Wednesday, February 13, 2008

கேப்டன் டிவி - தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்



செய்தி: கேப்டன் டிவி தமிழ்ப் புத்தாண்டில் (ஏப்.14??) துவங்குகிறது. ஏற்கனவே இருக்கும் டிவிகளுக்கும் இதற்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இருக்காது என்ற நம்பிக்கையுடன் ஒரு சிறு கற்பனை:


கேப்டன் டிவியின் தமிழ்ப் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள் - பார்த்து மகிழுங்கள்:

காலை 7 மணிக்கு - வணக்கம் விருத்தாசலம்:

விருத்தாசலம் எம்.எல்.ஏ திரு. விஜயகாந்த் அவர்களுடன் கலந்துரையாடல். தொகுதியில் திரு.விஜயகாந்த் அவர்கள் செய்த சாதனைகளை விளக்குகிறார்.

காலை 8.30 மணிக்கு - சிறப்பு பட்டிமன்றம்:

தேர்தலுக்கு - கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா? நடுவராக திரு. சதீஷ் பங்கேற்று சிறப்பிக்கிறார்.

காலை 10.00 மணிக்கு - புள்ளிராஜாவுடன் பேசுங்க:

புள்ளிவிவர மன்னர் திரு. புள்ளிராஜா பங்கேற்கும் ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி. தொலைபேசியில் அழைக்கும் மக்களின் சந்தேகங்களுக்கு, புள்ளி விவரத்துடன் பதிலளிக்கும் ஒரு அசத்தலான நிகழ்ச்சி.

நண்பகல் 12.00 மணிக்கு - சூப்பர் ஹிட் திரைப்படம்:

கேப்டன் டிவி வரலாற்றிலேயே முதல்முறையாக, திரைக்கு வந்து சில வருடங்களேயான - புத்தம் புதிய திரைப்படம் - ரமணா. பார்த்து மகிழுங்கள்.

மாலை 4.00 மணிக்கு - விளையாடலாம் வாங்க.

"தரையில்" பம்பரம் விடுவது எப்படி? விளக்க வருகிறார் விளையாட்டுத்துறை ஆசிரியர் சி.கவுண்டர் அவர்கள்.

மாலை 5.30 மணிக்கு - ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை:

மக்களுக்கு பிடித்த, பிடிக்காத ஒரு வார்த்தை என்ன? என்று தொலைபேசியில் கேட்கும் நிகழ்ச்சி.

இரவு 7.30 மணிக்கு - சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் திரைப்படம்:

அடுத்த வாரிசு - பார்த்து மகிழுங்கள்.

கேப்டன் டிவியின் அனைத்து புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்த்து, புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்.

புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்குவது - இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும் - தமிழகத்தின் சிறந்த கல்லூரி - ஆண்டாள் அழகர் கல்லூரி.

நேயர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

3 comments:

வடுவூர் குமார் February 13, 2008 at 10:08 PM  

இப்படி தான் எதிர் பார்க்கிறோம்- பொது மக்கள்.
:-)

சின்னப் பையன் February 14, 2008 at 9:23 AM  

ஆமாங்க வடுவூர் குமார். எல்லாமே பொதுமக்கள் விருப்பம்தான்...:-)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP