Thursday, June 17, 2010

வேலையை துவக்குறதுக்கு முன்னாடி என்ன செய்வீங்க?

தினமும் அலுவலகத்திற்கு போனவுடன் வேலையை துவக்குறதுக்கு முன்னாடி என்ன செய்வீங்க? மக்கள்கிட்டே இப்படி கேட்டா அவங்க என்ன சொல்வாங்கன்னு பாத்துட்டு, கூடவே நான் வேலை ‘பாத்த’ இத்தனை (எத்தனை?) வருட அனுபவத்தில் என்ன நடந்ததுன்னு ஒரு கொசுவத்தி...

*****

மக்கள்: காலையில் வந்ததும் நான் என் மேஜையில் இருக்கும் சாமி படங்களை கும்பிட்டுதான் வேலையை துவக்குவேன்.

கொசு: நான் முதன்முதல்லே வேலை செய்த அலுவலகத்தில் ஒரு வயசான மேனேஜர் இருந்தாரு. அவரு அறைக்குள் நுழைந்தாலே கோயிலுக்குள் நுழைந்த மாதிரி - ஏகப்பட்டு சாமிகளின் படங்கள் இருக்கும். காலங்கார்த்தாலே வந்தவுடன், ஒரு அஞ்சு நிமிடம் பூஜை செய்துட்டு - கற்பூரம் காட்டி, பாதாம் முந்திரி இதையெல்லாம் படைச்சிட்டு பிறகு
அதை எங்களுக்கு கொடுப்பாரு. என்னதான் அவசர வேலையிருந்தாலும் பூஜை செய்யாமே வேலையை துவக்க மாட்டாரு.

அப்போ நான் ரொம்ப வீக்கா இருந்தேனா, அதனால் அவரு இல்லாத நேரத்துலே கடவுளுக்காக வெச்சிருந்த பாதாம், முந்திரியெல்லாம் அப்படியே எடுத்து சாப்பிட்டிருந்தேன்னு அவருக்கு இந்த தேதிவரைக்கும் தெரியாது. நீங்களும் சொல்லிடாதீங்க.

*****

மக்கள்: காலங்கார்த்தாலே சூடா ஒரு காபி அடிச்சபிறகுதான் வேலை.

கொசு: இன்னொரு அலுவலகத்துலே 9 மணிக்கு போனவுடனேயே சுடச்சுட காபி கொண்டு வந்து கொடுத்துடுவாங்க. அதுலே சுக்கு அப்புறம் என்னத்தையோ போட்டு கொடுப்பாங்களா, நாள்முழுக்க நாக்கு அரிச்சிக்கிட்டே இருக்கும். அப்படியும் விடாமே ஒரு கையால் (என்) நாக்கை சொறிஞ்சிக்கிட்டு, இன்னொரு கையால் வேலை செய்துட்டிருப்பேன்னா, என் கடமையுணர்ச்சிக்காக பாராட்டு விழா ஏற்பாடு பண்ணவங்க நிறைய பேரு. (அவங்கல்லாம் யாருன்னு இப்ப கேக்காதீங்க!).

*****

மக்கள்: தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விமர்சன வம்புதான் முதலில். அப்புறம்தான் வேலை.

கொசு: சென்னையில் வேலை செய்த அந்த சமயத்தில் 'மெட்டி ஒலி' ரொம்ப பரபரப்பா ஓடிட்டிருந்தது. கூட வேலை செய்த சில நண்ப / நண்பிகளுக்கு காலையில் வந்தவுடனேயே அதைப்பற்றி பேசலேன்னா வேலையே ஓடாது. ஒரு பத்து நிமிடம் குடுப்பா/ம்மா, மின்னஞ்சல் பாத்துட்டு வந்துடறேன்னு சொன்னா, ம்ஹூம் கேட்டாதானே..


மேனேஜருக்காக பயந்து எல்லோரும் தனித்தனியா கிளம்பி போய், காபி குடிக்குற இடத்துலே உக்காந்து 'மெஒ' பத்தி பேசிட்டம்னா.. ஹிஹி.. அடுத்த அரை மணி நேரத்துலே மறுபடி காபி குடிக்குற வரைக்கும் வேலை நல்லா ஓடும்.

*****

மக்கள்: வீட்டுலே செய்திகளை பார்க்க எங்கே நேரமிருக்கு? அதனால், அலுவலகத்தில் முதல் வேலை அதுதான்.

கொசு: இப்படித்தான் ஒரு நண்பன் இருந்தான். ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகளை (கணிணியில்) திறந்து வெச்சிக்கிட்டு செய்திகளை ஒப்பிட்டு, அலசி, படிச்சப்புறம்தான் வேலையை ஆரம்பிப்பான். ஏதாவது ஒரு நாள் பரபரப்பு செய்திகள் ஒண்ணுமில்லேன்னா, அன்னிக்கு முழுதும் ரொம்பவே கவலையா இருப்பான். இப்படித்தான் நிறைய பேரு பரபரப்புக்காகவே சுத்தறாங்க. சரிதானே?

*****

இன்னும் சில பேரு சொந்த மின்னஞ்சல், அப்புறம் சில பேரு ஓய்வறைக்குப் போய் ஒப்பனை ( நானில்லைங்கோ!) - இப்படியாக பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு ஒரு வழியா வேலையை துவக்க உக்காருவாங்க.

*****

அது சரி. இவ்ளோ சொன்னியே, வேலையை துவக்கறதுக்கு முன்னாடி நீ என்ன செய்வேன்னு கேக்குறீங்களா? அட சும்மா கேளுங்க..

சரி கேட்டாச்சா?...

போங்க பாஸு.. அதை யாராவது வேலை செய்யறவங்ககிட்டே போய் கேளுங்க. ச்சின்னப்புள்ளத்தனமா என்கிட்டே கேட்டுக்கிட்டு...

*****

6 comments:

அமுதா கிருஷ்ணா June 18, 2010 at 12:41 AM  

அதானே ச்சின்னப் பையன் வேலை செய்யுமா?

Prathap Kumar S. June 18, 2010 at 4:36 AM  

அதானே வேலை செய்றவங்ககிட்டத்தானே இதெல்லாம் கேக்குனம்...நாம் என்னிக்குப்பண்ணிருக்கோம்.

Thamira June 18, 2010 at 8:32 AM  

எவ்வளவு அடக்கினாலும் ஒரு இடத்திலாவது மென்புன்னகையையும் தாண்டி களுக்கென்று சிரிக்க வைத்துவிடுகிறீர்கள்.

Mahesh June 18, 2010 at 9:43 AM  

அட... என்கிட்டப் போய் கேக்கறீங்களேன்னு பின்னூட்டம் போடணும்னு நினைச்சுக்கிட்டே படிச்சா ... சே... நீங்களே அதையும் எழுதிட்டீங்க :))))))))))

மங்களூர் சிவா June 18, 2010 at 12:34 PM  

/
அது சரி. இவ்ளோ சொன்னியே, வேலையை துவக்கறதுக்கு முன்னாடி நீ என்ன செய்வேன்னு கேக்குறீங்களா? அட சும்மா கேளுங்க..

சரி கேட்டாச்சா?...

போங்க பாஸு.. அதை யாராவது வேலை செய்யறவங்ககிட்டே போய் கேளுங்க. ச்சின்னப்புள்ளத்தனமா என்கிட்டே கேட்டுக்கிட்டு...
/

அதானே!
:))

முத்துலெட்சுமி/muthuletchumi June 20, 2010 at 12:51 PM  

நீங்க..வேலை செய்யும்முன்ன... என்ன செய்வீங்கன்னு தான் கொசுவத்தில யே தெளிவா சொல்லிட்டீங்களே.. உங்கள சுத்தி இருக்கவங்க வேலை செய்ய ஆரம்பிக்கும்முன்ன செய்யரதெல்லாத்தையும் நீங்க செய்துட்டு..அவங்க செய்யர வேலையை மட்டும் நீங்க செய்யமாட்டீங்கன்னு ..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP