னு அழுகை.
நமக்கு இருக்கவே இருக்கு கூகிள். என்ன ஆச்சுன்னு ஆராய்ச்சி பண்ணினா - வயித்துலே காத்து போயிட்டா மீன் அப்படித்தான் கவுந்தடிச்சி படுத்திருக்கும்னும், 90% உயிருக்கு பிரச்சினையிருக்காதுன்னும்
போட்டிருந்துச்சு.
அங்கு போட்டிருந்தபடியே மறுபடியும் தண்ணியை சுத்தம் பண்ணிட்டு, கடவுளை வேண்டிக்கிட்டு இரவு படுக்கப் போனோம்.
காலை 5 மணி.
ப்யூட்டி நினைப்பிலேயே படுத்திருந்து, எழுந்து வந்து பார்த்தால் - ம்ஹூம். பேச்சு மூச்சு இல்லை. சஹானா எழுந்து வர்றதுக்குள்ளே அவங்களை எடுத்து அப்புறப்படுத்தியாச்சு.
மருத்துவர்கிட்டே கூட்டிட்டு போகலாம்னு நான் அப்பவே சொன்னேனேன்னு எழுந்து வந்த சஹானா அழ ஆரம்பிச்சாங்க.
இன்னும் பெரிய தொட்டி, கூடுதல் மீன்கள் வாங்கித் தர்றேன்னு சமாதானப்படுத்தியாச்சு.
இணையத்தில் போட்டிருந்த மாதிரியே - மூழ்கக்கூடிய சாப்பாடு, அடிக்கடி சுத்தம்னு எல்லாமே சரியா செய்தாலும், ப்யூட்டி போனதுலே மனசு ரொம்பவே கஷ்டமா போயிடுச்சு.
நாயை / பூனையை 'ஆம்புலன்ஸ்' வெச்செல்லாம் காப்பாத்த முயற்சிக்கிற அமெரிக்கர்களை கேலி செய்த மனம் - இப்ப மெல்ல மாறுது. அந்த பாசம் புரியுது.
*****
இ.கோ.மு.சிங்கம் அப்படின்னு ஒரு படத்தை பாக்க ஆரம்பிச்சோம். நகைச்சுவை இப்ப ஆரம்பிச்சிடும், அப்ப ஆரம்பிச்சிடும்னு ஒரு 20 நிமிடம் போயிடுச்சு. பொறுமை பொறுமைன்னு எழுந்து போகவிருந்த தங்கமணியை உக்கார வைக்கிறேன்.
படத்துலே வி.எஸ்.ராகவன் மெதுவ்வ்வ்வ்வ்வா நடந்து போய் அந்த தலைவன்கிட்டே ஏதோ கேட்டுட்டு மறுபடி மெதுவ்வ்வ்வ்வா நடந்து வரும்போதே ஏதோ மொக்கையா சொல்லப்போறாருன்னு தெரிஞ்சி போச்சு.
அவரும் "கு*" விட்டுக்கலாம்னு சொல்லிட்டாருன்னு சொன்னவுடனே - இருக்குற ஒட்டுமொத்த பொறுமையும் போய் இதுக்கு "சுறா"வே மேல்னு சொல்லி அதை பாக்க ஆரம்பிச்சிட்டோம்.
ஆரம்ப பத்து, இருபது நிமிடங்கள் மட்டும் பார்த்த தமிழ் படங்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.
*****
சஹானாவை பார்க்கிற அமெரிக்கர்கள் - எப்பவுமே ஏதாவது பேசுவாங்க. அப்புறம் - உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கான்னு சொல்லிட்டு போவாங்க.
அப்படி ஒரு நாள் நாங்க மின்தூக்கியில் போயிட்டிருந்தபோது - கூட நாலைஞ்சு பேர் இருந்தாங்க. அதில் ஒரு அம்மா - மேலே சொன்னதையே சொன்னாங்க.
அதுக்கு நான் சொன்னதைக் கேட்டுதான் - அதுக்கப்புறம் அவங்க யாருமே என்னை பாத்து பேசறத நிறுத்திக்கிட்டாங்க. அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு எனக்கு புரியல. நீங்களே நியாயத்தை கேளுங்க.
சரி - நான் என்ன சொன்னேன்னுதானே கேக்குறீங்க? நான் சொன்னது - "ஆமா. அவ என்னை மாதிரி".
*****
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23ம் ஆண்டு விழா அடுத்த மாதம் வருது. விவரங்களுக்கு http://www.fetna.org/ பார்க்கவும். இங்கே வடகிழக்கில் இருக்கும் பதிவர் நண்பர்களை விழாவுக்கு வருமாறும், தன்னார்வலர்களாக செயல்புரிய முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணன் பழமைபேசியை முதல்முறையும், இந்தியாவிலிருந்து வரும் மாண்புமிகு அண்ணன் அப்துல்லா அவர்களை மறுபடியும், பார்க்க ஆவல் கொண்டுள்ளேன். விழாவுக்காக தன்னலம் கருதாமல் உழைக்கும் திரு.விஜய்
மணிவேல் பற்றிய பழமைபேசியின் இடுகை இங்கே.
*****
12 comments:
தேர்வு!
தமிழ்மணத்துலே தலைப்பு காணலியே?
யாரோ தலைப்பை ஆட்டையப் போட்டுட்டாங்க
//
மருத்துவர்கிட்டே கூட்டிட்டு போகலாம்னு நான் அப்பவே சொன்னேனேன்னு எழுந்து வந்த சஹானா அழ ஆரம்பிச்சாங்க.//
:-(
என்ன சொல்லன்னு தெரியலைண்ணே!
நமது வேண்டுகோளை ஏற்று வரும்,
தமிழகப்பதிவர் அண்ணன் அப்துல்லா,
பெரு நாட்டுப் பதிவர் தம்பி பெருசு,
கனடிய நாட்டுப் பதிவர் மோகன்
உள்ளிட்ட சக பதிவர்களுக்கும், விழா முன்னோடிகளில் ஒருவரான உங்களுக்கும் நன்றியோ, நன்றி!!
Naanum fetna vara irukkindren. Angu oru pathivar santhippu nadaththalame..
வாங்க இனியா -> நீங்க யாருன்னு தெரியலியே? தனி மின்னஞ்சல் அனுப்பினீங்கன்னா நல்லாயிருக்கும். விழாவில் உங்க உதவி தேவைப்படுது. நன்றி. chinnappaiyan@gmail.com
என் மகனும் 5 கோல்டன் ஃபிஷ் வாங்கி செய்யும் அதற்கு செய்யும் அலப்பரைகள் தாங்க முடியலை..டேங்கில் ஐஸ் வாட்டர் ஊத்திக் கொண்டே இருக்கிறான்.மீனுக்கு ஜல்பு பிடிக்கப் போகுதுன்னா கேட்க மாட்டேங்கிறான்..
வட அமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன்
மோகன் கந்தசாமி
இளா
பெருசு
புதுகை அப்துல்லா
சின்னப்பையன்
பழமைபேசி
அப்புறம்?? எல்லாம் வந்து வரிசையாப் பேர் குடுங்க.... பதிவர் சந்திப்பை வெச்சிக்கலாம்!!!
சஹானாவுக்கு நான் என்ன வாங்கிட்டு வரணும்னு கேளுங்கண்ணே.
நகைச்சுவை இப்ப ஆரம்பிச்சிடும், அப்ப ஆரம்பிச்சிடும்னு ஒரு 20 நிமிடம் போயிடுச்சு. பொறுமை பொறுமைன்னு எழுந்து போகவிருந்த தங்கமணியை உக்கார வைக்கிறேன்.
//
பல நேரங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது. ரசனையான வரிகள்.
அப்புறம் அந்த அழகு பிரச்சினை. உங்கள் ரெண்டு பேரையும் நேர்ல பாத்தவன்யா நான். இப்பிடியா பக்கத்து ஊட்டுக்காரங்களை கொடுமைப்படுத்துவீங்க.. ROTFL.!!
எப்படி இருக்கீங்க?
I wish to volunteer ni Fetna activities. I am living in Chicago area. How can I participate in activties?
Post a Comment