தங்கமணி தொலைக்காட்சியில் தோன்றினால்...!!!
இவர்: என் பொண்டாட்டியை தொலைக்காட்சியில் பாட அனுப்பப்போறேன்.
அவர்: ஏன். அவ்ளோ நல்லா பாடுவாங்களா?
இ: சீச்சீ. தொ.கா வை உடனே அணைச்சிடுவேன்ல.
சரி சரி. டென்சனாகாதீங்க. இது பழைய்ய்ய்ய்ய்ய ஜோக்தான். மேலே (கீழே!) படிங்க.
1. தங்ஸ் தொ.கா.யில் பேச ஆரம்பிச்சா, பீப் பீப்னு சத்தம் கேக்க ஆரம்பிச்சிடும். (எல்லாத்தையும் சென்சார் கட் பண்ணிடுவாங்கல்ல.!!).
2. சப்டைட்டில் போட்டாங்கன்னா, அதிலே எப்பவும் '$#$%% #$%% $$###'ன்னுதான் தெரியும். அப்படி என்னதான் பேசுவாங்கன்றது உங்க கற்பனைக்கே.
3. தொ.கா போட்டுட்டு நாம் ஓய்வறைக்கு போயிட்டாலும், தொ.கா நகர்ந்து நகர்ந்து ஓய்வறை கதவுகிட்டே வந்து கத்தும்.. ஐ அம் சாரி... பேசும்.
4. தொ.கா.வில் தோன்றி உங்களுக்கு என்ன பாட்டு போடணும், உங்களுக்கு என்ன நகைச்சுவை காட்சி போடணும்னு கேப்பாங்க. ஆனா, நாம என்ன சொன்னாலும் அதை போடாமே, அவங்களுக்கு பிடிச்சதையே போட்டுக்குவாங்க.
5. தொ.கா ரிமோட்டை அவங்களே எடுத்து வெச்சிக்குவாங்க. நம்மகிட்டே இருந்தா நாமதான் தொ.காவை அணைச்சிடுவோம்ல.
6. தொ.கா சத்தத்தை அதிகரிச்சா, அதிகரிக்கும். குறைச்சா இன்னும் அதிகரிக்கும்.
7. உங்க தொ.கா. வால்யூமை (அந்த ஸ்விட்ச் அவங்க பக்கத்துலேயே இருந்தாலும்) குறைச்சி வைங்கன்னு நம்மை சொல்வாங்க. அப்படியும் நாம கேக்கலேன்னா தொ.கா உள்ளேந்து கரண்டி அனுப்புவாங்க.
8. நிம்மதி எங்கள் சாய்ஸ்... பெப்ஸி எங்கள் சாய்ஸ்.. அப்படின்னு எல்லாமே அவங்க சாய்ஸ்லேயே நிகழ்ச்சிகளை அமைச்சிக்குவாங்க.
இப்படியெல்லாம் தங்கமணிகளைப் பத்தி கண்டபடி சொல்வேன்னு நீங்க எதிர்பார்த்தா... ஐ ஆம் சாரி... Dont put word in my mouths!!!
4 comments:
உங்க வீட்டு தங்கமணி உங்கப் பதிவப் படிக்கமாட்டாங்களோ? இல்ல, இவ்வளவு தைரியமா
போட்ருக்கீங்களே, அதான் கேட்டேன்!
அமெரிக்காவுக்கு ஆட்டோ அனுப்பனுமா???
ஓய்வறையில் போய் உக்காந்தாலும் ஆட்டோல வந்து அடிச்சு தாங்க அவரு பதிவே போட்டிருக்கார்.. இன்னும் அமரிக்காவுக்கு ஆட்டோன்னு பீதியை ஏன் கிளப்பறீங்க...
ஓகே ரகம் பாஸ்.! :-)
Post a Comment