கொலுசு எதுக்காக போடறோம்?
அமெரிக்காவுக்கு வந்த புதிதில் பாப்பாவைக் கூட்டிக்கொண்டு பேருந்து பயணம் செய்வோம். பேருந்தில் பாப்பாவைப் பார்ப்பவர்கள், காலில் உள்ள கொலுசைப் பற்றி கேட்காமல் விடமாட்டார்கள்.
ஒரு நாள் இப்படித்தான் ஒருவர் கேட்டார்:
இது என்ன? மிகவும் அழகாக இருக்கிறதே?
இதன் பெயர் கொலுசு (anklet).
நீங்கள் இந்தியர்தானே? எல்லோரும் இதை அணிவார்களா?
ஆம். இதை எல்லா பெண்களும் அணிவார்கள்.
நீங்களும் இதை அணிந்திருக்கிறீர்களா? மிகவும் அருமையாக இருக்கிறது.
ஆமாம்.
இது இங்கே கிடைக்குமா?
தெரியவில்லை. நாங்கள் இந்தியாவிலிருந்து வாங்கி வந்தோம்.
இதை எதற்கு இந்த பாப்பாவிற்கு போட்டிருக்கிறீர்கள்?
இது எங்கள் வழக்கம். எல்லா பெண்களும் அணிவார்கள்.
பாப்பா எந்த அறையில் / இடத்தில் இருக்கிறது என்று இந்த கொலுசின் சத்தத்தை வைத்தே கண்டு பிடிக்கலாம்தானே? அதற்குத்தான் போட்டிருக்கிறீர்களா?
ம். ஆமாம். அதற்கும்தான்.
தமிழ் நாட்டில், பெண் குழந்தைக்கு கொலுசு போடுவது வழக்கமென்பதால், நாமும் எந்த காரணமும் தெரியாமல் போட்டுவந்தோமே?... ஏதாவது நிஜமான காரணம் இருக்கிறதா என்று யோசித்தாலும் தெரியவில்லை.
ஆனால் என்ன, எங்களுக்கு இப்போது ஒரு புதிய காரணம் கிடைத்து விட்டது. இனிமேல் யார் கொலுசைப் பற்றி கேட்டாலும், பாப்பா எந்த அறையில்/ இடத்தில் இருக்கிறது என்பதை, அந்த சத்தத்தை வைத்து கண்டுபிடிப்பதற்காகப் போட்டிருக்கிறோம் என்று சொல்லிவிடலாம்.
இது எப்படி இருக்கு?
5 comments:
ஆணோ, பெண்ணோ எங்கள் வீடுகளில் குழந்தை பிறந்து 1 அல்லது 11/2 வருடங்கள் வரை காலில் தண்டை காப்பு போடுவோம்.
குழந்தை காலை உதைத்து விளையாடும்போது ஏற்படும் ஒலிக்காக அடிக்கடி சத்தம் செய்ய காலை அசைக்கும். அத்துடன் கால்கள் வலுவாக ஒரு பயிற்சியாகும் என்று சொல்லக் கேள்வி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க புதுகைத் தென்றல்...
தலைவனும் தலைவியும் தனித்திருக்கும்போது குழந்தை அருகில் வந்தால் ஒலிக்கும் அழைப்புமணியோசை கொலுசு என எங்கள் மேனிலைப்பள்ளி தமிழய்யா கூறுவார்.
புதுகைத் தென்றல் சொன்ன கருத்துதான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்..குழந்தை இருக்குமிடம் தெரிவதற்காக என்பதும் சரியானதுதான்.
மிக்க நன்றிங்க அனானி மற்றும் பாச மலர்.
Post a Comment