Sunday, April 18, 2010

பார்வதியம்மாள், கல்கி பகவான் மற்றும் சாமியார் அனுபவம் ஒண்ணு!!!

ஒரு வயசான பாட்டியை மருத்துவம் பாக்க அனுமதி மறுத்து விமானத்தில் திருப்பி அனுப்பியாச்சு. வழக்கம்போல் தாத்தா இதைப் பத்தி பேசவே மாட்டாரு.

திமுக ஆதரவு பதிவர்கள் மத்திய அரசை திட்டியும் - காங்கிரஸ் ஆதரவு பதிவர்கள் மாநில அரசு/காவல் துறையை திட்டியும் - கூட்டணிக்கு ஆதரவு தரும் பதிவர்கள் இதைப் பத்தி எழுதாமலும் அல்லது இச்செயலுக்கு ஆதரவு தெரிவித்தும் பதிவு எழுதுங்கப்பா. எல்லாரும் நல்லாவே இருங்க!

*****

சென்ற வாரம் இந்தியா செல்வதற்காக JFK விமான நிலையத்தில் அமர்ந்து கமகமவென்று புளி/தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது - ஒருவர் வந்து பக்கத்தில் அமர்ந்தார் - நீங்க தமிழா? சென்னை போறீங்களா? நானும்தான் - அப்படின்னு ஆரம்பிச்சி வளவளன்னு பேச ஆரம்பித்தார். நான் அங்கே இருக்கேன் - என் பசங்க இங்கே இருக்காங்கன்னு சொல்லிக் கொண்டே போனவர் அடுத்து சொன்னதைக் கேட்டு - நான் தங்கமணியிடம் - கிளம்பு, அந்தப்பக்கம் போய் உக்காருவோம். இங்கே வேணாம்னு சொல்லி அடிச்சிக்கோ பிடிச்சிக்கோன்னு ஓடிப்போனோம்.

அப்படி அவர் என்ன சொன்னாரு?

”எங்களுக்கு எல்லாமே கல்கி பகவான்தான். என் பொண்டாட்டிக்கு எல்லாமே அம்மா பகவான்தான். நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? ரெண்டு பேரும் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க. நாங்க வருடாவருடம் அவங்களை பார்ப்பதற்காகவே இந்தியா போவோம். நீங்களும் வர்றீங்களா?”.

ங்கொய்யாலே. அந்த தெலுங்கு சேனல் வீடியோ பாத்தப்புறம் கூடவா இப்படி அலையறீங்கன்னு கேக்க ஆசை. அப்புறம் அவரு என் மனசையும் மாத்திட்டார்னா என்ன பண்றதுன்னு அந்த இடத்தை காலி செய்தோம்.

ஜெய் கல்கி பகவான்! ஜெய் அம்மா பகவான்!!

*****

இதற்கு முன் இடுகையில் சொன்ன நண்பர் - 3ன் பெயர் திரு.அமிர்த கிருஷ்ணன். ஐசிஐசிஐ வங்கியின் வீட்டுக் கடன் வழங்கித் தரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். சென்னையில் உள்ள இவரது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்க. # தர்றேன்.

*****

சிலபல வருடங்களுக்கு முன், நான் வேலை பார்த்த நிறுவனத்தின் சார்பாக - நிறைய கண்காட்சிகளில் மென்பொருள் கடை போடுவோம். அப்படி ஒரு தடவை - ஒரு பிரபல சாமியார் நடத்தும் ஒரு பயிற்சிக்கூட்டத்திற்காக மும்பை போயிருந்தோம். பத்து நாள் விழாவில் பயங்கரக்கூட்டம். கடைசி நேரத்தில் பயணம் செய்ததால் எனக்கு தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு சிபாரிசின் பேரில் அந்த சாமியாரின் சீடர்களின் அறையிலேயே பத்து நாளும் இருக்க வேண்டியதாயிற்று.

ஒரு நாள் அந்த சீடரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் - “இந்த உலகத்தில் எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால் அனைவரும் நம் சகோதர சகோதரிகள்” என்று கூறினார்.

அத்தோடு அவர் நிறுத்தியிருந்தால், இந்த பத்தியை நான் இங்கே எழுதியிருக்கவே மாட்டேன். அப்படி அடுத்து அவர் என்ன சொன்னாரு?

“ நான் சகோதர சகோதரிகள்னு சொன்னது எல்லா மக்களையும்தான். அழகான பெண்களைத் தவிர”.

*****

7 comments:

அக்னி பார்வை April 18, 2010 at 8:04 PM  

அதான் கலிகி பக்வான பார்க்கன்னு சொன்னரே போதையில இருந்துருப்பாரு..

Anonymous,  April 18, 2010 at 10:25 PM  

தாத்தா பேசி கிழிச்சிட்டாலும்....அந்தாளப் பத்தி பேசி memory space'a வீணாக்காதீங்க அண்ணா....

அந்த கண்ணொளிய பாத்தும்,இன்னுமாடா இந்த உலகம் சாமியார நம்புது.....கிரகம்.....

//“ நான் சகோதர சகோதரிகள்னு சொன்னது எல்லா மக்களையும்தான். அழகான பெண்களைத் தவிர”. //

செருப்பால அடிக்கணும் அவன....இவனுகள சொல்லி ஒன்னும் குத்தம் இல்லண்ணா....இந்த பிராடுகள நம்பி போறாங்களே அவங்களா உதைக்கணும்.....

Cable சங்கர் April 18, 2010 at 11:56 PM  

கல்கி மேட்டர்சூப்பர்..

எம்.எம்.அப்துல்லா April 19, 2010 at 1:04 AM  

”எங்களுக்கு எல்லாமே கல்கி பகவான்தான். என் பொண்டாட்டிக்கு எல்லாமே அம்மா பகவான்தான். நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? ரெண்டு பேரும் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க. நாங்க வருடாவருடம் அவங்களை பார்ப்பதற்காகவே இந்தியா போவோம்

//


அமெரிக்காவுலயுமா??? வெளங்கிரும்.

அமுதா கிருஷ்ணா April 19, 2010 at 2:08 AM  

இந்த சாமியார்கள் எல்லாம் வாழ்வது இப்படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் கொடுக்கும் அளவுக்கு அதிகமான பணத்தில் தான். முதலில் கடை விரிப்பது வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தான்...

Thamira April 19, 2010 at 12:59 PM  

“நான் சகோதர சகோதரிகள்னு சொன்னது எல்லா மக்களையும்தான். அழகான பெண்களைத் தவிர”

கொள்கையை நல்ல புரிஞ்ச சீடரா இருக்கும். :-)

சின்னப் பையன் April 19, 2010 at 9:46 PM  

அனைவருக்கும் நன்றி.. மீண்டும் வருக.. :-))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP